Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
புரோட்டீன் நிறைந்த இந்த ஸ்நாக்ஸ்கள சாப்பிட்டீங்கனா... உங்க உடல் எடை டக்குனு குறைஞ்சிடுமாம் தெரியுமா?
சமையலறையில் அதிக நேரம் செலவழிக்க முடியாதபோது, வேர்க்கடலை வெண்ணெய் சாண்ட்விச் தயார் செய்யுங்கள். இதில் அதிக புரதம் நிறைந்திருக்கிறது, மிகவும் சுவையானது மற்றும் நீண்ட நேரம் உங்களை முழுதாக வைத்திருக்க உதவும்.
ஸ்நாக்ஸ் அல்லது நொறுக்குத் தீனியை விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா? ஆனால், ஒவ்வொரு முறை நொறுக்குத் தீனி சாப்பிடும்போது, அது நம் அனைவருக்கும் குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. ஏனெனில், இவை உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று நம்பப்படுகிறது. நம்மால் நிர்வகிக்க முடியாத போது அது மோசமாகிறது. இதனால், சிற்றுண்டியை முழுவதுமாக கைவிடுவதே தீர்வு என்று நினைக்கிறீர்கள். ஆனால், உங்கள் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை ஆரோக்கியமான புரத தின்பண்டங்களுடன் மாற்றினால் போதும், உங்கள் உடல் எடை கண்டிப்பாக குறையும். மக்கள் தங்கள் பசியை சமாளிக்க, உடனடியாக கிடைக்கும், சிற்றுண்டி உணவுகளை அடிக்கடி விரும்புகிறார்கள். இந்த உணவுகளில் பொதுவாக சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன.

அவை உணவுக்கு ஒரு மோசமான மாற்றாக அமைகின்றன. குறிப்பாக நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் எனில், அவற்றை தவிர்க்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், புரதம் உங்கள் மீட்புக்கு வந்துள்ளது. புரோட்டீன் தசையை கட்டியெழுப்பவும், எடை குறைக்கவும், சாப்பிட்ட பிறகு நிறைவாக உணரவும் உதவும். வேகமான எடை இழப்புக்கு உங்கள் வழக்கமான தின்பண்டங்களை இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள புரத தின்பண்டங்களுடன் மாற்றவும்

கிரேக்க தயிர்
கால்சியத்தின் நல்ல ஆதாரமாக இருப்பதைத் தவிர, கிரேக்க தயிரில் புரதமும் அதிகமாக உள்ளது. இது ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல், உங்களை முழுதாக உணர வைக்கும். இதனால், நீங்கள் அதிகப்படியான உணவை சாப்பிடுவதை தடுக்கலாம். எடை இழப்பு உங்கள் இலக்காக இருந்தால், வழக்கமான தயிரை விட கிரேக்க தயிர் சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காய்கறிகள்
காய்கறிகள் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதை ஏன் நாம் சிற்றுண்டியாகச் செய்யக்கூடாது? நீங்கள் சில காய்கறிகளை வேகவைக்கலாம், சாலட் செய்யலாம் அல்லது ஆரோக்கியமான சாண்ட்விச் செய்யலாம். காலிஃபிளவர், ப்ரோக்கோலி, அவகேடோ, முட்டைக்கோஸ், கீரை, பச்சைப் பட்டாணி ஆகிய எடை இழப்புக்கு உகந்த காய்கறிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

அவித்த முட்டைகள்
புரதம் மற்றும் வைட்டமின் பி அதிகம் உள்ளதைத் தவிர, முட்டைகளையும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். முட்டைகள் உடல் எடையை குறைப்பதற்கான ஒரு வழியாகும். ஏனெனில் அவை உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும் மற்றும் கலோரிகளை வேகமாக எரிக்க உதவும்.

கடலை வெண்ணெய்
சமையலறையில் அதிக நேரம் செலவழிக்க முடியாதபோது, வேர்க்கடலை வெண்ணெய் சாண்ட்விச் தயார் செய்யுங்கள். இதில் அதிக புரதம் நிறைந்திருக்கிறது, மிகவும் சுவையானது மற்றும் நீண்ட நேரம் உங்களை முழுதாக வைத்திருக்க உதவும்.

பாதாம்
சிற்றுண்டிக்கு சுவையாகவும் வசதியாகவும் இருப்பதுடன், புரதம், வைட்டமின் ஈ, ரிபோஃப்ளேவின், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பாதாமில் அதிகமாக உள்ளது. இது தவிர, நீங்கள் பாதாமை ஊறவைக்கும் போது, அது லிபேஸ் போன்ற சில நொதிகளை வெளியிடுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.

வறுத்த கொண்டைக்கடலை
உங்கள் சமையலுக்கு சிறிது நேரம் இருந்தால், பருப்பு வகைகள் மற்றும் கொண்டைக்கடலையை பரிசோதித்துப் பார்க்கலாம். அவை புரதம், ஃபோலேட், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றில் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் எடை இழப்பை எளிதாக்கும்.

பழங்கள்
நீங்கள் விரைவான, சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒன்றைத் தேடும் போது பழங்கள் ஒரு சிறந்த வழி. ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, தர்பூசணி, ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் கிவி போன்ற பழங்களை நீங்கள் சமைக்க விரும்பாத போது எடுத்துக் கொள்ளுங்கள்.

பாலாடைக்கட்டி
பாலாடைக்கட்டி ஆரோக்கியமானதாகவும் அதிக புரதச்சத்து உள்ளதாகவும் மட்டுமல்லாமல் அதன் பல்துறைத்திறனுக்காகவும் விரும்பப்படுகிறது. இதில் கால்சியம் அதிகம் உள்ளது.மேலும் நமது உடல்கள் போதுமான அளவு கால்சியம் மற்றும் புரதத்தைப் பெறும்போது, அதிக கொழுப்பை எரிக்க முனைகிறோம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சியா விதைகள் புட்டு
இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமாகி வருகிறது. ஒரு சூப்பர்ஃபுட் என்பதால், சியா விதைகள் அதன் உயர் புரதம் மற்றும் கால்சியம், ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு போன்ற பிற ஊட்டச்சத்துக்களால் ஆரோக்கிய நன்மைகளுடன் ஏற்றப்படுகின்றன. எனவே, நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் அது உதவும்.



Click it and Unblock the Notifications
