Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்!
Sperm Colour And Their Meanings In Tamil: ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை விந்தணுக்களின் நிறம் மற்றும் அதன் தோற்றத்தைக் கொண்டே அறியலாம். அதுவும் விந்தணுக்களின் நிறம் ஆண்களின் ஆரோக்கியம் குறித்த தகவல்களை வெளிப்படுத்தும். பொதுவாக ஒரு ஆரோக்கியமான விந்து வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனுல் சில சமயங்களில் இந்த விந்து மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படலாம். இப்படி விந்துவின் நிறம் மாறியிருந்தால், அது உடலினுள் உள்ள பிரச்சனையின் அறிகுறியாகவோ, மாற்றங்களாகவோ இருக்லாம்.

இப்படி ஒரு ஆணின் விந்துவில் பிரச்சனை வருவதற்கு உணவுப் பழக்கங்கள், நீர்ச்சத்து குறைபாடு, மருந்துகள், வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணிகள் உள்ளன. எனவே விந்தின் நிறத்தில் தொடர்ந்து மாற்றம் காணப்பட்டால் அதனை அலட்சியப்படுத்தாமல் கவனிக்க வேண்டியது அவசியம். ஆண்களின் பலவிதமான விந்தணுக்களின் நிறங்களையும், அவை உண்மையில் எதை குறிக்கின்றன என்பது குறித்து டாக்டர் மகாலட்சுமி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது என்னவென்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
நீர் போன்ற விந்து
"ஒரு ஆணின் விந்து மிகவும் நீர் போன்று இருந்தால், அது குறைந்த பாகுத்தன்மை கொண்ட விந்து ஆகும். இது திரவமாகும் நேரம் குறைவாக இருப்பதால் ஏற்படலாம். மேலும் இது அடிக்கடி விந்து வெளியேற்றம் அல்லது ஜிங்க் குறைபாட்டின் காரணமாகவும் வரலாம். இதற்கு ஜிங்க் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் கொண்டைக்கடலை, வேர்க்கடலை போன்றவற்றை தினமும் எடுக்க வேண்டும். முக்கியமாக ஒவ்வொரு விந்து வெளியேற்றத்துக்கும் 2-3 நாட்கள் இடைவெளி விட வேண்டும்" என்றும் டாக்டர் கூறினார்.
அடர் மஞ்சள் அல்லது பச்சை நிற விந்து
"விந்து அடர் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருந்தால், அது உள் தொற்றின் காரணமாக இருக்கலாம். அதுவும் இது பாலியல் தொற்று அல்லது புரோஸ்டேட் தொற்றினாலும் கூட ஏற்படலாம். இதற்கு காலையில் பச்சை பூண்டு சாப்பிடலாம் மற்றும் தினமும் 4 லிட்டர் நீரை குடிப்பதன் மூலம், நச்சுக்கள் வெளியேறும். தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி ஆன்டி-பயாடிக்குகளை எடுங்கள். மேலும் புரோப்யோடிக் நிறைந்த உணவுகளான தயிரை அதிகம் எடுக்க வேண்டும்." என்று டாக்டர் கூறினார்.
பிங்க் அல்லது சிவப்பு நிற விந்து
"விந்துவானது பிங்க் அல்லது சிவப்பு நிறத்தில் இருந்தால், விந்துவில் இரத்தம் கலந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையை ஹெமடோஸ்பெர்மியா என்று அழைப்பர். இது உயர் இரத்த அழுத்தம், உள் இரத்தக்கசிவு ஆகியவற்றினாலும் வரலாம். இந்நிலையில் உள் இரத்தக்கசிவுக்கு என்ன காரணம் என்பதை மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். அதோடு, தினமும் ஒரு நெல்லிக்காயை உட்கொள்வதன் மூலம் உடலினுள் உள்ள உட்காயங்களை குணப்படுத்த ஓரளவு உதவும். இரத்த அழுத்தம் இருந்தால், நிச்சயம் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு, அதற்கான மருந்துகளை தவறாமல் எடுக்க வேண்டும்" என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! உங்கள் விந்துவில் அசாதாரண மாற்றத்தைக் கண்டால், சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
