Latest Updates
-
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
ஆந்திராவின் அட்டகாசமான வெஜ் புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ள பெண் மனைவியாக கிடைத்த ஆண்கள் உலகிலேயே அதிர்ஷ்டசாலியாம் -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 03 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்குமாம் -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்... -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
இங்கிலாந்தில் அதிவேகமாக பரவும் கொரோனாவின் புதிய மாறுபாடு: அதன் அறிகுறிகள் என்ன? இந்தியாவில் உள்ளதா?
Eris or EG.5.1: என்ன தான் தடுப்பூசியால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டாலும், கொரோனா உருமாற்றமடைவது இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை.
கொரோனா வைரஸ் ஆரம்ப காலத்தில் பரவத் தொடங்கியதில் இருந்து, இன்று வரை பலவாறு உருமாற்றமடைந்து, ஏராளமான உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒருவழியாக இந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலகின் பல நாடுகளும் அதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறிந்து, அந்நாட்டு மக்களுக்கு தடுப்பு மருந்துகளை செலுத்தி வந்தது.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் ஒரு புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்த EG.5.1 மாறுபாடானது ஓமிக்ரான் பரம்பரைச் சேர்ந்தது மற்றும் இது அசல் கோவிட்-19 வைரஸை விட வேகமாக பரவக்கூடியது மற்றும் பரவியும் வருகிறது. இந்த புதிய வகை கோவிட் வைரஸிற்கு எரிஸ் (Eris) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் முதன் முதலாக இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்தில் பதிவாகும் ஏழு புதிய கோவிட் வழக்குகளில் ஒரு வழக்கு எரிஸ் தொற்றாக இருப்பதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனமானது (UKHSA) தெரிவித்துள்ளன.
மேலும் இந்த புதிய கோவிட்-19 மாறுபாடு இங்கிலாந்தில் இரண்டாவது பெரிய விகாரமாக மாறியுள்ளது மற்றும் இந்த மாறுபாடு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளிலும் பரவி வருகிறது.
எனவே இம்மாதிரியான சூழ்நிலையில் வல்லுநர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் இது மற்ற மாறுபாடுகளை விட வேகமாக பரவுவதால், மற்றொரு பெரிய அலையைத் தூண்டும் திறன் கொண்டதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
முதன்முதலாக எரிஸ் கோவிட் மாறுபாடு எப்போது கண்காணிக்கப்பட்டது?
இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் (UKHSA) கூற்றுப்படி, முதன்முதலாக இந்த ஆண்டின் ஜூலை 03 ஆம் தேதி எரிஸ் மாறுபாட்டின் வழக்குகள், சர்வதேச அளவில் குறிப்பாக ஆசியாவில் அதிகரித்திருந்த கோவிட் வழக்குகளின் காரணமாக கண்காணிக்கப்பட்டது.
அதன் பின் ஜூலை 10 ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ள வழக்குகளில் 11.8 சதவீதம் எரிஸ் என தெரிய வந்தது. அன்று முதல் உலக சுகாதார நிறுவனம் (WHO) எரிஸை கண்காணிப்பில் உள்ள மாறுபாடுகளின் பட்டியலில் சேர்த்தது.
எரிஸ் கோவிட் மாறுபாட்டின் அறிகுறிகள் என்ன?
ஜோ ஹெல்த் ஆய்வின் படி, எரிஸ் கோவிட் மாறுபாட்டின் அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவை தொண்டை வலி/தொண்டை புண், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, தும்மல், வறட்டு இருமல், தலைவலி, சளியுடனான இருமல், கரகரப்பான குரல், தசை வலிகள், வாசனையில் மாற்றம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும் இந்த வகை தொற்றின் முக்கிய அறிகுறி ஓமிக்ரானின் அறிகுறியைப் போன்றவை என்பதும் தெரிய வந்துள்ளன.
முக்கியமாக இந்த அறிகுறிகளுள் சுவாசிப்பதில் சிரமம், வாசனை இழப்பு, காய்ச்சல் போன்றவை இல்லை. மேலும் இந்த மாறுபாட்டின் மூல காரணம் எது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால் சுகாதார நிபுணர்கள், இது மோசமான காலநிலை மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி போன்றவை முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இதனால் தான் இந்த மாறுபாடு மக்களிடையே வேகமாக பரவுகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எரிஸ் கோவிட் மாறுபாட்டில் இருந்து தப்பிப்பது எப்படி?
இந்த புதிய கோவிட் மாறுபாட்டின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமானால், அடிக்கடி கைகளை சானிடைசரால் சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அதுவும் அறிகுறிகளைக் கொண்டவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதே சிறந்தது.
இந்த தொற்று உடலை தாக்கி விட்டால், கொரோனாவைப் போன்றே காய்ச்சலை ஆரம்பத்தில் ஏற்படுத்தி வெளிக்காட்டலாம் என்றும் நம்பப்படுகிறது. ஒரு நற்செய்தி என்னவெனில், இந்த எரிஸ் கோவிட் மாறுபாடு இந்தியாவில் இன்னும் நுழையவில்லை என்பது தான்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications