Latest Updates
-
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...!
இடது கை வலியுடன் இந்த அறிகுறிகளும் தெரியுதா? அப்ப உடனே டாக்டரை பாருங்க.... எச்சரிக்கும் இதய நிபுணர்...
Left Arm Pain: தற்போதைய பெருகி வரும் நோய்களைப் பார்க்கும் போது, நமது உடலில் சிறு வலி ஏற்பட்டாலே மிகவும் பயமாக உள்ளது. அதுவும் தற்போது பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து எந்நேரமும் கீபோர்டை தட்டியவாறு வேலை செய்வதால், கை வலி, கழுத்து வலி, தலை வலி, கண் வலி என்று பல வலிகளை சந்திக்கின்றனர்.
குறிப்பாக கைகளில் வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதுவும் இடது கையில் வலியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். இப்படிப்பட்ட இடது கை வலிக்கான காரணங்களைப் பற்றி அடையாரில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் சென்டரின் இடையீட்டு இதயவியல் சிகிச்சையின் முதுநிலை நிபுணர் டாக்டர். மதன் மோகன் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்துள்ளார்.

இடது கை வலி என்பது, தோள்பட்டையில் தொடங்கி, விரல்கள் வரை பரவி நீடிக்கின்ற வலி அல்லது அசௌகரியத்தை குறிக்கிறது. இந்த வலி, விட்டு விட்டு வருவதாக அல்லது நிலையானதாக, கூர்மையானதாக அல்லது மந்தமானதாக இருக்கக்கூடும்; வேறுபிற அறிகுறிகளுடன் சேர்ந்து வெளிப்படக்கூடும். சிறிய காயங்களிலிருந்து, கடுமையான மருத்துவ அவசரநிலைகள் வரை பல்வேறு வகையான காரணங்கள் மற்றும் பாதிப்புகளினால் இந்த வலி உருவாகக்கூடும்.
மாரடைப்பின் அறிகுறி
மாரடைப்புக்கு ஒரு பொதுவான அறிகுறியாக, இடது கையில் தோன்றும் வலி இருக்கிறது. இதயம் மற்றும் கையிலிருந்து நரம்புகள் மூளையின் ஒரே பகுதிக்கு சமிக்கைகளை அனுப்புவதால், வலியின் துல்லியமான ஆதாரமூலத்தை அடையாளம் காண்பதை மூளைக்கு கடினமாகுவதால் இது நிகழ்கிறது.
கீழ்வரும் அறிகுறிகளுள் ஏதாவது ஒன்று உங்களுக்கு இருக்குமானால், உடனடியாக மருத்துவ சிகிச்சையை தேடிப் பெறுவது அவசியம்:
* மார்பில் அசௌகரியம், குறிப்பாக சில நிமிடங்களுக்கும் அதிகமாக இது நீடிக்குமானால் அல்லது குறைந்த காலஅளவிற்குள் திரும்பத்திரும்ப ஏற்படுமானால். மார்பில் அழுத்தம், இறுக்கம், அடைப்பு உணர்வு அல்லது எரியும் உணர்வு போல இது உணரப்படலாம்.
* முதுகு, கழுத்து, தாடை அல்லது கீழ்ப்புற அடிவயிறு போன்ற மேற்புற உடலின் பிற பகுதிகளில் வலி, மரத்துப்போன உணர்வு அல்லது அசௌகரியம்.
* மார்பு வலியுடன் அல்லது மார்பு வலி இல்லாமல் மூச்சுவிட சிரமம்.
* குமட்டல் அல்லது வாந்தியெடுத்தல்.
* லேசான தலைசுற்றல்.
* திடீரென உடல் வியர்த்து குளிர்தல் அல்லது சூடாக உணர்தல்.
