அத்திப்பழம் ஊற வைத்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?

Figs Water Benefits In Tamil: நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுபவரா? உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க ஆரோக்கியமான பழக்கங்களை மேற்கொள்வீர்களா? முக்கியமாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்களா? அப்படியானால் எளிய வழியில் உடல் எடையைக் குறைக்கவும், உடல் ஆரோக்கியத்தை சிரமப்படாமல் மேம்படுத்தவும் அத்திப்பழம் ஊற வைத்த நீரைக் குடியுங்கள்.

ஆம், அத்திப்பழம் ஊற வைத்த நீரானது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. அதுவும் அந்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அத்திப்பழமானது கோள வடிவில் இருக்கும் மற்றும் அதனுள் மொறுமொறுப்பான சிறு விதைகள் இருக்கும்.

Figs Water Benefits: Top 7 Benefits Of Having Figs/Anjeer Water In Morning In Tamil

தோற்றத்தில் வித்தியாசமாக காணப்படும் சிறு அத்திப்பழத்தில் நாம் நினைத்திராத அளவில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. அத்திப்பழத்தை நற்பதமாகவோ அல்லது உலர்ந்த வடிவிலோ உட்கொள்ளலாம். ஆனால் அதில் நற்பதமான அத்திப்பழம் குறிப்பிட்ட மாதங்களில் தான் கிடைக்கும். உலர்ந்த அத்திப்பழமோ ஆண்டு முழுவதும் கிடைக்கும்.

இப்படிப்பட்ட அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடாமல், 2 அத்திப்பழத்தை எடுத்து இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீருடன் அத்திப்பழத்தை சாப்பிட்டால், இருமடங்கு நன்மைகளைப் பெறலாம். இப்போது அத்திப்பழம் ஊற வைத்த நீரைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

1. இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்

அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், அத்திப்பழத்துடன் அந்த நீரையும் குடிக்கும் போது, அது இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும். பல்வேறு ஆய்வுகளில் அத்திப்பழத்தில் உள் குளோரோஜெனிக் அமிலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. எனவே டைப்-2 சர்க்கரை நோயாளிகள் அத்திப்பழ நீரை குடிக்கும் போது, இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

2. மலச்சிக்கல் தடுக்கப்படும்

கடுமையான மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், அதிலிருந்து உடனடி நிவாரணத்தைப் பெற விரும்பினால் அத்திப்பழ நீரைக் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஏனெனில் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இந்த பழம் ஊற வைத்த நீருடன், அந்த பழத்தையும் உட்கொள்ளும் போது, மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையே வராது.

3. எடை இழப்புக்கு உதவும்

அத்திப்பழம் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரிவதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உடல் எடையைக் குறைக்க நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இந்த நார்ச்சத்து அத்திப்பழத்தில் போதுமான அளவில் உள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர் காலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழம் ஊற வைத்த நீரைக் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

4. இரத்த அழுத்தம் குறையும்

அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை தடுப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் அத்திப்பழ நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

5. இதய ஆரோக்கியம் மேம்படும்

அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி புரிகின்றன. ஒருவரது இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். எனவே அத்திப்பழம் ஊற வைத்த நீரைக் குடித்து வந்தால், இதய நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.

6. இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்

அத்திப்பழத்தில் உடலுறுப்புக்கள் செயல்பட தேவையான அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் ஏரளமாக உள்ளன. அதுவும் ஜிங்க், மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சத்துக்கள் அதிகமாக உள்ளன. ஆகவே இனப்பெருக்க மண்டலம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கவும், மாதவிடாய் கால பிரச்சனைகளைத் தடுக்கவும் பெண்கள் அத்திப்பழ நீரைக் குடிப்பது மிகவும் நல்லது.

7. சரும ஆரோக்கியம் மேம்படும்

அத்திப்பழ நீரை தினமும் காலையில் குடித்து வந்தால், அது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் திறம்பட மலத்தின் வழியாக வெளியேற்றுகிறது. உடலினுள் நச்சுக்கள் இல்லாவிட்டால், சரும ஆரோக்கியம் மேம்படுவதோடு, சருமம் அழகாகவும் பிரச்சனைகளின்றியும் இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, August 30, 2023, 11:50 [IST]
Desktop Bottom Promotion