Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
உடலின் ஒவ்வொரு உறுப்பும் எந்த நேரத்தில் செயல்படும், எந்த நேரத்தில் ரெஸ்ட் எடுக்கும்-ன்னு தெரியுமா?
Body Organ Clock: ஒரு நாள் என்பது 24 மணிநேரம் அடங்கியது ஆகும். இந்த 24 மணிநேரத்தை காண்பிக்கும் ஒரு கருவி தான் கடிகாரம். இந்த கடிகாரத்தில் உள்ள நேரத்தின் படி தான் நாம் நமது தினசரி வேலைகளான, சாப்பிடுவது, தூங்குவது, வேலை செய்வது, விளையாடுவது போன்றவற்றை பிரித்து செய்து வருகிறோம். எப்படி மனிதர்களாகிய நாம் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்ய குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்தெடுத்து செய்கிறோமோ, அதேப் போல் தான் நமது உடலுக்கும் உறுப்பு கடிகாரம் உள்ளது.
இந்த உறுப்பு கடிகாரத்தின் படி உடலினுள் உள்ள உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறம்பட செயல்படுகின்றன. ஒவ்வொரு உறுப்புக்களின் செயல்பாட்டு நேரத்தின் படி, நாம் நமது தினசரி வேலைகளை செய்து வந்தால், உடல் மற்றும் உடலுறுப்புக்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கும் என்பது தெரியுமா?

டாக்டர் நர்மதா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உடலின் உறுப்பு கடிகாரம் பற்றியும், ஒவ்வொரு உறுப்புக்களும் எந்த நேரத்தில் செயல்படும் மற்றும் அந்த நேரத்தில் எந்த மாதிரியான செயல்களை அல்லது விஷயங்களை நாம் செய்யலாம் என்பது குறித்தும் விரிவாக கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
அதிகாலை 3 மணி முதல் அதிகாலை 5 மணி வரை - இது நுரையீரலுக்கான நேரம். இந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை - இது பெருங்குடலுக்கான நேரம். இந்த நேரத்தில் மலம் கழிக்க வேண்டும்.
காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை - இது இரைப்பையின் நேரம். இந்த நேரத்தில் காலை உணவை எடுக்க வேண்டும்.
காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை - இது மண்ணீரலின் நேரம். இந்த நேரத்தில் தினசரி வேலைகளை செய்ய தொடங்கலாம்.
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை - இது இதயத்துக்கான நேரம். இந்த நேரத்தில் மதிய உணவை சாப்பிட வேண்டும்.
மதியம் 1 மணி முதல் 3 மணி வரை - இது சிறுகுடலின் நேரம். இந்த நேரத்தில் ஒரு குட்டித் தூக்கம் போடலாம்.
மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை - இது சிறுநீர்ப்பையின் நேரம். இந்த நேரத்தில் படிக்கலாம்.
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை - இது சிறுநீரகங்களின் நேரம். இந்த நேரத்தில் இரவு உணவை முடித்து விட வேண்டும்.
இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை - இது பெரிகார்டியத்தின் நேரம். இந்த நேரத்தில் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடலாம் அல்லது மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் விஷயங்களில் ஈடுபடலாம்.
இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை - இது டிரிபிள் பர்னர் நேரமாகும். அதாவது இது உறுப்பு அமைப்பு முழுவதுமாகக் குறிக்கிறது. மேலும் இந்தக் காலகட்டம் அதிக அளவு வெப்பத்தை உருவாக்கும் காலமாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தூங்க சென்று விட வேண்டும்.
இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை - இது பித்தப்பைக்கான நேரம். இந்த நேரத்தில் கட்டாயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் செல்லுலார் பழுதுபார்க்கும் செயல்முறை நடக்கும்.
நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை - இது கல்லீரலின் நேரம். இந்த நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலத்தில் உடல் தன்னைத் தானே சுத்தம் செய்யும்.
எனவே நண்பர்களே! இதுவரை நீங்கள் எந்த ஒரு வேலையையும்/செயலையும் சரியாக செய்யாமல் இருந்தால், இனிமேல் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க விரும்பினால், இனிமேல் சரியான நேரத்தில் தவறாமல் செய்து, உடலுறுப்புக்களையும், உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