மார்பு அசௌகரியம் என்பது, மாரடைப்பின் மிகப்பொதுவான ஒரு அடையாளமாக இருக்கிறது. பெண்களுக்கு வழக்கத்திற்கு மாறான களைப்பு, உறங்குவதில் தொந்தரவுகள், கலக்கம் மற்றும் பதற்றம் மற்றும் செரிமானமின்மை போன்றவை கூடுதல் அறிகுறிகளாக இருக்கக்கூடும். இந்த அறிகுறிகளும், அடையாளங்களும் உங்களுக்கு தோன்றுமானால், அவைகளை அடையாளம் கண்டு உடனடியாக மருத்துவ சிகிச்சையை தேடிப்பெறுவது இன்றியமையாதது.
ஆஞ்சினா
இடதுகையில் தோன்றும் அனைத்து வலிகளும் மாரடைப்பு தொடர்பானதாக இருப்பதில்லை. போதுமான ஆக்சிஜன் இதயத்திற்கு கிடைக்காத காரணத்தால் மார்பு வலியை விளைவிக்கும் ஆஞ்சினா (Angina)/மூச்சு முட்டுதல் போன்ற உணர்வு என்ற மற்றொரு பாதிப்பு நிலையும் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆஞ்சினா என்பது ஒரு மாரடைப்பு அல்ல. ஆனால், இதன் பின்னணியில் ஒரு இதயப் பிரச்சனை இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. பெரும்பாலான நேரங்களில் கரோனரி தமனிகள் (coronary arteries) குறுகலாகியிருப்பதால் இது ஏற்படுகிறது.
ஆஞ்சினாவின் இரு வகைகள்:
* நிலையான ஆஞ்சினா (Stable angina) என்பது, கடின உடல் உழைப்பு / பயிற்சி அல்லது உணர்வுரீதியான அழுத்தத்தின் போது ஏற்படுகிறது. ஓய்வெடுப்பதன் மூலம் அல்லது நைட்ரோகிளிசரின் போன்ற மருந்துகளை உட்கொள்வதன் வழியாக இதை நிர்வகிக்கலாம்.
* நிலையற்ற ஆஞ்சினா (Unstable angina) என்பது, முன்கணிக்க இயலாதது; ஓய்வில் இருக்கும் போது கூட இது நிகழக்கூடும். மாரடைப்பு ஏற்படுவதற்கான மிக அதிக ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இதற்கு உடனடியான மருத்துவ கவனிப்பு அவசியம்.
பிற காரணங்கள்
இழைமப்பையழற்சி (bursitis), தசைநாண் அழற்சி (tendonitis), சுழற்சி சுற்றுப்பட்டை கிழிசல்கள் (rotator cuff tears), குடலிறக்க வட்டுகள் (herniated disks) மற்றும் எலும்பு முறிவுகள் (fractures) போன்ற எலும்புத்தசை காயங்களாலும் இடது கை வலி உருவாகலாம்.
* இழைமப்பையழற்சி (Bursitis) என்பது, எலும்புகள் மற்றும் மென்திசுக்களுக்கு மெத்தை போல தாங்குகின்ற, திரவம் நிறைந்த உறையில் ஏற்படும் அழற்சியாகும். பெரும்பாலான நேரங்களில் அளவுக்கு அதிக பயன்பாடு அல்லது நேரடி காயத்தின் காரணமாக இது நிகழ்கிறது.
* தசைநாண் அழற்சி (Tendonitis) என்பது, தசைநாண்களின் வீக்கத்தை குறிக்கிறது; விளையாட்டு வீரர்கள் மற்றும் இசைக்கலைஞர்களிடம் பொதுவாக காணப்படும் இது, திரும்பத் திரும்ப தசைநாண்களைப் பயன்படுத்துவதால் பொதுவாக நிகழ்கிறது.
* சுழற்சி சுற்றுப்பட்டை கிழிசல்கள் (Rotator cuff tears) அளவுக்கதிக பயன்பாடு அல்லது காயத்தின் காரணமாக தோள்பட்டையைச் சுற்றியுள்ள தசைகள் மற்றும் தசைநாண்களுக்கு ஏற்படும் சேதத்தால் இது உருவாகிறது.
* குடலிறக்க வட்டுகள் (Herniated disks) என்பது, முதுகுத்தண்டின் முதுகெலும்பு கிழிசல்களுக்கிடையே உள்ள குஷன் போன்ற வட்டுகள், அவைகளுக்கு அருகில் உள்ள நரம்புகளை அழுத்துவதால் கையில் வலி அல்லது மரத்துப்போகும் உணர்வை விளைவிக்கிறது.
* எலும்பு முறிவுகள் அல்லது உடைந்த எலும்புகளால் கடுமையான வலி, உருக்குலைவு மற்றும் வீக்கம் ஏற்படும் என்பதால், இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அவசியமாக இருக்கும்.
சிகிச்சைகள்
இடதுகை வலியை நிர்வகிப்பதற்கு ஆரம்ப நிலையிலேயே நோயறிதல் சோதனை செய்வதும், சிகிச்சை பெறுவதும் மிக முக்கியமானது. மாரடைப்பு அல்லது தீவிரமான இதய பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்துவதே இதில் மிக முக்கிய நடவடிக்கையாகும். இரத்த உறைக்கட்டிகளை கரைப்பதற்கு மருந்துகள் அல்லது கடுமையான நாள அடைப்புகளை நீக்குவதற்கு அறுவை சிகிச்சைகள் ஆகியவை மாரடைப்புக்கான சிகிச்சைகளுள் உள்ளடங்கும். ஆஞ்சினா எனப்படும் மார்பு வலிக்கு நைட்ரோகிளிசரின், கால்சியம் சேனல் பிளாக்குகள் மற்றும் பீட்டா - பிளாக்கர்கள் போன்ற மருந்துகள் உதவக்கூடும்.
எலும்புதசை காயங்களுக்கான சிகிச்சை முறைகளில் வலி நிவாரணி மருந்துகள், ஓய்வு, பாதிக்கப்பட்ட பகுதியை நிலையாக வைத்திருத்தல், உடல்ரீதியான சிகிச்சை அல்லது அறுவைசிகிச்சை ஆகியவை இடம்பெறக்கூடும். வலிக்கான மிகச்சரியான காரணத்தை தீர்மானிக்கவும். பொருத்தமான சிகிச்சையைப் பெறுவதற்கும் ஒரு மருத்துவரை கலந்தாலோசிப்பது அத்தியாவசியமாகும்.
இடதுகை வலியின் தீவிரத்தன்மை பற்றி தெளிவாக அறிந்திருப்பது மிக முக்கியம். அவசரமாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுகின்ற, குறிப்பாக இதயநாள பிரச்சனைகளோடு தொடர்புடைய அறிகுறிகள் மற்றும் அடையாளங்களை ஒருவர் அவசியம் அறிந்திருக்க வேண்டும். குறித்த காலஅளவுகளில் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது மற்றும் இதய நோய்க்கான இடர்காரணிகளின் மேலாண்மை போன்ற வருமுன் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது தீவிரமான பாதிப்பு விளைவுகளுக்கான சாத்தியத்தை கணிசமாக குறைக்கக்கூடும்.
முடிவு
இறுதியாக கூற வேண்டுமானால், மாரடைப்பு அல்லது ஆஞ்சினாவின் ஒரு அறிகுறியாக இடதுகை வலி இருக்கக்கூடும் என்றாலும், இழைமப்பையழற்சி, தசைநாண் அழற்சி, சுழற்சி சுற்றுப்பட்டை கிழிசல்கள், குடலிறக்க வட்டுகள் மற்றும் எலும்பு முறிவுகள் போன்ற எலும்புதசை காயங்களாலும் இடது கை வலி உருவாகலாம். மார்பு வலி, மூச்சுவிட சிரமம், குமட்டல் அல்லது கிறுகிறுப்பு போன்ற அறிகுறிகளோடு சேர்ந்து இடதுகை வலி இருக்குமானால், மருத்துவ கவனிப்பை உடனடியாகப் பெறுவது இன்றியமையாதது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











