Latest Updates
-
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
பீர் குடிச்சா தொப்பை போடும்.. சாதம் எடையை அதிகரிக்கும்.. இதெல்லாம் உண்மையா? டாக்டர் என்ன சொல்றாரு பாருங்க..
Food Myths: மனிதன் உயிர் வாழ உணவு மிகவும் இன்றியமையாதது. இயற்கையானது மனிதன் உயிர் வாழ்வதற்காகவே ஏராளமான உணவுகளை நமக்கு வழங்கியுள்ளது. ஆனால் நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் பழக்கங்கள் குறித்து யாரோ ஒருவர் ஏதோ ஒரு சூழ்நிலையில் வாயில் வந்ததைக் கூற, அதை நம்பிக் கொண்டு இன்று வரை உண்மையாக மக்கள் கருதி நினைத்துக் கொண்டிருகின்றனர்.
இப்படியான கட்டுக்கதைகள் மக்களிடையே ஏராளமாக உள்ளன. அதில் சாதம் சாப்பிட்டால் எடை போடும், சர்க்கரை நோயாளிகள் சாக்லேட் சாப்பிடக்கூடாது போன்றவை குறிப்பிடத்தக்கவை. நீங்களும் இப்படியான கட்டுக்கதைகளை உண்மை தெரியாமல் இன்னும் நம்பிக் கொண்டிருந்தீர்களா? டாக்டர் வைசாலி ரவிசங்கர் இன்னும் பலர் நம்பிக் கொண்டிருக்கும் உணவு கட்டுக்கதைகளுக்கு பின்னிருக்கும் உண்மை என்னவென்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது என்னவென்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

கட்டுக்கதை 1: பீர் குடிச்சா தொப்பை போடுமா?
இதுக்குறித்து டாக்டர் கூறியதாவது, "பீர் குடித்தால் கண்டிப்பாக தொப்பை போடாது. ஆனால் ஒரே நாளில் 5-6 பாட்டில் பீரைக் குடித்தால், தொப்பை மட்டுமல்ல, உடலில் நிறைய ஆரோக்கிய பிரச்சனைகள் வரத் தொடங்கும். எனவே எவ்வளவு ஆல்கஹாலை குடித்தாலும், அது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல." என்று கூறினார்.
கட்டுக்கதை 2: சோயா சாப்பிடுவதால் ஆண்களுக்கு மார்பகம் வளருமா?
இதுக்குறித்து டாக்டர் கூறியதாவது, "இது முற்றிலும் ஒரு கட்டுக்கதை தான். சோயாவில் நல்ல வளமான அளவில் புரோட்டீன் உள்ளது. ஆனால் அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியம்." என்று கூறினார்.
கட்டுக்கதை 3: சாதம் சாப்பிடுவதால் உடல் பருமன் ஆகுமா?
இதுக்குறித்து டாக்டர் கூறியதாவது, "நிச்சயம் இல்லை. சாதத்திற்கு பதிலாக சப்பாத்தி சாப்பிடுவதும் ஒன்று தான். ஆனால் சாதத்துடன் என்னென்ன சேர்த்து சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை கவனிக்க வேண்டும் மற்றும் சமச்சீரான உணவை உண்ண வேண்டும்." என்று கூறினார்.
கட்டுக்கதை 4: புரோட்டீன் அதிகமா சாப்பிட்டால் சிறுநீரகம் சேதமடையுமா?
இதுக்குறித்து டாக்டர் கூறியதாவது, "கண்டிப்பாக இல்லை. ஆனால் இது யாருக்கு பிரச்சனையாகும் என்றால் ஏற்கனவே சிறுநீரக பிரச்சனையைக் கொண்டவர்களுக்கு தான் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது." என்று கூறினார்.
கட்டுக்கதை 5: சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாக்லேட் சாப்பிடக்கூடாதா?
இதுக்குறித்து டாக்டர் கூறியதாவது, "சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாக்லேட் சாப்பிடலாம். ஆனால் அது டார்க் சாக்லேட்டாக இருக்க வேண்டும். அதுவும் கண்டிப்பாக அந்த சாக்லேட்டில் 80%-க்கும் அதிகமான அளவில் கொக்கோ இருக்க வேண்டும். ஆய்வுகளிலும் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் சர்க்கரை நோயின் அபாயம் குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications