Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...!
ஒவ்வொரு பெற்றோரும் வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 6 மருந்துகளை பட்டியலிட்ட டாக்டர்! மிஸ் பண்ணாம பாருங்க
Medicines: பொதுவாக நாம் அனைவரும் அவசரத்திற்காக ஒருசில மருந்துகளை எப்போதும் வீட்டில் வைத்திருப்போம். அதுவும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், நிச்சயம் ஒருசில மருந்துகளை ஸ்டாக் வைத்திருப்போம். குறிப்பாக காய்ச்சல், சளி, மூக்கடைப்பு போன்ற சிறு சிறு பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் எப்போதும் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்கி வைத்து, தேவைப்படும் போது பயன்படுத்துவோம்.
குறிப்பாக குளிர்காலம், பனிக்காலத்தில் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அடிக்கடி சளி, இருமல், வயிற்றுப்போக்கு, மூக்கடைப்பு, காய்ச்சலால் சிரமப்படுவார்கள். அப்படியான சூழ்நிலையில் வீட்டிலேயே மருந்துகளை வைத்திருந்தால், அவற்றை கொடுத்து, நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம் அல்லவா!

அப்படி பெரும்பாலான வீட்டில் கட்டாயம் இருக்கும் ஒரு மருந்து தான் பாராசிட்டமல். ஆனால் இந்த மருந்தை தவிர, வேறு சில மருந்துகளையும் வீட்டில் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் வைத்திருக்க வேண்டும். இதுக்குறித்து இஎஸ் குழந்தை பராமரிப்பு மையத்தின் குழந்தைநல மருத்துவர் டாக்டர் பிரதீப் அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒவ்வொரு பெற்றோரும் வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 6 மருந்துகள் குறித்தும், அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார். அதை தெரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. பாராசிட்டமல்
"குழந்தைகளுக்கு காய்ச்சலைக் குறைக்க பாராசிட்டமலை பயன்படுத்துவோம். ஆனால் இந்த காய்ச்சலுக்காக பாராசிட்டமலை கொடுக்கும் முன், ஒரு டிஜிட்டல் தெர்மாமீட்டரை கொண்டு வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். ஒருவேளை 99.5 டிகிரி F-க்கு மேல் இருந்தால் மட்டும் பாராசிட்டமல் கொடுங்கள். அதற்கு குறைவாக இருந்தால் கொடுக்காதீர்கள்.
மேலும் ஒவ்வொரு டோஸ் பாராசிட்டமலுக்கும் இடையே குறைந்தது 6 மணிநேர இடைவெளி இருக்க வேண்டும். அதோடு ஒரு நாளைக்கு 4 முறைக்கு மேல் பாராசிட்டமலை கொடுக்கக்கூடாது. ஒருவேளை இந்த 6 மணிநேரத்திற்குள் உடல் வெப்பநிலை குறையாவிட்டால், ஈரத்துணியைக் கொண்டு துடைத்து விட வேண்டும். அப்படி ஒருவேளை கொடுத்தால், அது கல்லீரலில் சேதத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. மேலும் இந்த பாராசிட்டமல் நிறைய ஃபார்மலேசனில் உள்ளது. உங்கள் குழந்தையின் எடைக்கேற்ப உங்கள் மருத்துவர் கூறிய அளவு டோஸில் தான் கொடுக்க வேண்டும்" என்று டாக்டர் கூறினார்.
2. சலைன் நாசல் ட்ராப்ஸ்
குழந்தைகளுக்கு மூக்கடைப்பு இருந்தாலோ அல்லது மூச்சுவிடும் போது கர்..கர்.. என்று சப்தம் வந்தாலோ, இந்த சலைன் நாசல் ட்ராப்ஸை பயன்படுத்தலாம். இதை இரண்டு விதமாக பயன்படுத்தலாம். அதில் மூக்கில் சொட்டு மருந்தாக அல்லது ஸ்ப்ரே போன்று பயன்படுத்தலாம். இந்த சலைன் நாசல் ட்ராப்ஸை 2-3 மணிநேரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம். இதனால் எந்த ஒரு பக்கவிளைவுகளுமே கிடையாது என்று டாக்டர் கூறினார்.
3. ஆன்டன்செட்ரான்
"ஆன்டன்செட்ரான் எமிசெட் என்று பல பிராண்டுகளில் விற்கப்படுகிறது. குழந்தைகள் வாந்தி அல்லது குமட்டல் உணர்வை சந்தித்தால், இந்த மருந்தைக் கொடுக்கலாம். இதுவும் குழந்தையின் எடைக்கேற்ப குழந்தைநல மருத்துவர்கள் பரிந்துரைத்த அளவு மட்டுமே கொடுக்க வேண்டும். அதிகமாக கொடுக்கக்கூடாது" என்று டாக்டர் கூறினார்.
4. ஓஆர்எஸ் (ORS)
"குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போகும் போது, உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுக்களான சோடியம், பொட்டாசியம் போன்றவை அதிகமாக வெளியேற்றப்படும். இந்த எலக்ட்ரோலைட்டுக்களை உடனே உடலுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். எனவே குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு போகும் போது ஒரு பெரிய அளவு ஓஆர்எஸ் பாக்கெட்டை எடுத்து, 1 லிட்டர் நீரில் கலந்து கொண்டு, அதை நாள் முழுவதும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்க வேண்டும். ஆனால் இந்த நீரை 24 மணிநேரத்திற்குள் குடித்துவிட வேண்டும். ஒருவேளை 24 மணிநேரத்தை தாண்டிவிட்டால், அந்நீரை கீழே உற்றிவிட வேண்டும்" என்று டாக்டர் கூறினார்.
5. முயூப்ரோசின் ஆயின்மெண்ட்
"குழந்தைகள் கீழே விழுந்து அடிப்பட்டுவிட்டாலோ அல்லது சிராய்ப்பு ஏதேனும் ஏற்பட்டாலோ, உடனே அப்பகுதியை நீரில் கழுவிவிட்டு, நன்கு காய வைத்து, பின் இந்த ஆன்டி-செப்டிக் ஆயின்மெண்ட்டை தடவ வேண்டும்" என்று டாக்டர் கூறினார்.
6. வைட்டமின் டி ட்ராப்ஸ்
உங்கள் வீட்டில் 1 வயதிற்குள் இருக்கும் குழந்தை இருந்தால், வைட்டமின் டி ட்ராப்ஸை தவறாமல் கொடுக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு 400 யூனிட்டுகளை தர வேண்டும். சில பிராண்ட்டுகளில் 1 மிலி-ல் 400 மிலி இருக்கும், இல்லாவிட்டால் 0.5 மிலி-ல் 400 மிலி வைட்டமின் டி இருக்கும். எனவே நீஙகள் எந்த பிராண்டை பயன்படுத்துகிறீர்களோ, அதைப் பொறுத்து இந்த மருந்தை எடுங்கள் என்று டாக்டர் கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











