Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
இந்த 5 மசாலா பொருட்கள் கலந்த தண்ணீரை குடிச்சீங்கனா... 5 நாளில் உங்க தொப்பை குறைஞ்சிடுமாம்!
ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரக விதைகளை சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை சிறிது எலுமிச்சை துண்டுகள், இஞ்சி மற்றும் தேன் சேர்த்து கொதிக்க வைத்து டீ போல் குடிக்கவும்.
சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பெரும்பாலான மக்கள் உடல் பருமானால் அவதிப்படுகிறார்கள். தொப்பை கொழுப்பு மற்றும் உடல் பருமன் உங்கள் தோற்றம் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உடல் எடையை குறைக்க நீங்கள் கடுமையாக போராடுகிறீர்களா? ஆம், உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. உடல் எடையை குறைக்க நீங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம். ஆனால், எதுவும் உங்களுக்கு பலன் அளிக்கவில்லையா? கவலையை விடுங்க, நீங்கள் வழக்கமாக குடிக்கும் தண்ணீரில் சில எளிய சமையலறை பொருட்களைச் சேர்த்து குடிப்பதன் மூலம், ஒரு சில நாட்களில் பிடிவாதமான கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்கலாம். தண்ணீரைக் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியுமா? என்று நீங்கள் சந்தேகிக்கலாம்.

ஆனால், நீங்கள் ஆரோக்கியமான சமச்சீரான உணவைப் பின்பற்றி, வழக்கமான உடற்பயிற்சி செய்து வந்தால், உங்கள் வழக்கமான தண்ணீரில் இந்த எளிய பொருட்களை சேர்த்தல்கள் உண்மையில் நிலையான வழியில் எடையைக் குறைக்க உதவும். எனவே, எளிதாகக் கிடைக்கும் இந்த சமையலறைப் பொருட்களைக் கொண்டு எடையைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

வெந்தய நீர்
இந்த எளிய பானத்தை 1 டம்ளர் தண்ணீரில் 1 டீஸ்பூன் மெத்தி விதைகளை சேர்த்து தயாரிக்கலாம். இந்த தண்ணீரை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் கொதிக்க வைத்து, நாள் முழுவதும் குடிக்கவும். மெத்தி விதைகள் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தவும் உதவுகின்றன. அதுமட்டுமல்லாமல், இந்த தண்ணீரைக் குடிப்பதன் மூலம், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.

ஓமம் நீர்
அஜ்வைன் என்றும் அழைக்கப்படும் கேரம் விதைகள் ஒரு ஆரோக்கியமான மசாலாவாகும். இது உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஏற்றது. வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் அஜ்வைனை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் அந்த தண்ணீரை கொதிக்க வைத்து 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து இந்தக் கலவையைக் குடிக்கவும். இந்த பானம் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, நீர் தக்கவைப்பு மற்றும் வீக்கத்தை குறைக்கும். இது உங்கள் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.

பெருஞ்சீரகம் தண்ணீர்
ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரக விதைகளை சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை சிறிது எலுமிச்சை துண்டுகள், இஞ்சி மற்றும் தேன் சேர்த்து கொதிக்க வைத்து டீ போல் குடிக்கவும். நாள் முழுவதும் இந்த பானத்தை பருகுவது வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்த உதவுகிறது. இது வாயுவை குறைக்கிறது மற்றும் பெருஞ்சீரகத்தில் உள்ள நொதிகளின் இருப்பு செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொழுப்பு எரியும் செயல்முறையை அதிகரிக்கிறது.

மஞ்சள் நீர்
காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை மஞ்சளைச் சேர்ப்பது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், மஞ்சளில் உள்ள சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. மேலும் இந்த மசாலாவில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வெதுவெதுப்பான நீரில் இணைக்கப்படும் போது சிறந்த எடை மேலாண்மைக்கு உதவும்.

எலுமிச்சை சீரகம் தண்ணீர்
இந்த பாரம்பரிய கலவை கொழுப்பை எரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி இருப்பதால் சிறந்த எடை மேலாண்மைக்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி, உணவு நார்ச்சத்து, சீரகத்தில் உள்ள சத்துக்கள், தொப்பை மற்றும் நீர் தேக்கத்தை குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு டீஸ்பூன் சீரகத்தை 1 கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து, இந்தக் கலவையை காய்ச்சி வடிகட்டி, எலுமிச்சைத் துண்டுகளைச் சேர்த்துக் குடித்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.



Click it and Unblock the Notifications