Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
ஓவர் வெயிட்டா? ஒரே மாசத்துல 20 கிலோ குறைய இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்
எச்சிஜி டயட் பற்றியும் அதனால் எடை எப்படி குறைப்பது என்பது பற்றியும் இங்கே விவாதிக்கப்பட்டுள்ளது. அந்த டயட் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய கணக்குப்படி பார்த்தால் கிட்டத்தட்ட உலகளவில் 2.1மில்லியன் மக்கள் அதிக உடல் எடையை கொண்டுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 30% ஆகும்.

இந்த உடல்பருமன் ஒரு பிரச்சினையே போதும் ஏகப்பட்ட நோய்கள் நம்மை தாக்க ரெடியாகி விடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். எனவே இந்த உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் முதலில் நாம் ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

எடை குறைக்க எளிமையான டயட்
அந்த வகையில் பார்க்கும் போது உடல் எடையை குறைக்க நிறைய டயட் முறைகள் வந்த வண்ணம் உள்ளது. இதுவரை கீட்டோ டயட், மெடிடேரியன் டயட், போலியோ டயட் போன்ற டயட்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை எல்லாம் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. இதுவரை குறைந்த கொழுப்பு உணவைக் கொண்டே உடல் எடை குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் கார்போஹைட்ரேட் உணவு முறை பின்பற்றப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு எளிமையான டயட் முறை தான் இந்த ஹெச்சிஜி டயட்.

ஹெச்சிஜி டயட்
இந்த டயட் முறை 60 ஆண்டுகாலமாக இருந்து வரும் டயட் முறையாகும். ஹெச்சிஜி என்றால் ஹியூமன் க்ரோனிக் கோனாடோஃபின் என்று பெயர். இது கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடியில் உற்பத்தியாகும் ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் தான் ஆண் மற்றும் பெண் கருவுறுதலில் ஏற்படும் சிக்கல்களை களைகிறது. இந்த ஹார்மோன் எடை இழப்பிற்கு உதவுகிறது. எனவே இதை வைத்து தான் இந்த டயட் முறையை கொண்டு வந்தனர்.

ஹெச்சிஜி டயட் திட்டம்
இது ஒரு குறைந்த கலோரி டயட் முறை. 500 - 800 கலோரிகள் மற்றும் ஹெச்சிஜி ஹார்மோன் ஊசி அல்லது ஸ்ப்ரே போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு மற்றும் ஸ்டார்ச் போன்றவற்றை இந்த டயட் முறையில் தவிர்க்க வேண்டும்.
இந்த கர்ப்பகால ஹார்மோன் தான் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஆற்றலை கொடுக்கிறது. ஏனெனில் கர்ப்ப காலத்தின் போது வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்பட்டு பசியின்மை ஏற்பட்டு போதுமான ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே அந்த மாதிரியான சமயங்களில் நமது உடலுக்கு ஆற்றலை தருகிறது. அதே செயலைத் தான் நாம் இந்த ஹெச்சிஜி டயட் முறையில் பயன்படுத்துகிறோம்.
சீக்கிரமாக உடல்எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சரியான டயட். ஒரு நாளைக்கு 0.45 (1 பவுண்ட்) கிலோ கிராம் அளவு உடல் எடையை குறைக்க முடியும் என்றால் பார்த்துக்கோங்களே.

எடை குறைப்பு
முதலில் எடுத்துக் கொள்ளும் கலோரியை குறைக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 500 கலோரிகள் எடுத்துக் கொண்டு இந்த டயட்டை ஆரம்பிக்க வேண்டும்.
முதல் 8 வாரத்திற்கு ஹெச்சிஜி ஹார்மோன் ஊசி போட்டு அதன் மூலம் கலோரிகள் எடுத்துக் கொள்வதை குறைக்க வேண்டும். இந்த ஹார்மோன் உணவு எடுப்பதை குறைக்கிறது.

