Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
கார் விபத்து நடக்கும் போது எந்த மாதிரியான முதலுதவி சிகிச்சைகளை செய்யணும் தெரியுமா?
கார் விபத்துகள் என்பது திடீரென ஏற்படக் கூடியவை. இதை நீங்கள் எளிதில் கணிக்க இயலாது. ஏனெனில் அது எப்போது நடக்கும் என்பது நம்மளுக்கு தெரிவதில்லை. இருப்பினும் கார் விபத்துகள் ஏற்படும் போது நாம் செய்யக் கூடிய சில முதலுதவி சிகிச்சைகள் பல உயிர்களை காப்பாற்ற உதவுகிறது.
கார் விபத்துகளில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் உடனே முதலுதவி சிகிச்சை செய்வது மிகவும் அவசியம். அதே மாதிரி உங்கள் கார்களிலும் முதலுதவி சிகிச்சை விஷயங்களை வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். முதலுதவி பெட்டிகளில் உங்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை வைத்துக் கொள்ளலாம்.

இந்த மருந்துப் பொருட்கள் உங்கள் காயங்களை எளிதில் குணப்படுத்த உதவுகிறது. மேலும் ஒரு உயிரை நீண்ட நேரம் தாங்கிப் பிடிக்க இந்த முதலுதவி சிகிச்சைகள் கை கொடுக்கும். எனவே கார் விபத்து நடக்கும் போது எந்த மாதிரியான முதலுதவி சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிந்து கொள்வோம்.
ஆபத்து மற்றும் காயங்களை சரிசெய்ய வேண்டும்
விபத்து ஏற்பட்ட உடன் பாதிக்கப்பட்டவரின் காயங்களை முதலில் ஆராய வேண்டும். இரத்தப்போக்கு அல்லது பலத்த காயங்கள் இருந்தால் உடனே சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் அதிகப்படியான இரத்த போக்கு, பலவீனம், தலைச்சுற்றல், அதிர்ச்சி, சுவாசிப்பதில் சிரமம் போன்றவை மரணத்தை கூட ஏற்படுத்த வழி வகுக்கும்.
இரத்த இழப்பு ஏற்படும் போது அதை துணியால் அழுத்தி பிடியுங்கள். தலையில் காயம் ஏற்பட்டால் ஒரு தடினமான துணியால் தலையை கட்டி விடுங்கள். காயமடைந்த இடத்தில் இரத்த ஓட்டத்தை தடுக்க காயம் பட்ட இடத்தை இதய மட்டத்திற்கு மேலே உயர்த்தி பிடிக்க வேண்டும். அவர்களின் கால் மற்றும் கைகளை சரியான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உடைந்த கண்ணாடிகள் மற்றும் உலோகங்கள் இருந்தால் பாதுகாப்பான இடத்தில் அவர்களை உட்கார வைக்கலாம். அவர்களை சுற்றி இருக்கும் கண்ணாடி துண்டுகளை அகற்ற முற்படலாம். உடனடியாக மருத்துவ உதவி எண்ணை அழைக்கலாம்.
விபத்து ஏற்பட்ட நபருக்கு உணர்வு ரீதியான பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்
விபத்து ஏற்பட்ட நபருக்கு உணர்வு ரீதியான பாதிப்பு இருந்தால் உடனே மருத்துவ உதவியை நாடுங்கள். அவரின் அசைவுகளின் அடிப்படையில் அவர் சுய நினைவுடன் இருக்கிறாரா என்பதை அறிந்து கொள்ளுங்கள். பாதிக்கப்பட்டவரை அணுகும் போது எப்பொழுதும் கவனமாக இருப்பது அவசியம். பாதிக்கப்பட்டவரை அதிர்ச்சியில் இருந்து மீட்டெடுக்க உதவி செய்யுங்கள்.
காயமடைந்தவரை நகர்த்த வேண்டாம்
காயமடைந்தவரை நகர்த்தாதீர்கள். ஏனெனில் அவருக்கு மோசமான உள் காயங்கள் ஏற்பட்டு இருக்கலாம். எனவே மருத்துவ உதவி வரும் வரை அவரை நகர்த்தாதீர்கள். அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள்.
சுவாசப் பிரச்சினை இருக்கிறதா என்பதை கவனியுங்கள்
விபத்தில் பாதிக்கப்பட்டவர் அடிக்கடி சுயநினைவை இழக்க நேரிடலாம். எனவே உங்களை கையை அவரது நெற்றியில் வைத்து மெதுவாக தலையை பின்னோக்கி சாய்த்து சுவாசப் பாதையை சரிபாருங்கள்.
உங்கள் இரண்டு விரல்களால் அவர்களின் கன்னத்தை உயர்த்தி உங்கள் கன்னத்தை அவரது வாய்க்கு அருகில் வைத்து அவர் சுவாசிப்பதை கவனியுங்கள். அவர் நன்றாக சுவாசிக்கிறாரா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
இதயத்தை மீண்டும் துடிக்க செய்ய உதவும் CPR சிகிச்சை உங்களுக்கு தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் உதவி கேட்கலாம் அல்லது மருத்துவ உதவியை நாடலாம்.
தேவையான உதவியை மட்டுமே கொடுங்கள்
உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு மட்டுமே முதலுதவி வழங்குவது நல்லது. உடைந்த எலும்புகள் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க மருத்துவ உதவியை நாட வேண்டும். இரத்த போக்கு வராத வகையில் சிகிச்சை அளிக்கலாம்.
பாதிக்கப்பட்ட நபருக்கு ஆறுதல் அளிக்கவும்
* திடீரென எதிர்பாராத விதத்தில் விபத்து ஏற்படும் போது பாதிக்கப்பட்ட நபர் அதிர்ச்சிக்கு உள்ளாக நேரிடுகிறது. எனவே பாதிக்கப்பட்ட நபரை அதிர்ச்சியில் இருந்து விடுவிக்க அவருக்கு ஆறுதல் அளிப்பது அவசியம்.
* அந்த நபரை படுக்க வைத்து காலை உயர்த்தி வைக்க வேண்டும். இதன் மூலம் மூளைக்கு இரத்த ஓட்டம் செல்லும்.
* பாதிக்கப்பட்ட நபருக்கு சுவாசம் இல்லை என்றால் உடனே CPR சிகிச்சை செய்ய வேண்டும்.
* இறுக்கமான ஆடைகள் அணிந்து இருந்தால் தளர்த்தி அவர்களை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.
* வெயிலில் அவதிப்பட்டால் நிழல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை செய்யலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











