For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் அவதி அவதியா சாப்பிட்டுட்டு ஓடறீங்களா? நீங்க இத மட்டும் ஒரு நிமிஷம் படிங்களேன்...

By Mahibala
|

காலை உணவின் முக்கியத்துவம் என்ன என்பது நம் எல்லோருக்குமே தெரிந்தது தான். ஆனால் பாருங்கள். நாம் யாருமே காலை உணவை நிதானமாகச் சாப்பிடுவதே இல்லை. காலை உணவை தவிர்க்கத்தானே கூடாது.

எப்படியாவது சாப்பிட்டால் சரிதானே என்று நினைக்கிறோம். ஆனால் நீங்கள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வேகவேகமாக உணவைச் சாப்பிடுகிற பொழுது, என்னென்ன மாற்றங்கள் நம்முடைய உடலில் ஏற்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்னதான் பிரச்சினை?

என்னதான் பிரச்சினை?

முதலில் உங்களுடைய சாப்பிடும் தட்டில் என்ன சாப்பிடுகிறீர்கள், எந்த மாதிரி உணவை வேகமாக சாப்பிட்டு முடிக்கிறீர்கள் என்பதை முதலில் நன்கு கவனியுங்கள்.

எந்தெந்த உணவுகளை வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என்று நன்கு உற்று கவனியுங்கள். அதனால் அப்படி சாப்பிடுகிற பொழுது, நம்முடைய உடலிலும் ஜீரண மண்டலத்திலும் என்னென்ன மாதிரியாக மாற்றங்கள் உண்டாகின்றன என்பது பற்றிய புரிதல் நமக்கு மிக அவசியம்.

MOST READ: பிணத்தை எரித்து அதை வாழைப்பழத்தில் தொட்டு சாப்பிடும் விநோத பழக்கம்... எங்க நடக்குது தெரியுமா?

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

ஜப்பானில் கடந்த ஐந்து வருடங்களாக 1083 வயது வந்த இளைஞர்களை வைத்து ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் இளைஞர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒரு குழுவினரைச் சேர்ந்தவர்கள் மிக மெதுவாக உணவு உண்பவர்கள், ஒரு குழுவினர் சாதாரணமாக சராசரியாக உணவை எடுத்துக் கொள்வர்கள், மற்றொரு குழுவினர் உணவை மிக வேகடாக சாப்பிட்டு முடிக்கக் கூடியவர்கள்.

டயட் மற்றும் பிற

டயட் மற்றும் பிற

இந்த ஆராய்ச்சியில் வெறுமனே கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதற்கு முன்னதாக அவர்களுக்கு தேர்வும் வைக்கப்பட்டது. அவர்களுடைய உடற்பயிற்சி முறைகள், என்ன மாதிரியான டயட்டை பின்பற்றுகிறார்கள் போன்ற அடிப்படையான செய்திகள் அனைத்தும் சேகரிக்க்பட்டன.

மெட்டபாலிசம் பிரச்சினைகள்

மெட்டபாலிசம் பிரச்சினைகள்

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எவருக்கும் மெட்டபாலிசம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் எதுவும் கிடையாது என்பது தான்.

MOST READ: 4 மாத கர்ப்பமாக இருந்த ஆட்டை கதறக் கதற பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன்...

ஆராய்ச்சி முடிவு

ஆராய்ச்சி முடிவு

இந்த ஐந்து வருட ஆராய்ச்சியின் முடிவில் கிடைத்த ரிப்போர்ட்டின் படி, 84 பேர் மெட்டபாலிச பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்றும் அதற்கு அவர்கள் உணவை சாப்பிட்ட வேகமும் தான் காரணம் என்று கண்டறியப்பட்டது.

சாதாரணமாக சாப்பிடுபவர்குளைக் காட்டிலும் வேகமாகச் சாப்பிடுகிறவர்களில் 89 சதவீதம் பேர் இந்த மெட்டபாலிசம் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

எடை பிரச்சினை

எடை பிரச்சினை

வேகமாக சாப்பிடுகிறவர்களுக்கு மெட்டபாலிசம் சிண்ட்ரோம் மட்டுமல்ல, அளவுக்கு அதிகமாக உடல் எடையும் கூடியிருந்தது. மார்புப் பகுதி பெருத்துவிட்டது. அதேபோல் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரையின் அளவும் துரிதமாக அதிகரித்திருந்தது தெரிய வந்தது.

சாப்பிட்ட திருப்தி

சாப்பிட்ட திருப்தி

அதேபோன்று வேகமாக உணவை சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு உணவை சாப்பிட்ட திருப்தி இருப்பது கிடையாது. எவ்வளவு சாப்பிட்டாலும் மீண்டும் பசியாக இருப்பது போன்ற ஒரு உணர்வே இருக்கும். அதனால் திரும்பத் திரும்ப அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும். இதனால் குளுக்கோஸ் உற்பத்தியில் தடையும் இன்சுலின் சுரப்பு சீரற்றும் இருக்கும்.

என்ன பிரச்சினை வரலாம்?

என்ன பிரச்சினை வரலாம்?

வேகவேகமாக அவதியாக உணவைச் சாப்பிட்டுவிட்டு செல்வதால் மிகவும் ரிஸ்க்கான அடிவயிற்றுச் சதைப்பெருக்கம், அதனால் உடல்பருமன் ஆவது, உடலில் நல்ல கொழுப்புகளின் அளவு குறைதல், உயர் டிரைகிளிசரைடுஸ், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த சர்க்கரை, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், நீரிழிவு போன்ற பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. அதனால் உணவை மிக மெதுவாகவும் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. நிதானமாக எந்த உணவை சாப்பிட்டாலும் அதை நன்கு பற்களால் மென்று நாக்கில் சுவை நரம்புகள் தூண்டப்பட்டு உமிழ்நீர் சுரக்கும்படி சாப்பிடப் பழகுங்கள்.

MOST READ: 12 ராசிகளும் உங்க ஜாதகப்படி இந்த வருஷம் செய்ய வேண்டிய பரிகாரம் ஒன்று இருக்கு... மறக்காம செய்ங்க

குறிப்பு

குறிப்பு

இதையெல்லாம் மனசுல வெச்சிகிட்டு இனிமே மெதுவாக சாப்பிடறதா, வேகமாக அவதி அவதியா சாப்பிடறதா இல்ல சாதாரணமா மென்று சுவைத்து சரியான அளவில் சரிவிகித உணவை சாப்பிடறதா என்று நீங்களே முடிவு செய்யுங்க. ஆரோக்கியமான வாழ்க்கை வாழுங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

what really happens to your body when you eat fast

Watching what you eat can be easier said than done, but a recent study shows it might not just be about what’s on your plate—it could be about how quickly it disappears.
Story first published: Wednesday, February 27, 2019, 17:40 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more