மாற்றங்கள்
இந்த டயட் நமது மெட்டா பாலிசத்தை அதிகரித்து கொழுப்புகளை கரைக்கிறது. இந்த ஹார்மோன் நம் பசியை குறைத்து இயல்பாகவே உணவு உட்கொள்வதை குறைத்து விடும். எனவே கலோரிகள் குறைவதால் நமது உடலில் தங்கியுள்ள கொழுப்புகள் எரிந்து ஆற்றலாக மாற்றப்படும். இதனால் ஆட்டோமேட்டிக்கா உடல் எடை குறைய ஆரம்பித்து விடும்.

எப்படி கொழுப்பை கரைக்கிறது?
இந்த ஹெச்சிஜி ஹார்மோன் உடலில் உள்ள மற்ற ஹார்மோன் களை தூண்டி உடல் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கிறது. இதனால் உடம்பில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. இதை செய்ய இந்த ஹெச்சிஜி ஹார்மோன் மூளையில் உள்ள ஹைப்போ தலாமஸ் பகுதியில் உள்ள கெமிக்கல்களை தூண்டி உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது.

உடல் எடை குறையீட்டு எண்
நீங்கள் இந்த ஹெச்சிஜி டயட் முறையை பின்பற்ற விரும்பினால் உங்கள் உடல் எடை குறியீட்டு எண் 20 க்கு மேலாக இருக்க வேண்டும்.

ஹெச்சிஜி டயட் படிநிலைகள்
இதை 3 படிநிலைகளாக பிரித்துள்ளனர். பின்பற்றப்படும் நாட்களை பொருத்து இதை பிரித்து வைத்துள்ளனர். 26 நாட்கள், 40 நாட்கள் மற்றும் 13 நாட்கள். இதைப் பொறுத்து உங்கள் உடல் எடையும் குறைக்கப்படும்.
படிநிலை 1: ஹெச்சிஜி ஹார்மோன் ஏற்றுதல்
இது முதல் இரண்டு நாட்கள் செய்யப்படுகிறது. இது எல்லா படி நிலைக்கும் பொதுவானது. முதல் இரண்டு நாட்கள் ஹெச்சிஜி ஹார்மோன் மருந்தை ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவிற்கு முன்னால் (காலை, மதியம், இரவு) எடுத்துக் கொள்ள வேண்டும். இதை எடுத்துக் கொள்ளுவதற்கு முன்னாலும் பின்னாலும் 15 நிமிடங்கள் வரை எதுவும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது.
MOST READ: காலையில பாத்ரூம் போனா முக்க வேண்டியிருக்கா? இந்த 5 விஷயத்த ஃபாலோ பண்ணுங்க ஸ்மூத்தா போகும்

ஹெச்சிஜி ஊசி போடுதல்
0.38 மில்லி லிட்டர் உள்ள இந்த ஹெச்சிஜி ஹார்மோன் ஊசியை நாக்கிற்கு அடியில் 15 விநாடிகள் வைக்க வேண்டும். அடுத்து 48 மணி நேரத்தில் கொழுப்பு அதிகமான உணவை உட்கொள்ள வேண்டும். பட்டர், முட்டை, அவகேடா, நட்ஸ், பால் பொருட்கள், தயிர் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.
இந்த படிநிலை நல்ல கொழுப்புகளை செல்களில் சேகரித்து கெட்ட கொழுப்புகளை எளிதாக கரைக்க உதவுகிறது. இதன் படி செய்தால் தீவிர உடல் எடை இழப்பை காணலாம்.

படிநிலை 2: டயட்
26 நாட்கள் டயட் என்றால் முதல் இரண்டு நாட்களை தவிர்த்து 3 வது நாளிலிருந்து 23 வரையும், 40 நாட்கள் டயட் என்றால் 3-37 வரையும், 3-13 வரையும் பின்பற்ற வேண்டும்.
போனபடி நிலையில் கொழுப்பு நிறைந்த உணவை எடுத்து நாம் தற்போது ஆரோக்கியமான உணவை எடுக்க வேண்டும். நீங்கள் தினமும் 3 வேளை ஹெச்சிஜி ஹார்மோன் மருந்தை எடுத்து வர வேண்டும். இப்பொழுது 500 கலோரி டயட்டிற்கு தயாராகுங்கள்.

