Latest Updates
-
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்?
கலோரிகள் குறைவாக உள்ள இந்த 7 உணவுகள சாப்பிட்டா... உங்க எடை டக்குனு குறைஞ்சிடுமாம்...!
100 கிராம் சுரைக்காயில் 18 கலோரிகள் மட்டுமே உள்ளது. சீமை சுரைக்காய் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் சீரான குடல் இயக்கம் மற்றும் உடலில் நீர் சமநிலைக்கு உதவுகிறது. மேலும், இது எடை இழப்பு உணவுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது
உடல் பருமன் பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இன்றைய பிஸியான காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் சவாலான பணியாக இருக்கும். உடல் எடையை குறைக்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள் எனில், முதலில் நீங்கள் மாற்ற வேண்டியது உங்களுடைய உணவு பழக்கத்தைதான். உங்க உடல் கலோரிகளை எரிக்கும்போது, எடை குறைய தொடங்கும். ஆதலால், எடை இழப்புக்கு உங்கள் கலோரி அளவைக் கணக்கிடுவது மிக முக்கியம். இருப்பினும், உங்கள் பரபரப்பான வாழ்க்கை முறையைப் பொறுத்தவரை, இது சவாலானதாக இருக்கலாம். ஆனால் உங்கள் வழக்கமான கலோரி நுகர்வு உடல் பருமன் மற்றும் கொழுப்பு சேமிப்புடன் நேரடியாக தொடர்புடையது. மேலும், இது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும்.

இது இறுதியில் எடை அதிகரிப்பு அல்லது மெதுவான எடை இழப்பு ஏற்படலாம். பிரபலமான பரிந்துரைகளில் ஒன்று எதிர்மறை கலோரி உணவுகளை சாப்பிடுவதாகும். இந்த வகையில், உங்கள் கலோரி நுகர்வு பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. எதிர்மறை கலோரி உணவுகள் உங்கள் எடை குறைப்புக்கு எவ்வாறு உதவும் என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

எதிர்மறை கலோரி உணவுகள்
எடை இழப்புக்கு எதிர்மறை கலோரி உணவுகள் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அவை ஜீரணிக்க அதிக கலோரிகளை எரிக்கின்றன. உங்கள் உணவில் அவற்றைச் சேர்ப்பது உங்கள் எடை இழப்பு பயணத்தை துரிதப்படுத்தலாம். மேலும் கலோரி பற்றாக்குறை ஏற்படுவதையும் தடுக்கலாம். இந்த வகையான உணவுகள் பெரும்பாலும் நார்ச்சத்து, நீர் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன. அவை குறைவான கலோரிகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், கலோரிகளை எரிக்கவும் உதவுகின்றன. எனவே, எதிர்மறை கலோரி உணவுகள் எடை குறைக்க உதவுகிறது.

லெட்டூஸ் கீரை
உங்கள் உணவில் கீரையை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் சாலட்களில் சில லெட்டூஸ் கீரைகளை சேர்க்கலாம். இது நல்ல அளவு நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி ஆகியவற்றுடன் நம்பமுடியாத அளவிற்கு சத்தானது. அதே நேரத்தில் 100 கிராமுக்கு 15 என்ற குறைந்த அளவு கலோரி உள்ளடக்கம் லெட்டூஸ் கீரையில் உள்ளது. இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

வெள்ளரிகள்
வெள்ளரியில் நம்பமுடியாத அளவிற்கு நீரேற்றம் மற்றும் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளில் அதிகளவில் உள்ளன. கோடை நாட்களில், இது பாரம்பரிய குளிர்ச்சி உணவாகவும் கருதப்படுகிறது. ஏனெனில் இது உடலின் நீர் சமநிலையை மேம்படுத்துகிறது. 100 கிராம் வெள்ளரியில் 16 கலோரிகள் உள்ளன.

ஆப்பிள்
பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ஆப்பிள் சிற்றுண்டிக்கு சிறந்த பழம். 100 கிராம் ஆப்பிளில் தோராயமாக 50 கலோரிகள் இருக்கிறது. ஆப்பிளில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், இது உங்கள் பசியை கட்டுப்படுத்துகிறது. ஆப்பிளில் பெக்டின் ஏராளமாக உள்ளது, இது ஒரு வகையான கரையக்கூடிய நார்ச்சத்து. இது உங்கள் எடை குறைப்பை ஊக்குவிக்கிறது மற்றும் படிப்படியாக சர்க்கரையை வெளியிடுகிறது. மேலும், இது இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த உதவுகிறது.

சுரைக்காய்
100 கிராம் சுரைக்காயில் 18 கலோரிகள் மட்டுமே உள்ளது. சீமை சுரைக்காய் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் சீரான குடல் இயக்கம் மற்றும் உடலில் நீர் சமநிலைக்கு உதவுகிறது. மேலும், இது எடை இழப்பு உணவுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. எடை இழப்புக்கு மட்டுமல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் உங்களுக்கு வழங்குகிறது.

தக்காளி
100 கிராம் தக்காளியில் 19 கலோரிகள் மட்டுமே உள்ளன. உங்கள் உணவிற்கு கூடுதல் சுவையை சேர்ப்பதுடன், பல ஆரோக்கிய நன்மைகளை தக்காளி கொண்டுள்ளது. இது பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் ஊட்டச்சத்து நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். ஆதலால், உங்கள் எடை இழப்பு உணவு திட்டத்தில் தக்காளியை சேர்த்துக்கொள்ளுங்கள்.

ப்ரோக்கோலி
100 கிராம் தக்காளியில் 34 கலோரிகள் மட்டுமே இருப்பதால், ப்ரோக்கோலி ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது, இது புற்றுநோய்க்கு எதிரான குணங்களைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த உணவாகவும் இருக்கிறது.

கேரட்
100 கிராம் கேரட்டில் சுமார் 41 கலோரிகள் நிறைந்துள்ளன. கூடுதலாக, அவை கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளில் குறைவாக உள்ளன. கேரட்டில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, கூடுதலாக உணவு நார்ச்சத்துக்கான அற்புதமான ஆதாரமாகவும் கேரட் உள்ளன.



Click it and Unblock the Notifications