Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த மருந்துகளை காபியுடன் சாப்பிடாதீர்கள்.. ஆபத்து..!
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருமே ஏதாவது ஒரு மாத்திரையை சாப்பிட்டுக் கொண்டுதான் இருகிறோம்.. அது பிறந்த குழந்தையாக இருந்தாலும் சரி, வயதான பெரியவர்களாக இருந்தாலும் சரி, மாத்திரைகளை சாப்பிடாமல் இருப்பவர் என்ற நிலையே இல்லை..
அப்படி இருக்கையில் அந்த மாத்திரைகளை நாம் எப்படி சாப்பிட வேண்டும்? சரியான முறையில்தான் சாப்பிடுகிறோமா? அல்லது ஏதேனும் தவறு செய்கிறோமா? என்பதில் கவனமாக இருத்தல் வேண்டும்..

சிலர் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் மாத்திரையுடன் காபியை குடிப்பார்கள்.. அது முற்றிலும் ஆபத்து.. சில மருந்துகளுடன் காபியை கலந்து சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.. உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மருந்துகளின் செயல்திறன் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளைப நாம் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
1. மாத்திரைகளை எப்போது சாப்பிட வேண்டும்: மாத்திரைகள், வயிற்றில் உள்ள அமிலத் தன்மையைப் பொறுத்துச் செயல்படுகின்றன. பொதுவாக, உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர், உணவு உண்ட 20 நிமிடங்களுக்கு தான் மாத்திரைகளை சாப்பிட வேண்டும்..
2. தைராய்டு மாத்திரைகள்: ஒருவருக்கு தைராய்டு இருந்தால், அவருக்கு எடை அதிகரிப்பு, தோல் வறட்சி, மூட்டு வலி, முடி உதிர்தல், ஒழுங்கற்ற மாதவிடாய் போன்றவை ஏற்படலாம். எனவே தைராய்டு மருந்துகளை எப்போதும் வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும். அதனால் உடல் அந்த மாத்திரையை நன்றாக உறிஞ்சும். எனவே இந்த மருந்தை உட்கொண்ட ஒரு மணி நேரம் கழித்துதான் காபி குடிக்க வேண்டும்.. குறிப்பாக, காபியில் உள்ள காஃபின் தைராய்டு மருந்துகளின் செயல்திறனைக் குறைக்கும். அதனால் நீங்கள் மாத்திரை போட்டும் எந்த பயனும் இல்லை..
3. சளி மாத்திரைகள்: சளி அல்லது அலர்ஜிக்கான மருந்து மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. காபியுடன் இந்த மருந்தை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். இது கவலை மற்றும் தூக்க பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
4. சுகர் மாத்திரைகள்: அதுபோலவே சர்க்கரை நோய்க்கான மருந்துகளையும் காபியுடன் சேர்த்து சாப்பிடக்கூடது. அப்படி சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதேபோல், நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தையும் காஃபின் மோசமாக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
5. அல்சைமர் : அல்சைமர் நோய் பெரும்பாலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கிறது. அல்சைமர் மருந்துகளை காபியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் காபியில் உள்ள காஃபின் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இது மருந்து மூளைக்கு செல்வதை தடுக்கிறது. அதனால் நோயாளிக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.
6. ஆஸ்துமா மருந்துகள்: ஆஸ்துமா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பீட்டா-அட்ரினெர்ஜிக் அகோனிஸ்டுகள் காபியுடன் சாப்பிடக்கூடாது.. அப்படி உட்கொள்ளும்போது அவற்றின் பக்க விளைவுகள் மோசமடையலாம். இந்த பக்க விளைவுகளில் பதட்டம், நடுக்கம், இதயத் துடிப்பு அல்லது அதிகரித்த இதயத் துடிப்பு ஆகியவை அடங்கும்.
7. கருத்தடை மருந்துகள்: எத்தினில் எஸ்ட்ராடியோல் மற்றும் லெவோனோர்ஜெஸ்ட்ரல், நோரெதிண்ட்ரோன் போன்ற பிறப்பு கட்டுப்பாட்டு மருந்துகளையும் காபியுடன் சாப்பிடக்கூடாது.. இந்த தொடர்பு நடுக்கம், தலைவலி, வேகமான இதயத் துடிப்பு மற்றும் பிற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications