Latest Updates
-
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும்
விந்தணு குறைபாட்டால் கஷ்டப்படுறீங்களா? அப்ப இந்த டயட் ஃபாலோ பண்ணுங்க...
இன்று பல ஆண்கள் விந்தணு குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையை ஒலிகோஸ்பெர்மியா என்று அழைப்பர். இப்பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனித்து டயட்டில் மாற்றங்களை மேற்கொண்டால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம்.
இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று கருவுறாமை. இது கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20-30% அதிகரித்துள்ளது. பெற்றோராவதற்கு தயாராக வேண்டியது பெண் மட்டுமின்றி ஆணும் சமமான முக்கிய பங்கை வகிக்கிறார். ஒரு பெண்ணால் கருத்தரிக்க முடியாமல் போவதற்கு ஆண்களின் விந்தணுக்கள் தரம் மற்றும் எண்ணிக்கை குறைவு கூட முக்கிய காரணமாக இருக்கலாம்.

இன்று பல ஆண்கள் விந்தணு குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையை ஒலிகோஸ்பெர்மியா என்று அழைப்பர். ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்துவில் 15 மில்லியனுக்கும் குறைவாக விந்தணுக்கள் இருந்தால், அந்த ஆண் ஒலிகோஸ்பெர்மியாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அர்த்தம். இந்த நிலையின் பொதுவான அறிகுறிகளாவன நீர்ப் போன்று விந்து வெளியேறுவது மற்றும் குறைவான அளவில் விந்து வெளியேற்றம், பாலியல் இயலாமை, விரை வீக்கம் மற்றும் வலி, உடல் மற்றும் முகத்தில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பது.
ஒலிகோஸ்பெர்மியாவால் பாதிக்கப்பட்டவர்கள், வைட்டமின் சி, வைட்டமின் பி12, ஜிங்க் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்த சரிவிகித டயட்டை மேற்கொள்வதன் மூலம் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கலாம். ஆரம்பத்திலேயே கவனித்து டயட்டில் மாற்றங்களை மேற்கொண்டால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம். இல்லாவிட்டால் ஆண் மலட்டுத்தன்மைக்கு வழிவகுத்துவிடும்.
இப்போது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் டயட் திட்டம் குறித்தும், சில நாட்டு வைத்தியங்களையும் காண்போம்.

அன்றாடம் மேற்கொள்ள வேண்டிய டயட் திட்டம்
அதிகாலை: மூலிகை டீ/க்ரீன் டீ/ஊற வைத்த பாதாம்/வால்நட்ஸ்
காலை உணவு: வெஜ் தாலியா/அவல் உப்புமா/ ராகி ரொட்டி/ சப்பாத்தி மற்றும் தால்/முட்டை வெள்ளைக்கரு - 1
காலை உணவிற்கு பின்: பழங்கள்/இளநீர்/மூலிகை டீ/சாலட்
மதியம்: சப்பாத்தி/சாதம்/காய்கறிகள்+தால்+சாலட்/அசைவம் (வாரத்திற்கு ஒரு நாள்)
மாலை: மூளைக்கட்டிய பயிர்கள்/க்ரீன் டீ/பருப்பு சூப்/மூலிகை டீ/ சாலட்
இரவு: சப்பாத்தி/சாதம் + தால்

சாப்பிட வேண்டியவை மற்றும் சாப்பிடக் கூடாதவை
தானியங்கள்
சாப்பிட வேண்டியவை - கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், திணை, கோதுமை, பார்லி
தவிர்க்க வேண்டியவை - சுத்திகரிக்கப்பட்ட மாவு வகைகள்

காய்கறிகள்
சாப்பிட வேண்டியவை - சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பூசணிக்காய், இஞ்சி, செலரி, கத்திரிக்காய், வெங்காயம், கொத்தமல்லி, முள்ளங்கி, ப்ராக்கோலி, காலிஃப்ளவர், கேல், கொலார்டு கீரை, முட்டைக்கோஸ், பீட்ரூட், லெட்யூஸ், பார்ஸ்லி, டர்னிப், கேரட், முள்ளங்கி, சுரைக்காய், பீர்க்கங்காய்.
தவிர்க்க வேண்டியவை - டப்பாக்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள்

