Just In
- 1 hr ago
உலர் திராட்சையை தயிரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
- 1 hr ago
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago
நீங்க தினமும் குடிக்கிற இந்த பானங்களாலதான் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையே வருதாம் தெரியுமா?
- 5 hrs ago
Kumbh Mela 2021: மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Don't Miss
- Sports
கீழ்த்தரமாக இறங்கிய ஆஸி.. நடராஜன் மீது பிக்ஸிங் புகார்.. கங்குலி என்ன செய்யப் போகிறார்?
- Finance
இரண்டே நாளில் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. இதே 10 முக்கிய காரணங்கள்..!
- News
மதுரை மீனட்சி அம்மன் கோவில் தைப்பூசம் - 27ல் கதிர் அறுப்பு, 28ல் தெப்பத்திருவிழா
- Automobiles
எச்ஆர்-வி எஸ்யூவி காருக்கு மாற்றாக ஹோண்டாவின் புதிய வெஸில்!! பிப்ரவரியில் அறிமுகமாகுகிறது
- Movies
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா? இதுதான்...
இன்ஸ்ட்டாகிராமில் இப்பொழுது இவரது போஸ் தான் புது டிரெண்ட்யே. ஆமாங்க நம்ம ரன்வீர் சிங் தனது கட்டுமஸ்தான் உடலைக் காட்டி ரசிகர்கள் எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். தற்போது அவர் சாக்லெட் பாய்ல இருந்து ஜிம்பாடி ஆகி இருப்பது பெண்களை மிகவும் கவர்ந்து உள்ளது.
இன்ஸ்ட்டாகிராமில் போட்டோ போட்ட 18 மணி நேரத்திற்குள் 22 லட்சம் மக்களை அது கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏகப்பட்ட பேர் லைக்ஸ் போட்ட வண்ணம் உள்ளனர்.

இன்ஸ்ட்டாகிராம் புகைப்படம்
இந்த இன்ஸ்ட்டாகிராம் பதிவில் "நான் என் உடலை கட்டுக்கோப்பாக வைக்க கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்து வருகிறேன்" என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இதற்கு சோயா அக்தர் ஸ்மைலி ஈமோஜியுடன் அவரை பாராட்டி வாழ்த்தியுள்ளார். ஜாக்குலின், தன்மாய் பட், தினி மயுரியா, மற்றும் மிருணல் தாக்கூர் போன்ற பல பிரபலங்களிடமிருந்தும் சபாஷ் போன்ற பாராட்டுகளையும் ரன்வீர் சிங் பெற்றுள்ளார்.
MOST READ: முழு முகத்துக்கும் ஒரே பொருள வெச்சு மேக்அப் போடலாம்... எப்படினு பாருங்க...

ஆற்றல் மிக்க நடிகர்
ரன்வீர் சிங் சிறந்த ஆற்றல் மிக்க நடிகர். அவருடைய இந்த உடல் கட்டமைப்பும், சிறு புன்னகையும் போதும் ரசிகர்களை எளிதில் தன் வசம் இழுத்துக் கொள்வார். இவரது கட்டுமஸ்தான் உடலை பார்த்து பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் தற்போது ஏங்கிவருகிறார்கள்.
எனவே அவர் உங்களுக்காக தன் ரகசியத்தை திறக்கிறார். தன்னுடைய டயட் திட்டத்தையும் உடற்பயிற்சி முறைகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்ள முன் வந்துள்ளார்.

வொர்க்அவுட் ரகசியங்கள்
தினமும் 10 நிமிடங்கள் வார்ம் அப்பயிற்சிகளை மேற்கொள்ளுகிறேன். 20 நிமிடங்கள் தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புஷ் அப், டைப்ஸ், பர்பீஸ், டெத்லிப்ட்ஸ் மற்றும் புல்அப்ஸ் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 1 மணி நேரம் இதயம் தொடர்பான உடற்பயிற்சிகள். இந்த உடற்பயிற்சிகளை காலையில் மாலையில் என 11/2 மணி நேரம் செய்து வருகிறேன். இது மட்டுமல்லாமல் நீச்சல், ஓடுதல் மற்றும் சைக்கிளிங் போன்றவற்றையும் மேற்கொள்ளுகிறேன். இது ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைக்கிறது.
MOST READ: கடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்? என்ன கூடாது?

டயட் திட்டம்
வீட்டில் சமைத்த உணவுகளையே ரன்வீர் சிங் அதிகம் விரும்புகிறார். இப்பொழுது கொஞ்சம் ஜங்க் ஃபுட்களிலிருந்து தள்ளி இருக்கிறேன்.மேலும் ரன்வீர் இதற்காக நேர நேரத்துக்கு சாப்பிட தொடங்கியுள்ளார். மூன்று உணவு வேளைகளிலும் அதிக புரோட்டீன், குறைந்த கார்போஹைட்ரேட், குறைந்த உப்பு, குறைந்த ஆயில் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்கிறேன்.

என்ன சாப்பிடலாம்?
காலை உணவு: முட்டையின் வெள்ளைக் கரு, சிக்கன், பழங்கள், பச்சை காய்கறிகள்
மதிய உணவு: புரோட்டீன் உணவுகளான மீன், சாலமன்
ஸ்நாக்ஸ்: வால்நட்ஸ், பாதாம் பருப்பு
இரவு உணவுகள்: வறுத்த மட்டன் அல்லது சிக்கன் அல்லது ஒரு பெளல் வறுத்த காய்கறிகள் மற்றும் சாலமன் அதனுடன் கொஞ்சம் தேன்.

டிப்ஸ்கள்
காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள்
ஸ்டேமினா: உடற்பயிற்சி செய்யும் போது கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் ஆற்றலை ஏத்துங்கள்.
6 பேக்ஸ் வைப்பது எளிதல்ல. முயற்சி செய்யலாம். உணவுக் கட்டுப்பாடு மற்றும் போதுமான தண்ணீர் மற்றும் உடற்பயிற்சிகள் போன்றவை நல்ல பலனளிக்கும்.
புரோட்டீன் வகை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். மாத்திரைகள் வேண்டாம்
நீச்சல் மற்றும் நடத்தல், ஓடுதல் போன்ற உடற்பயிற்சிகளையும் சேர்த்து செய்து வாருங்கள். சர்க்கரை குறைவாக உள்ள உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
MOST READ: வண்டு ஓவியம் வரைகிறது... வண்டு வரைந்த ஓவியம் இன்டர்நெட்டில் வைரல்...

ஆல்கஹாலை தவிருங்கள்
உங்களுடைய கடின உழைப்பும் உறுதியும் போதும் நீங்களும் என்னை மாதிரி கட்டுமஸ்தான் ஆவதற்கு என்று தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.