Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
வெளிநாட்டு உணவுகளுக்கு நிகரான சத்துக்களை கொண்ட தமிழ்நாட்டு உணவுகள் இதாங்க! மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க...
Tamil Nadu Foods: மனிதன் உயிர் வாழ உணவுகள் மிகவும் இன்றியமையாதது. இந்த உணவுக்காக தான் நாம் அல்லும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். தற்போது ஃபேஷன் என்ற பெயரில் மக்கள் வெளிநாட்டு உணவுகளை அதிகம் வாங்கி உட்கொள்கின்றனர். இது தவறு ஒன்றும் இல்லை இந்த வெளிநாட்டு உணவுகளானது சத்துக்களை அதிகம் கொண்டிருக்கலாம். ஆனால் அவற்றின் விலை நம் பட்ஜெட்டிற்கு கட்டுப்படியாகாத வகையில் அதிகமாக இருக்கும்.
இருப்பினும், மக்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், அந்த வெளிநாட்டு உணவுகள் தான் சிறந்தது என்று நினைத்து, நம் தமிழ்நாட்டில் விளையும் மற்றும் உற்பத்தி செய்யும் உணவுகளுக்கு பதிலாக, வெளிநாட்டு உணவுகளை வாங்கி உட்கொண்டு வருகின்றனர். இதற்கு மக்களை முழுமையாக குறை கூற முடியாது. சொல்லப்போனால், நம் மக்களுக்கும் இன்னும் நம் நாட்டில் விளையும் உணவுகளின் மகிமை நிறைய பேருக்கு சரியாக தெரியாதது தான் முக்கிய காரணம்.

ஆனால் அந்த வெளிநாட்டு உணவுகளுக்கு இணையான, ஏன் அதை விட சத்துக்களை அதிகம் கொண்ட ஏராளமான தமிழ்நாட்டு உணவுகள் உள்ளன என்பது தெரியுமா? அந்த உணவுகள் என்னவென்று தெரிந்தால், இனிமேல் வெளிநாட்டு உணவுகளை அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடமாட்டீர்கள்.
சரும நிபுணரான டாக்டர் மோகனலட்சுமி அவர்கள், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிநாட்டு உணவுகளுக்கு நிகரான சில சிறந்த தமிழ்நாட்டு உணவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த உணவுகள் என்னவென்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
ஓட்ஸ்
உடல் பருமனை குறைப்பவர்களிடையே ஓட்ஸ் மிகவும் பிரபலமான உணவாகும். இந்த ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது எடை இழப்புக்கு உதவுகிறது. ஆனால் இந்த ஓட்ஸ் அவ்வளவு ருசியாக இருக்காது. இதை சமைத்தால், வழுவழுப்பாக இருக்கும். இதனால் பிடிக்காமல் நிறைய பேர் இதை உட்கொண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட ஓட்ஸிற்கு சிறந்த மாற்றாக சம்பா கோதுமை அல்லது கம்பு இருக்கும் என்று டாக்டர் கூறினார்.
கினோவா
கினோவா என்னும் உணவுப் பொருளும் உடல் எடையைக் குறைக்க நினைப்போரிடையே பிரபலமான ஒன்றாகும். இந்த கினோவாவிற்கு சிறந்த மாற்றாக தமிழ்நாட்டில் விளையும் சிறுதானியங்களான வரகு அரிசி, சாமை அரிசி இருக்கும் என்று டாக்டர் கூறினார்.
அவகேடோ
வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகேடோ ஒரு வெளிநாட்டு பழமாகும். இந்த அவகேடோவில் நல்ல கொழுப்புக்கள் மற்றும் உடலுக்கு வேண்டிய பிற அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த அவகேடோ பழத்திற்கு சிறந்த மாற்றாக தமிழ்நாட்டில் விளையும் கொய்யாப்பழம் மற்றும் நெல்லிக்காய் இருக்கும் என்று டாக்டர் கூறினார்.
ப்ளூபெர்ரி
பெர்ரி பழங்களுள் ஒன்றான ப்ளூபெர்ரி பார்ப்பதற்கு திராட்சை போன்று காணப்படும். வெளிநாட்டு பழமான ப்ளூபெர்ரியில் வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. ஆனால் இந்த ப்ளூபெர்ரிக்கு சிறந்த மாற்றாக நம் தமிழ்நாட்டில் அதிகம் விளையும் நாவல் பழம் இருக்கும் என்று டாக்டர் கூறினார்.
ப்ராக்கோலி
தற்போது மார்கெட்டுகளில் ப்ராக்கோலி அதிகம் விற்கப்படுவதைக் காணலாம். பார்க்க காலிஃப்ளவர் போன்றே இருக்கும் ப்ராக்கோலியில் அத்தியாவசிய வைட்டமின்களான சி, ஏ, கே போன்றவையும், பொட்டாசியம், கால்சியம் போன்றவையும் உள்ளன. ஆனால் இந்த ப்ராக்கோலிக்கு சிறந்த மாற்றாக நம் அனைவருக்கும் தெரிந்த முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் இருக்கும் என்று டாக்டர் கூறினார்.
ஆலிவ் ஆயில்
வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆலிவ் ஆயில் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று தற்போது மக்கள் இந்த எண்ணெயை அதிக விலை கொடுத்து சமையலில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த ஆலிவ் எண்ணெக்கு சிறந்த மாற்று நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் என்று டாக்டர் கூறினார்.
பாஸ்தா
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பாஸ்தா, ஒரு ருசியான உணவு. இந்த பாஸ்தாவிற்கு சிறந்த மாற்றாக ராகி சேமியா மற்றும கோதுமை சேமியா இருக்கும் என்று டாக்டர் கூறினார்.
சீஸ்
பால் பொருட்களுள் ஒன்றான சீஸ் வெளிநாட்டு உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படக்கூடியது. இப்படிப்பட்ட சீஸ் உணவிற்கு ஒரு வித்தியாசமான சுவையைத் தரக்கூடியது. ஆனால் இந்த சீஸிற்கு சிறந்த மாற்றாக பன்னீர் இருக்கும் என்று டாக்டர் கூறினார்.
டார்க் சாக்லேட்
வெளிநாடுகளில் அதிகம் விற்கப்படும் டார்க் சாக்லேட் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை கொண்டது. இந்த டார்க் சாக்லேட்டிற்கு சிறந்த மாற்றாக நம் தமிழ்நாட்டில் பிரபலமான கடலை மிட்டாய் மற்றும் எள்ளுருண்டை இருக்கும் என்று டாக்டர் கூறினார்.
யோகர்ட்
வெளிநாட்டில் மிகவும் பிரபலமான ஒரு புரோபயோடிக் உணவுப் பொருள் தான் யோகர்ட். இந்த யோகர்ட்டிற்கு சிறந்த மாற்று என்றால் அது தயிர் தான் என்று டாக்டர் கூறினார்.
செரில்கள்
டயட்டில் இருப்போரிடையே செரில்கள் மிகவும் பிரபலமான உணவுப் பொருள். இந்த செரில்களுக்கு சிறந்த தமிழ்நாட்டு மாற்று உணவுப் பொருள் என்றால், அது அவல் உப்புமா மற்றும் புட்டு தான் என்று டாக்டர் கூறினார்.
என்ன நண்பர்களே! இனிமேல் நிறைய பணம் செலவழித்து வெளிநாட்டு உணவுகளை சாப்பிடாமல், நம் தமிழ்நாட்டு உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications