For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதுபானம் பருகுவதற்கு முன்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

By Ashok CR
|

இன்றைய உலகத்தில், மதுபானத்தை பற்றி முழுமையாக தெரிவதற்கு முன்பாகவே, இளைஞர்கள் அதனை பருகி தன்னிலை மறக்கும் போதையை பெறுகின்றனர். மதுவால் ஒருவர் தன்னிலை மறக்கும் போதையை சுலபமாக பெறுவதற்கு ஒரே காரணமாக விளங்குவது வெறும் வயிற்றில் மதுவை குடிப்பது தான். வெறும் வயிறாக இருக்கும் போது மதுவை பருகினால், அது தன் வேலையை காட்ட தொடங்கி விடும். அதனால் உங்கள் போதை அதிகரிக்கும்.

மதுவை கையில் எடுப்பதற்கு முன், சிறிதளவு உணவையாவது உட்கொண்டிருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் பரிந்துரைக்கிறார்கள். மது குடிப்பதற்கு முன்பாக நீங்கள் உண்ணக்கூடிய சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இப்போது உங்களுக்காக நாங்கள் கூறப்போகிறோம். இவ்வகை உணவுகளை உண்ணும் போது உங்கள் வயிற்றை சுற்றி மெல்லிய உட்புறவுறை உண்டாகும்.

அவசியம் படிக்க வேண்டியவை: மன அழுத்தத்தை நீக்கும் ஆரோக்கியமான உணவுகள்!!!

அதனால் நீங்கள் குடிக்கும் மதுவை வேகமாக செரிக்க வைக்கும். இது தன்னிலை மறக்க செய்யும் போதையை தவிர்க்கும். மறுநாள் காலை ஏற்படும் ஹேங்-ஓவரையும் இந்த உணவுகள் தவிர்க்கும் என்பது இவைகளால் கிடைக்கும் மற்றொரு பயன். கீழ்கூறிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால், ஆரோக்கியமாக இருப்பதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள்.

ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால், அதிகமாக குடிக்கலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பசியுடன் இல்லாமல், வயிறு நிறைந்திருக்கும் போது மதுவை பருகினால் அது பாதுகாப்பானதும் கூட. உணவருந்திய பின் மது பருகினால் அது உங்கள் வயிற்றையும் பாதுகாக்கும். இதனால் உங்கள் குடல் வெந்து போவதும் தடுக்கப்படும். மது குடிக்க விரும்பினால், இதோ இந்த ஆரோக்கியமான உணவுகளை குடிப்பதற்கு முன் உண்ணுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊறுகாய்

ஊறுகாய்

மது குடிப்பதற்கு முன்பு உண்ண வேண்டிய ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று ஊறுகாய். ஊறுகாயில் அளவுக்கு அதிகமான மின் அயனிகளும் உப்புக் கரைசலும் உள்ளதால் அது ஹேங்-ஓவரை தடுக்கும்.

பாதாம்

பாதாம்

குடிப்பதற்கு முன்பு உண்ணக்கூடிய ஆரோக்கியமான உணவுகளில் சிறந்ததாக விளங்குகிறது பாதாம். அதனால் ஒரு கிளாஸ் பீர் குடிப்பதற்கு முன்பு பாதாம்களை உண்ணுங்கள். பாதாம்களில் உள்ள வைட்டமின்கள் உங்கள் வயிற்றுடன் பிணைப்பை உண்டாக்கி தன்னிலை மறக்கும் போதையை தவிர்க்கும்.

சப்பாத்திக் கள்ளி

சப்பாத்திக் கள்ளி

சப்பாத்திக் கள்ளி செடியில் இருந்து எடுக்கப்படும் சாறு, உங்கள் வயிற்றில் மெல்லிய உட்புறவுறையை ஏற்படுத்தும். அதனால் மதுவால் உங்கள் வயிறு எறிவது தடுக்கப்படும். அதனால் மதுவை குடிப்பதற்கு முன் அரை கிளாஸ் சப்பாத்திக் கள்ளி சாற்றை குடியுங்கள்.

ஹம்மஸ்

ஹம்மஸ்

மது பருகும் போது உங்கள் உடலில் உள்ள வைட்டமின் பி குறையும். ஹம்மஸ் என்பது பட்டாணி, எள்ளு, ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை மற்றும் பூண்டு ஆகிவற்றால் செய்யப்படும் பேஸ்ட்டகும். அதில் இயற்கையாகவே வைட்டமின் பி உள்ளதால், ஆரோக்கியமான உணவாக திகழ்கிறது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

வெண்ணெய் பழம்/அவகேடோ

வெண்ணெய் பழம்/அவகேடோ

இந்த பழம் க்ரீம் தன்மையுடன் இருப்பதால் பலருக்கும் இது பிடிப்பதில்லை. இருப்பினும், மது குடிப்பதற்கு முன்பு உண்ணக்கூடிய உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

சீஸ்

சீஸ்

மது குடிப்பதற்கு முன்பு உண்ண வேண்டிய ஆரோக்கியமான, சிறந்த உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது சீஸ். நீங்கள் எவ்வளவு குடித்தாலும் ஹேங்-ஓவர் ஆகாமல் அது தடுக்கும்.

தண்ணீர்விட்டான் கிழங்கு

தண்ணீர்விட்டான் கிழங்கு

தண்ணீர்விட்டான் கிழங்கு என்ற ஆரோக்கியமான உணவில் அமினோ அமிலங்கள் உள்ளது. இந்த அமிலம் அல்கோஹாலை வளர்சிதைமாற்றம் செய்ய உதவும். மேலும் அல்கோஹாலிடம் இருந்து ஈரல் அணுக்களை பாதுகாக்கும். முயற்சி செய்யுங்கள்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை உட்கொண்டால் எரிச்சலை உண்டாக்கும் ஹேங்-ஓவர் ஏற்படமால் தடுக்கும். ஆலிவ் எண்ணெய் குடலை சுற்றி அடர்த்தியான அடுக்கை உண்டாக்கி, நீங்கள் பருகும் மதுவால் உங்கள் வயிறு வெந்து போகாமல் பாதுகாக்கும்.

பால்

பால்

ஒரு கிளாஸ் அல்லது அரை கிளாஸ், நற்பதமான குளிர்ந்த பால் பல மாயங்களை புரிந்திடும். மது குடிப்பதற்கு முன்பு உண்ண வேண்டிய ஆரோக்கியமான உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

பழங்கள்

பழங்கள்

பழங்களில் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் வளமையாக உள்ளது. மேலும் பொட்டாஷியம் கூட அதிகமாக உள்ளது. அதனால் உடலின் நீர்ச்சத்து சரிசமமாக திகழ்ந்திட இது பெரிதும் உதவுகிறது. ஹேங்-ஓவரை தடுக்க இதுவும் ஒரு சிறந்த வழியாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Eat Before Drinking Alcohol

These foods to eat before drinking alcohol will help prevent a hangover. If you love to drink, then here are some of the foods to eat before drinking.
Desktop Bottom Promotion