Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
நீங்க போட்டோ எடுக்கும் போது இந்த அறிகுறி இந்த உங்க கண்ணுல புற்றுநோய் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
Signs of Eye Cancer: புற்றுநோயின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது சில சமயங்களில் மரணத்தைத் தவிர்த்து உங்களைக் காப்பாற்றும். புற்றுநோய் பல்வேறு உடல் பாகங்களில் ஏற்படக்கூடும். புற்றுநோய்கள் பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது, அவற்றில் சில பொதுவானது, சில அறிகுறிகள் அசாதாரணமானது.
நம்முடைய கண்களில் கூட புற்றுநோய் வரக்கூடும் என்பது பலரும் அறியாததாகும். ஒரு அரிய வகை கண் புற்றுநோயின் அறிகுறி புகைப்படம் எடுக்கும்போது வெளிப்படலாம். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, புகைப்படம் எடுக்கும்போது கண்ணில் வெள்ளை நிற பிரதிபலிப்பு ரெட்டினோபிளாஸ்டோமாவின் அறிகுறியாக இருக்கலாம்.

ரெட்டினோபிளாஸ்டோமா என்றால் என்ன?
ரெட்டினோபிளாஸ்டோமா என்பது விழித்திரையில் ஏற்படும் ஒரு வகை கண் புற்றுநோயாகும். இது பொதுவாக இளம் குழந்தைகளில் காணப்படுகிறது, இருப்பினும், இது எந்த வயதினரையும் பாதிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. ரெட்டினோபிளாஸ்டோமா ஒன்று அல்லது இரண்டு கண்களையும் பாதிக்கலாம்.
போட்டோ எடுக்கும்போது தோன்றும் அறிகுறிகள்
இந்த கண் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளில், ஃபிளாஷ் போட்டு புகைப்படம் எடுத்தப் பிறகு, சிவப்பு நிறத்தை விட, கண்மணியில் வெள்ளை பிரதிபலிப்பு ஏற்படுவதாகும். பாதிக்கப்பட்ட விழித்திரையின் வடிவத்தில் மாற்றம் மற்றும் பார்வை குறைதல் ஆகியவை மற்ற பொதுவான அறிகுறிகளாகும்.
இந்த வகை புற்றுநோய் குழந்தைகளுக்கு மிகவும் பொதுவானது என்பதால், அவர்கள் இந்த அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் கடினமாகும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் குழந்தை பாதிக்கப்பட்ட கண்ணை தொடர்ந்து தேய்த்தால், நீங்கள் அவர்களின் கண்களை கண்காணிக்க வேண்டும். அவர்களின் பாதிக்கப்படாத கண்கள் மறைக்கப்படும்போது அவர்கள் பார்க்க மிகவும் சிரமப்படலாம்.
மற்ற அறிகுறிகள்
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளைத் தவிர, லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கூடுதல் அறிகுறிகளைப் பரிந்துரைக்கிறது. வெவ்வேறு திசையில் உள்ள கண்கள், கண்ணின் வண்ணப் பகுதி (கருவிழி) நிறம் மாறுதல், கண்ணைச் சுற்றி வீக்கம், கட்டுப்பாடற்ற கண் அசைவுகள் மற்றும் ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் வலி ஆகியவை இதில் அடங்கும்.
டாக்டரை எப்போது பார்க்க வேண்டும்?
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தால் அல்லது உங்கள் குழந்தைகளிடம் கண்டால், சரியான நோயறிதலுக்காக மருத்துவரை அணுகுவது அவசியம். கோரொய்டல் மெலனோமாஸ் எனப்படும் ஒரு வகை கண் புற்றுநோய் குறித்து எச்சரிக்கையாக இருப்பதும் முக்கியம்.
கோரொய்டல் மெலனோமாக்கள் என்றால் என்ன?
கோரொய்டல் மெலனோமாக்கள் பொதுவாக விழித்திரைக்கு பின்னால் இருக்கும் கோரொய்டில் கண்ணின் பின்புறத்தில் ஏற்படும். கான்ஜுன்டிவா (கண்ணின் முன்) மற்றும் பார்வை நரம்பு போன்ற கண்ணின் மற்ற பகுதிகளிலும் மெலனோமாக்கள் ஏற்படலாம்.
கோரொய்டல் மெலனோமாக்களின் இருப்பிடத்தைப் பொறுத்து ஒருவர் அறிகுறிகளை அனுபவிக்கலாம் அல்லது உணராமலும் இருக்கலாம். இருப்பினும், கவனிக்க வேண்டிய பொதுவான அறிகுறிகளில் பார்வை குறைதல், வெளிச்சத்தை பார்த்து கண்கள் கூசுதல் போன்றவை அடங்கும்.
இந்த அறிகுறிகள் பல கண் தொடர்பான பிரச்சனைகளால் ஏற்படக்கூடும் என்பதால், சுய-நோயறிதலைச் செய்யாமல் இருப்பது மற்றும் உங்கள் நிலையைக் கண்டறிவதற்கு உங்கள் மருத்துவரை அணுகுவது முக்கியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