500 கலோரி டயட்
26 நாட்கள் டயட்டில் கடைசி மூன்று நாட்களான (24-26), அதே மாதிரி 40 நாட்கள் டயட்டில் (38-40), 16 நாட்கள் (14-16)500 கலோரி டயட்டை மேற்கொள்ள வேண்டும். இப்பொழுது ஹெச்சிஜி ஹார்மோன் மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
படிநிலை 3: பராமரிப்பு படிநிலை
இது ஒரு கஷ்டமான படிநிலை ஆகும். இந்த டயட் முறைக்கு உங்கள் உடம்பு ஒத்துக் கொண்டால் போதும். கொழுப்பில்லாத, சர்க்கரையில்லாத உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த நிலை எடை கூடாமல் பராமரிக்க உதவுகிறது. புதிதாக குறைந்த எடையை நீடிக்க உதவுகிறது. இந்த நிலையில் நீங்கள் ஸ்டார்ச் வகை உணவுகளை மறுபடியும் எடுத்துக் கொள்ள தொடங்கலாம். இந்த நிலையில் ஒரு நாளைக்கு 15:00 கலோரிகள் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஹெச்சிஜி டயட் உணவு திட்டம்
படிநிலை 1:
முதல் இரண்டு நாட்களுக்கு அதிக கலோரிகள் மற்றும் அதிக கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஹெச்சிஜி மருந்தும் எடுத்துக் கொள்ளுங்கள்.
காலை உணவு :8 மணியளவில் 2 வேக வைத்த முட்டை, 1 கப் வெதுவெதுப்பான பால், 4 பாதாம் பருப்பு
மதிய உணவு : 12.30 மணியளவில் 1 கப் டூனா அல்லது மஸ்ரூம் சாலட்
மாலை ஸ்நாக்ஸ் : 4 மணியளவில் 10 பிஸ்தா பருப்பு, 1 கப் க்ரீன் டீ
இரவு உணவு : 7 மணியளவில் 1 மீடியம் கப் பருப்பு சூப், 1 கப் வறுக்கப்பட்ட காய்கறிகள்.

படிநிலை 2:
இந்த நிலையில் மூன்று வேளைகளில் 500 கலோரிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். 3-5 வாரங்கள் ஹெச்சிஜி ஹார்மோன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காலை உணவு :8 மணியளவில் 1 வேக வைத்த முட்டை, 1 கப் க்ரீன் டீ, 1 வாழைப்பழம், 1 கப் பிளாக் காபி
மதியம் : 12.30 மணியளவில் 1 கப் பருப்பு சூப், 2 க்ரில்டு மீன், 1/2 கப் பிரக்கோலி, கேரட், பிரெஞ்சு பீன்ஸ்
இரவு - 7 மணியளவில் 1/2 கப் வேக வைத்த பீன்ஸ், 1 கப் பச்சை காய்கறிகள்.

படிநிலை 3
இந்த நிலையில் கலோரி அதிகமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் உணவுகளை 3 வாரம் தவிர்க்க வேண்டும். ஹெச்சிஜி ஹார்மோன் எடுக்க தேவையில்லை.
காலை உணவு
8 மணியளவில் வாழைப்பழம், ஓட்ஸ் மீல், 1 கப் பிளாக் காபி, க்ரீன் டீ எடுத்துக் கொள்ளுங்கள்.
மதியம் :12.30 மணியளவில் 1 பெளல் சாலட் அல்லது சூப், 1 கப் தயிர்
மாலை :4 மணியளவில் 1 கப் க்ரீன் டீ, 1 பிஸ்கட்
இரவு :7 மணியளவில் 1/2 கப் கிட்னி பீன்ஸ் சில்லி, 1 பிரட், 1 கப் காய்கறிகள் அல்லது க்ரில்டு சிக்கன், படுப்பதற்கு முன் 1 கப் வெதுவெதுப்பான பால்.

சாப்பிட வேண்டிய உணவுகள்
நீங்கள் ஹெச்சிஜி டயட் முறையை மேற்கொண்டால் கீழ்க்கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
பழங்களில் ஆப்பிள், பைன் ஆப்பிள், தர்ப்பூசணி, பீச், பேரிக்காய், ப்ளெம்ஸ், மாதுளை, பப்பாளி,திராட்சை, வாழைப்பழம், லெமன், ஆரஞ்சு, அவகேடா, முலாம் பழம், சாத்துக்குடி போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
காய்கறிகளில் கீரைகள், முள்ளங்கி, மிளகு, போக் சோய், பீட்ரூட், முட்டைக்கோசு, ஆர்குலா, சர்ட், தக்காளி, வெள்ளரிக்காய், புடலங்காய், சீமைப் பூசணிக்காய், கத்தரிக்காய், கேரட், ரூபார்ப்
தானிய வகைகளில் கருப்பு அரிசி, ஓட்ஸ், சிவப்பு அரிசி, ப்ரவுன் அரிசி மற்றும் உடைத்த கோதுமை
புரோட்டீன் உணவுகளான சால்மன், முட்டை, டுர்கி, டூனா, மெக்கெரல், சோயா ஷங்க், பேஸா, டோஃபு, பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
பால் பொருட்களான பால் மற்றும் பட்டர் மில்க்
நட்ஸ் மற்றும் விதைகளாவன சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள், வால்நட்ஸ், பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முலாம் பழ விதைகள்
எண்ணெய் வகைகளில் அவகேடா எண்ணெய், ஆலிவ் ஆயில், மீன் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
மூலிகை மற்றும் மசாலா வகைகளான ஏலக்காய், பெருஞ்சீரகம், கொத்தமல்லி, சாதிக்காய், பூண்டு பொடி, பச்சை மிளகாய், இஞ்சி பொடி, மிளகு, மஞ்சள், கிராம்பு, புதினா, துளசி, ஆர்கனோ, சீரகம், பட்டை, குங்குமப்பூ, கறிவேப்பிலை, நட்சத்திர வடிவ பூ, கடுகு, வெந்தயம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்
சிவப்பு இறைச்சி
வொயிட் உருளைக்கிழங்கு
பலாப்பழம், மாம்பழம்
வெள்ளை அரிசி, மக்காச்சோளம்
வெஜிடபிள் ஆயில், சணல் விதைகள், நட்ஸ் பட்டர், கடுகு எண்ணெய்
மார்கரைன் மற்றும் சீஸ்
நொறுக்கு தீனிகளான ப்ரைடு சிக்கன், சிப்ஸ், கெட்ச் அப், பாஸ்ட்ரி, வேவர்ஸ்
பானங்களான ஆல்கஹால், பதப்படுத்தப்பட்டு டப்பாக்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள், பழ ஜூஸ் வகைகள், எனர்ஜி ட்ரிங்க்ஸ்

லெமன் சிக்கன் சூப்
தேவையான பொருட்கள்
100 கிராம் சமைத்த கோழி நெஞ்சுக்கறி
1 லெமன் ஜூஸ்
2-3 கப் வீட்டில் தயாரித்த குழம்பு
1 டீ ஸ்பூன் தைம்
உப்பு தேவைக்கேற்ப
வெள்ளை மிளகு பொடித்தது
கீரை நறுக்கியது
பயன்படுத்தும் முறை
அடுப்பில் கடாயை வைத்து மிதமான சூட்டில் வைக்கவும்
மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் போட்டு கொதிக்க விடவும்
20 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்

க்ரீன் ஆப்பிள் சாலட்
தேவையான பொருட்கள்
1/2 கப் க்ரீன் ஆப்பிள் நறுக்கியது
1/2 கப் வெள்ளரிக்காய் நறுக்கியது
1-2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர்
1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்
உப்பு மற்றும் மிளகு தேவைக்கேற்ப
பயன்படுத்தும் முறை
மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
நன்றாக டோஸ்ட் செய்து சாப்பிடுங்கள். அருமையாக இருக்கும்.