பழங்கள்
சாப்பிட வேண்டியவை - தர்பூசணி, வாழைப்பழம், கொய்யாப்பழம், பப்பாளி, முலாம் பழம், ஆப்பிள், சப்போட்டா, ப்ளம்ஸ், மாதுளை, கிவி, பேரிக்காய், அவகேடோ, ராஸ்ப்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி, செர்ரி, ப்ளூபெர்ரி
தவிர்க்க வேண்டியவை - எதுவும் இல்லை

உலர் பழங்கள்/விதைகள்/நட்ஸ்
சாப்பிட வேண்டியவை - வால்நட்ஸ், பாதாம், முந்திரி, ஹாசில் நட்ஸ், பிரேசில் நட்ஸ், பூசணி விதைகள், ஆளி விதைகள்
தவிர்க்க வேண்டியவை - எதுவும் இல்லை

பருப்பு வகைகள்
சாப்பிட வேண்டியவை - அனைத்து வகையான பருப்புக்களையும் சாப்பிடலாம்.
தவிர்க்க வேண்டியவை - கொள்ளு

மசாலா பொருட்கள்
சாப்பிட வேண்டியவை - மஞ்சள், மல்லி, வெந்தயம், சீரகம், மிளகு, தைம், ஏலக்காய், பட்டை
தவிர்க்க வேண்டியவை - அதிகப்படியான உப்பு மற்றும் வர மிளகாய்

பால் பொருட்கள்
சாப்பிட வேண்டியவை - பால், மோர், மாட்டு நெய், சீஸ், வெண்ணெய்
தவிர்க்க வேண்டியவை - சோயா பால், டோஃபு, டீ, காபி

அசைவம்
சாப்பிட வேண்டியவை - சிக்கன், முட்டை, சால்மன் மீன், மத்தி, டூனா, கானாங்கெளுத்தி
தவிர்க்க வேண்டியவை - மாட்டிறைச்சி, பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த இறைச்சிகள், பன்றி இறைச்சி, இறால், நண்டு, லாப்ஸ்டர்

கொழுப்புகள்
சாப்பிட வேண்டியவை - மாட்டு நெய், கடுகு எண்ணெய், ஆலிவ் ஆயில், சோயா எண்ணெய், கனோலா எண்ணெய், ரைஸ் ப்ரன் ஆயில், பாதாம் ஆயில், தேங்காய் எண்ணெய்
தவிர்க்க வேண்டியவை - பாம் ஆயில்

பானங்கள்
சாப்பிட வேண்டியவை - இளநீர், கரும்பு ஜூஸ், சூப், மூலிகை டீ, வீட்டில் தயாரித்த ஜூஸ்கள்
தவிர்க்க வேண்டியவை - க்ரீம் நிறைந்த திரவங்கள், கேன் சூப், பாக்கெட் சூப், ஆல்கஹால், குளிர்பானங்கள், கார்போனேட்டட் பானங்கள்

மற்றவை
சாப்பிட வேண்டியவை - வெல்லம், தேன்
தவிர்க்க வேண்டியவை - ஆல்கஹால், ஜங்க் உணவுகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள்

நாட்டு வைத்தியங்கள்
* வெந்தய விதைகளை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் வெந்தயத்தை சாப்பிட, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
* 1/2 டீஸ்பூன் பசு மாட்டு நெய்யை ஒரு டம்ளர் பாலில் போட்டு கலந்து, தினமும் குடிக்க வேண்டும்.
* தினமும் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
* இரவு தூங்கும் முன் 2-3 பேரிச்சம் பழத்தை வெதுவெதுப்பான பாலில் போட்டு தினமும் உட்கொள்வதன் மூலம், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

நினைவில் கொள்ள வேண்டியவைகள்:
* மதுவைத் தவிர்க்கவும்.
* புகைப்பிடிப்பதை கைவிடவும்.
* ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
* தினமும் போதுமான தூக்கத்தைப் பெற வேண்டும்.
* உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும்.
* தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications

