Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
தினமும் ஒரு கைப்பிடி முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் 3 முக்கிய நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்!
Cashew Nuts Benefits In Tamil: நட்ஸ்களில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடியது என்றால் அது முந்திரி என்றே கூறலாம். சொல்லப்போனால், ஒவ்வொரு வீட்டிலும் அம்மா வாங்கி வைத்துள்ள முந்திரியை திருடி சாப்பிடும் ஒருவர் கட்டாயம் இருக்கக்கூடும். ஏனெனில் அந்த அளவில் முந்திரி ருசியாக இருக்கும். கேசரி, பாயாசம் போன்றவற்றில் சேர்க்கப்படும் முந்திரி வெறுமனே சுவையானது மட்டுமின்றி, ஏராளமான சத்துக்களையும் தன்னுள் கொண்டது.
முக்கியமாக முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்புக்களான மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. அதோடு இதில் புரோட்டீனும் அதிகம் உள்ளன. இது தவிர முந்திரியில் மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், ஜிங்க், வைட்டமின் பி6, வைட்டமின் கே போன்றவையும் நிறைந்துள்ளன.

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த முந்திரி உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகின்றன. அதில் 3 முக்கியமான நன்மைகளைப் பற்றி டாக்டர் அஸ்வின் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை என்னவென்பதைக் காண்போம்.
1. எலும்புகளுக்கு நல்லது
முந்திரி எலும்புகளுக்கு மிகவும் நல்லது. முந்திரியில் கால்சிம், மக்னீசியம், வைட்டமின் கே போன்றவை உள்ளன. இவை மூன்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாத சத்துக்களாகும். அதுவும் இந்த மூன்று சத்துக்களை ஒன்றாக எடுக்கும் போது, அவை எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்கும் என்று டாக்டர் அஸ்வின் கூறினார். எனவே எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டுமானால் தினமும் ஒரு கைப்பிடி முந்திரியை சாப்பிடுங்கள். இதனால் வயது அதிகரிக்கும் போது எலும்புகள் பலவீனமடைவது தடுக்கப்படுவதோடு, எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வருவதும் தடுக்கப்படும்.
2, இதயத்திற்கு நல்லது
முந்திரி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுவும் முந்திரியில் மிகவும் சக்தி வாய்ந்த தாவர சேர்மமான பைட்டோஸ்டெரால்கள் உள்ளன. இந்த பைட்டோஸ்டெரால் பல வழிகளில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. முக்கியமாக பைட்டோஸ்டெரால்கள் குடலில் கொழுப்பை உறிஞ்சுவதில் தலையிடுவதன் மூலம் எல்டிஎல் ("கெட்ட") கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். எனவே முந்திரி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று நினைத்து அதை சாப்பிடுவதை நிறுத்தாமல், தினசரி உணவில் சிறிது சேர்த்து வாருங்கள்.
3. புற்றுநோயைத் தடுக்கும்
முந்திரி புற்றுநோயைத் தடுக்க உதவி புரிவதாகவும், குறிப்பாக குடல் புற்றுநோயை தடுக்க உதவுகிறது. முந்திரியானது தாவர அடிப்படையிலான நார்ச்சத்தை அதிகம் கொண்டவை. எனவே இந்த முந்திரியை தினசரி உணவில் சேர்த்து வந்தால், அது குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைப்பதாக டாக்டர் அஸ்வின் விஜய் கூறுகிறார்.
பிற நன்மைகள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள 3 நன்மைகளைத் தவிர, முந்திரி வேறு பல நன்மைகளையும் வழங்கும். குறிப்பாக மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது, சருமத்திற்கு நல்லது, சில ஆய்வுகளில் முந்திரி கல்லீரல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு முந்திரியை சாப்பிடுவது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று டாக்டர் அஸ்வின் கூறினார்.
எனவே நண்பர்களே! இதுவரை முந்திரி பிடித்தும், கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடும் என்று எண்ணி சாப்பிடாமல் வந்தால், இனிமேல் தினமும் சிறிது சாப்பிட்டு, முந்திரியின் நன்மைகளைப் பெறுங்கள். அதுவும் உப்பு நிறைந்த முந்திரியை சாப்பிடாமல், வெறும் முந்திரியை சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