இறால் கறி
தேவையான பொருட்கள்
100 கிராம் இறால்
1 வெங்காயம், நறுக்கியது
1 டீ ஸ்பூன் பூண்டு பேஸ்ட்
1/8 கப் தண்ணீர்
1/2 டீ ஸ்பூன் கறிவேப்பிலை பொடி
1/4 டீ ஸ்பூன் சீரகம்
உப்பு மற்றும் மிளகு தேவைக்கேற்ப
பயன்படுத்தும் முறை
கடாயை அடுப்பில் வைத்து மிதமாக சூடுபடுத்தவும்
பூண்டு, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்
மற்ற பொருட்களையும் இறால் போட்டு நன்றாக வதக்கவும்
கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் வதக்க வேண்டும்.

பக்க விளைவுகள்
எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதில் நன்மை தீமை இரண்டும் இருக்கும். ஹெச்சிஜி டயட்டை பொருத்த வரை உடல் எடை வேகமாக குறைவதால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். ஆனால் இது ஒவ்வொருவருடைய உடம்பு வாகை பொருத்தது.
ஒய்வுமின்மை
ஆற்றல் குறைவு மற்றும் சோர்வு
எரிச்சல்
இரத்தம் கட்டுதல்
ஆண்களுக்கு மார்பகம் பெரிதாகுதல்
எடிமா போன்ற நீர்த்தேக்கம் உடலில் ஏற்படுதல்
மன அழுத்தம்
தசைகள் இழப்பு.
விட்டமின் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறை
பித்தப்பை கற்கள்
எலக்ட்ரோலைட்
சீரற்ற இதயத்துடிப்பு

இந்த டயட்டை பின்பற்ற கூடாதவர்கள்
கீழ்க்கண்ட பாதிப்பை உடையவர்கள் இந்த டயட்டை பின்பற்றக் கூடாது
இதய நோய்கள்
புற்றுநோய்
டயாபெட்டீஸ்
ஆஞ்சினா
பக்கவாதம்
சிறிய பக்கவாத விளைவுகள்
கட்டிகள்
சிறுநீரக பிரச்சினை
அனிஸ்சிட்டி நோய்
உணவு உண்பதில் சிரமம்
கருவுற்ற பெண்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

முடிவு
எல்லா டயட் முறைகளும் கலோரி குறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை வலியுறுத்துகிறது. அந்த வகையில் ஹெச்சிஜி டயட் முறையும் சாத்தியமாக்குகிறது. இதனுடன் ஹெச்சிஜி ஹார்மோன் மருந்தை எடுத்துக் கொள்ளும் போது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை எரித்து சீக்கிரமாக உடல் எடையை குறைக்க நமக்கு உதவுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற கனவை நனவாக்குகிறது.
இந்த டயட்டை நீங்கள் பின்பற்ற நினைத்தால் ஊட்டச்சத்து நிபுணரிடம் பரிந்துரை கேட்டுக் கொள்வது நல்லது. அதே மாதிரி உங்கள் உடல் எடை குறியீட்டு எண் சரியாக இருக்க வேண்டும். இந்த டயட் உங்களுக்கு பொருத்தமாக இருந்தால் கண்டிப்பாக உடல் எடையை குறைப்பது சாத்தியம். அப்புறம் என்ன நீங்களும் ஸ்லிம் ஆக சுத்தலாம்.



Click it and Unblock the Notifications











