Latest Updates
-
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க..
இந்த 3 காய்கறிகளை மட்டும் எப்பவும் வெட்டிய உடனே சமைக்காதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! ஏன்னு பாருங்க..
Never Cook These 3 Vegetables Immediately After Cutting Them: நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் காய்கறிகளை தினசரி உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஏனெனில் காய்கறிகளில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. காய்கறிகளை ஒருவர் தங்களின் உணவில் தினமும் அதிகம் சேர்த்து வந்தாலே, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து, நோயின்றி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆனால் காய்கறிகளுள் குறிப்பிட்ட சில காய்கறிகளை வெட்டிய உடனே சமைக்கக்கூடாது என்பது தெரியுமா? சில வகையான காய்கறிகளை வெட்டி சிறிது நேரம் கழித்து சமைக்கும் போது, அதில் சத்துக்கள் அதிகரிக்கும் என்பது தெரியுமா? என்ன ஆச்சரியமாக உள்ளதா?
டாக்டர் பிள்ளை அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெட்டிய உடனே சமைக்கக்கூடாத 3 வகையான காய்கறிகளைக் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த காய்கறிகளை வெட்டி சிறிது நேரம் கழித்து சமைப்பதன் மூலம், அதில் சத்துக்கள் அதிகரிப்பதாகவும் கூறியுள்ளார். இப்போது அந்த 3 காய்கறிகள் என்னவென்பதைக் காண்போம்.
1. முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி
"முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி ஆகிய 3 காய்கறிகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. இந்த மூன்றிற்கும் ஒரே குணங்கள் தான். இந்த மூன்றையும் சமைப்பதற்கு முன் நன்கு நீரில் கழுவிவிட்டு, துண்டுகளாக்கி அப்படியே சிறிது நேரம் வைத்து விட வேண்டும். அதுவும் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காமல், காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். அதுவும் வெட்டிய பின் 30-40 நிமிடம் கழித்து சமைக்க வேண்டும்.
இப்படி செய்யும் போது, அவற்றில் உள்ள சல்போரஃபேன் என்னும் பொருள் அதிகரிக்கும். இது புற்றுநோயை தடுக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டவை. அதுமட்டுமின்றி ஐசோதயோசையனேடு என்னும் பொருள் உள்ளது. இதுவும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது." என்று கூறினார். எனவே இனிமேல் இந்த மூன்று காய்கறிகளையும் வாங்கினால், அவற்றை நறுக்கிய உடனே சமைக்காமல், 30 நிமிடம் கழித்து சமைக்க பயன்படுத்துங்கள்.
2. பூண்டு
தினசரி சமையலில் பயன்படுத்தக்கூடிய பொருள் தான் பூண்டு. இந்த பூண்டு பற்களை சமைக்க பயன்படுத்தும் போது, அதன் தோலை மட்டும் நீக்கிவிட்டோ, அல்லது அதை பொடியாக நறுக்கியோ அல்லது தட்டிப் போட்டோ பயன்படுத்துவோம். ஆனால் இனிமேல் சமையலுக்கு பூண்டை பயன்படுத்தும் போது, அதன் தோலை நீக்கிவிட்டாலும் சரி, நறுக்கினாலும் சரி, 10-15 நிமிடம் கழித்து சமையலில் பயன்படுத்துங்கள். இப்படி செய்யும் போது பூண்டில் அற்புதமான மாயங்கள் நிகழும். அதுவும் இதில் உள்ள அல்லிசின் என்னும் கெமிக்கல் அதிகரிப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக டாக்டர் கூறினார்.
3. வெங்காயம்
பொதுவாக வெங்காயத்தை நறுக்கி நீண்ட நேரம் வெளியே வைக்கக்கூடாது என்று சொல்வார்கள். "வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சல்பர் பொருட்கள் அதிகம் உள்ளன. வெங்காயத்தை நறுக்கும் போது கண்களில் இருந்து நீர் வழிய காரணம், அதில் உள்ள சல்பர் காற்றில் பரவி கண்களை அடையும் போது இப்படி நிகழ்கிறது. ஆனால் இதுவும் நல்லது தான். இதனால் கண்களில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழியும். இப்படிப்பட்ட வெங்காயத்தை நறுக்கிய உடனே சமையலில் பயன்படுத்தாமல், 10 நிமிடம் கழித்து பயன்படுத்தும் போது, அதில் சல்பர் அதிகரித்து, மாரடைப்பு வரும் அபாயம் குறையும்" என்று டாக்டர் கூறினார்.
நினைவில் கொள்ள வேண்டியவை
"மேலே கூறிய இந்த 3 காய்கறிகளையும் எண்ணெயில் சேர்த்து சமைத்து சாப்பிடும் போது, ஒரு நன்மை கிடைக்கும். அது என்னவெனில், எண்ணெயில் கொழுப்பு உள்ளது. இந்த காய்கறிகளில் உள்ள வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை கொழுப்பில் கரையும் வைட்டமின்களாகும். அதுவும் செக்கு எண்ணெயை சமையலில் பயன்படுத்துவது இன்னும் நல்லது.
இந்த காய்கறிகளை சமைக்கும் போது, உப்பை அளவாக சேர்க்க வேண்டும். மேலும் இந்த 3 காய்கறிகளையும் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின்கள் மற்றம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவு குறைந்துவிடும். எனவே இந்த காய்கறிகளை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்காதீர்கள்" என்றும் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

