Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு?
நீங்க உணவில் உப்பு அதிகமா சேர்ப்பீங்களா? இனிமே அப்படி செய்யாதீங்க.. இல்லன்னா கஷ்டப்படுவீங்க..
சோடியத்தை அதிகளவு உட்கொள்ளும் போது, அது உடலில் பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். இப்போது உணவில் உப்பை குறைவாக சேர்த்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
நாம் அனைவருமே உண்ணும் உணவு நல்ல சுவையாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். உணவின் சுவையை அதிகரிக்க உதவும் ஓர் முக்கியமான உணவுப் பொருள் தான் உப்பு. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது அக்கால பழமொழி. ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் போன்றவற்றை வைத்து பார்க்கும் போது, அளவான உப்பே ஆரோக்கியம். சோடியம் என்றதும் பலருக்கும் நினைவிற்கு வருவது உப்பு தான். ஆனால் இந்த சோடியம் காய்கறிகள் மற்றும் முட்டைகளிலும் இயற்கையாகவே உள்ளன.

சோடியம் ஒருவரது உடலில் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் இந்த சோடியத்தை அளவாக எடுத்தால் மட்டுமே அது நற்பலனை வழங்கும். மேலும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் அல்லது கல்லீரல் நோய் உள்ளவர்கள் குறைவான அளவிலேயே சோடியத்தை எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சொல்லப்போனால் இவர்கள் உணவில் உப்பு சேர்க்காமல் இருப்பதே நல்லது. சோடியத்தை அதிகளவு உட்கொள்ளும் போது, அது உடலில் பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். இப்போது உணவில் உப்பை குறைவாக சேர்த்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

புற்றுநோயின் அபாயம் குறையும்
ஆய்வுகளில் கூட அதிக உப்பு நிறைந்த உணவுகளை உண்பது வயிற்று புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. ஏனெனில் அதிகப்படியான உப்பானது வயிற்றின் உட்புறச் சுவற்றினை சேதப்படுத்துவதால், வயிற்று புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கிறது. அதுவே அளவான உப்பை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, அது வயிற்று புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

கண்களுக்கு நல்லது
ஒருவர் உணவில் உப்பை குறைவாக சேர்த்து சாப்பிடும் போது, உயர் இரத்த அழுத்தத்தின் அபாயம் குறையும். ஒருவரது பார்வையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு உயர் இரத்த அழுத்தமும் ஓர் முக்கிய காரணம். எப்படியெனில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, அது இரத்த நாளங்களை சேதப்படுத்துவதோடு, சில சமயங்களில் பார்வை இழப்பையும் உண்டாக்குகிறது. எனவே கண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்.

இரத்த அழுத்தம் சீராகும்
அதிகப்படியான உப்பு/சோடியம் நிறைந்த உணவுகள் இரத்த அழுத்தத்தை சட்டென்று அதிகரிக்கும். இரத்த அழுத்தம் அதிகமானால், அது இரத்த குழாய்கள் மற்றும் இதயத்தை மோசமாக பாதித்து, இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே உப்பு குறைவான உணவுகளை உண்ணும் போது, அது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

சிறுநீரக நோய்கள் தடுக்கப்படும்
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்யும் முக்கியமான உறுப்பு தான் சிறுநீரகம். இந்த சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலில் உள்ள நச்சுக்களை திறம்பட வெளியேற்ற முடியும். ஆனால் உப்புள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டால், அது இரத்தத்தில் சோடியத்தின் அளவை அதிகரித்து, சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்து, சேதத்தை ஏற்படுத்தும். அதுவே ஆரம்பத்தில் இருந்தே உணவில் உப்பை அளவாக சேர்த்து உட்கொண்டு வந்தால், இம்மாதிரியான பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

எலக்ட்ரோலைட் சமநிலையில் இருக்கும்
உப்பு குறைவான உணவுகளாது உடலில் எலக்ட்ரோலைட்டுக்களை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. மேலும் இது உடலின் pH அளவை சமநிலையில் பராமரிக்க உதவி புரிந்து, தசைகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் அடிக்கடி தசைப்பிடிப்புகள் ஏற்படாமலும் தடுக்கிறது.

ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு உட்கொள்ளலாம்?
உலக சுகாதார அமைப்பானது ஒரு நாளைக்கு பெரியவர்கள் 5 கிராம் அல்லது ஒரு டீஸ்பூனுக்கும் குறைவான அளவிலேயே உப்பை உட்கொள்ள பரிந்துரைக்கிறது. அதுவும் 2 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பெரியவர்களை விட குறைவான அளவில் உப்பை சேர்க்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. இருப்பினும் குழந்தைகளின் ஆற்றல் தேவைகளுக்கு ஏற்ப உட்கொள்ளும் உப்பின் அளவில் மாற்றம் ஏற்படலாம்.
எனவே நண்பர்களே! நீங்க ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ ஆசைப்பட்டால், முதலில் உங்கள் உணவில் உப்பை அதிகம் சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள். 'அளவான உப்பே ஆரோக்கியம்' என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications