For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் கிவி பழத்த வெச்சு எப்படி எடையை வேகமாக குறைக்கலாம்? ட்ரை பண்ணுங்க...

கிவி பழத்தை வைத்தே எப்படி எடையை வேகமாகக் குறைக்கலாம் என்பது பற்றி தான் இங்கே பரிந்துரை செய்துள்ளோம். முயற்சி செய்து பாருங்கள். அது பற்றிய முழுமையான தொகுப்பு தான் இந்த கட்டுரை.

By Mahibala
|

கிவி உடல் எடையைக் குறைப்பதற்கான பழங்களில் மிகச் சிறந்த தேர்வு. அதில் நம்முடைய உடலுக்கு ஏற்றபடியான ஊட்டச்சத்துக்களும் அத்க அளவிலான நார்ச்சத்துக்களும் இருக்கின்றன.

Kiwi Really Promote Weight Loss

அதோடு நீர்ச்சத்தும் ஆண்டி ஆக்சிடண்ட்டும் வைட்டமின்களும் நிறைந்து மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டிருப்பதால் தினசரி டயட்டில் கிவியை சேர்த்துக் கொள்வதால் நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் வேகமாகவு எடையைக் குறைக்க முடியும். அதைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம் வாங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

ஒரு கப் அதாவது 177 கிராம் அளவுள்ள பச்சையான இருக்கும் கிவி பழத்தில் இருந்து நமக்கு 108 கலோரிகள் வரை கிடைக்கின்றன. அது நம்முடைய உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான கலோரியில் கிட்டதட்ட 5 சதவீதம் ஆகும். அதில் 5.3 கிராம் அளவுக்கு நார்ச்சத்து கிடைக்கிறது. தினமும் நமக்குத் தேவைப்படும் நார்ச்சத்தில் 21 சதவீதத்தை இந்த ஒரு பழம் மட்டும நிறைவு செய்து விடுகிறது.

அதோடு வைட்டமின் சி 164 மில்லி கிராமும் பொட்டாசியம் 71.3 மி.கி, வைட்டமின் பி9 ஃபோலிக் அமிலம் ஆகியவை 44.2 மி.கிராம் அளவுக்குக் கிடைப்பதால் நம்முடைய ஒரு நாள் ஊட்டச்சத்து தேவையை இந்த ஒரு பழத்திலிருந்து மட்டும் 50 சதவீதத்துக்கும் மேல் பெற முடியும்.

அதைத் தவிர பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், காப்பர், மாங்கனீசு ஆகியவையும் இருக்கின்றன.

MOST READ: மீன் முள் எடுக்கப்போய் தொண்டைக்குள் ஸ்பூன் மாட்டிக் கொண்ட விபரீதம் ...

அதிக நார், குறைந்த கலோரி

அதிக நார், குறைந்த கலோரி

மிகக் குறைந்த கலோரியில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கும் ஒரு பழம் என்றால் அது கிவி தான். நம்முடைய அன்றாட உணவில் 30 கிராம் வரையில் நார்ச்சத்து தேவைப்படும். அதனால் நிச்சயம் உங்களுடைய தினசரி உணவில் பாதி அல்லது ஒரு முழுமையான கிவி பழத்தை எடுத்துக் கொள்வது நல்லது.

குறைந்த டிரை கிளிசரைடு

குறைந்த டிரை கிளிசரைடு

உடல்பருமன் என்பது உலகம் முழுவதும் இருக்கிற மிக முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் ரத்தத்தில் உள்ள கொழுப்புத் திசுக்கள் அதிக அளவில் இருப்பது தான். இந்த அதிக உடல் எடைக்குக் காரணமாக இருக்கிற ரத்தத்தில் உள்ள குறைந்த டிரை கிளிசரைடு அளவை சரியாக வைத்திருக்க கிவி உதவும்.

இன்சுலின் சுரப்பு

இன்சுலின் சுரப்பு

உடலில் கொழுப்பு அதிகமாகப் படிந்திருப்பதும் கூட இன்சுலின் சுரப்பை தடுக்கிறது. அளவுக்கு அதிகமான உடல் எடையால் இதயக் கோளாறுகள் வருவதற்கும் வாய்ப்புகள் மிக அதிகமாகவே இருக்கின்றன.

MOST READ: டேய் எங்கலாம் ரொமான்ஸ் பண்றதுனு வெவஸ்தையே இல்லயா? நீங்களே பாருங்க மக்களே!

கொழுப்பை கரைக்கும் சத்துக்கள்

கொழுப்பை கரைக்கும் சத்துக்கள்

வைட்டமின் சி, நார்ச்சத்து, கால்சியம் ஆகிய மூன்றும் வுகமாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது.

புரதம்

புரதம்

புரோட்டியுாலைட்டிக் என்னும் என்சைம் கிவி பழத்தில் அதிகமாகவே இருக்கிறது. பொதுவாக புரோட்டீன் உணவுகள் உணவு செரித்தலுக்கு அதிக துணைபுரியும். அதிக புரதம் உள்ள கிவி எடுத்துக் கொள்வதால் செரிமானக் கோளாறுகள் நீங்கி, கொஞ்சமாக சாப்பிட்டதும் திருப்தி ஏற்படுகிறது. இதனாலேயே கொழுப்பு படிவது கட்டுப்படுத்தப்படுகிறது.

MOST READ: பற்களுக்குள் சீழ்கட்டி இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது? என்ன செஞ்சா பல் தப்பிக்கும்?

எப்படி சாப்பிடணும்?

எப்படி சாப்பிடணும்?

கிவியை வேகவைத்து அந்த நீரைக் குடித்தால் தொப்பை குறையும். அல்லது வேகவைத்து சாப்பிடுவது நல்லது என்றும் பரிந்துரைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. அப்படி ஒரு போதும் செய்யக் கூடாது.

அப்படியே மற்ற பழங்களைச் சாப்பிடுவது போல பச்சையாக கட் செய்து சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு முன் நன்கு கழுவிக் கொள்ளுங்கள். சிலர் தோலுடனே சேர்த்து சாப்பிடுவார்கள். அதுவும் தவறு. தோலில் பூச்சிக்கொல்லிகள், ரசாயனங்கள் ஏதேனும் இருக்க வாய்ப்பு உண்டு.

மற்ற பழங்களுடன் சேர்த்து சாலட்டாகவும் கிவியைச் சாப்பிடலாம். தேவைப்பட்டால் சாலட்டில் சில துளிகள் எலுமிச்சை சாறும் மிளகுத் தூளும் சேர்த்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does Kiwi Really Promote Weight Loss?

Kiwi fruit is rich in weight loss friendly nutrients, such as dietary fiber, water-soluble antioxidants and vitamins. Kiwis are also low in calories and many claim that they can be particularly helpful in your weight loss efforts.
Story first published: Tuesday, April 30, 2019, 15:32 [IST]
Desktop Bottom Promotion