Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
இனி வீட்ல டீ போடும்போது அதுல ஒரு துண்டு ஆப்பிள் போட்டு கொதிக்க வைங்க... ஏன்னு தெரியுமா?...
ஆப்பிள் துண்டுகளை கருப்பு தேயிலையுடன் சேர்த்து கொதிக்க வைப்பதன் மூலம் கிடைக்கும் கலவையான இந்த ஆப்பிள் டீ-ல், சுவையூட்டுவதற்காக இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு சேர்த்துக் கொள்ளலாம்.
ஆப்பிள் பழம் பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கும், உடல்நலம் சார்ந்த பலன்களை தரும் ஓர் பழம் ஆகும். ஆப்பிளை அப்படியே சாப்பிட்டாலும், நறுக்கி சாலாட் ஆக சாப்பிட்டாலும், பழச்சாறாக மாற்றி குடித்தாலும், கேக் போன்றவையாக மாற்றி சாப்பிட்டாலும், சமையல் செய்து சாப்பிட்டாலும் எப்போதும் சலித்துப் போகவே போகாது. இனிப்புகள் மற்றும் தின்பண்ட வகைகளில் சிறந்ந சுவையை தரும் இவை அதிக சத்துக்களை தரவல்லது.

இரத்திலுள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவது முதல் உடல் எடையை நன்கு பராமரிக்கும் வகையில் கொழுப்பை கட்டுப்படுத்துவது வரை ஏராளமான பலன்களை அளிக்கிறது ஆப்பிள். சரியான முறையில் மற்றும் சரியான அளவில் ஆப்பிளை சாப்பிட்டு வருவதன் மூலம் அதிகப்படியான எடையை குறைக்கலாம்.

ஆப்பிள்
என்னதான் பெரும்பாலன மக்களுக்கு ஆப்பிளில் உள்ள வினிகர் மற்றும் அதன் எடை குறைக்கும் பலன்களைப் பற்றி தெரிந்தாலும், பெரும்பாலானோருக்கு ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பானம் உடல் எடையை குறைக்கும் என தெரியவில்லை. அது தான் ஆப்பிள் டீ. இதனை வீட்டிலேயே தயாரித்து உடனடியாக பருகுவதால், கொழுப்புகளை எரித்து உடல் எடையை குறைக்கிறது.
ஆப்பிள் துண்டுகளை கருப்பு தேயிலையுடன் சேர்த்து கொதிக்க வைப்பதன் மூலம் கிடைக்கும் கலவையான இந்த ஆப்பிள் டீ-ல், சுவையூட்டுவதற்காக இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு சேர்த்துக்கொள்ளலாம். சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகக்கூடிய இந்த தேநீர், இனிப்பாகவும் சற்று சுவையுடனும் இருக்கும். இந்த பானத்தால் ஏராளமான பலன்கள் கிடைத்தாலும், எடையை குறைக்க சிறப்பாக செயல்படுகிறது.

நோய்எதிர்ப்பு சக்தி
ஆப்பிள் துண்டுகள் நீரில் கொதிக்க வைக்கப்படுவதால், ஆப்பிள் டீயில் அதிக அளவு வைட்டமின் சி இருக்கிறது. அதனால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, எடையை குறைப்பதற்கு நல்ல பலன்களை அளிக்கிறது.

கொழுப்புடன் போராடுகிறது
ஆப்பிளின் உட்புறமும், தோலிலும் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பாலிபீனால், லீபோப்ரோட்டீன் அளவை குறைக்க உதவுவதுடன், இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதால், எடை குறைகிறது.

செரிமான சக்தி அதிகரிப்பு
ஆரோக்கியமான செரிமான அமைப்பு எடை குறைப்பிற்கு வழிவகுக்கும். ஆப்பிள் அதிகளவு கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் ,ஆப்பிள் டீ செரிமானத்தை அதிகரித்த உதவும். மேலும் ஆப்பளில் உள்ள மாலிக் அமிலமும் ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு உதவும்.

இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தும்
ப்ரக்டோஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் வடிவில் ஆப்பிளில் இயற்கையான சர்க்கரை இருப்பதால் மெட்டாபாலிக் அளவை சமப்படுத்தி, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தும். இது இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீர் வீழ்ச்சி அல்லது உயர்வை தடுத்து, அடிக்கடி நீங்கள் உணவறுந்துவதில் இருந்து தவிர்க்கிறது.

குறைந்த கலோரிகள்
எதிர்மறை கலோரி என்று அழைக்கப்படும் குறைந்த கலோரிகள் கொண்ட பழம் ஆப்பிள். சராசரி அளவுள்ள ஆப்பிளில் ஒவ்வொரு 100 கிராமிற்கும் 50 கலோரிகள் இருக்கும். எனவே ஆப்பிளை சாப்பிட்டாலோ அல்லது டீ வடிவில் குடித்தாலோ, நீங்கள் குறைந்த கலோரி அளவை பராமரிக்க உதவும்.

எடை குறைய ஆப்பிள் டீ தயாரிப்பது எப்படி?
மிக எளிதாக தயாரிக்கக்கூடிய பானமான ஆப்பிள் டீ, குளிர்காலத்தில் பருக ஏற்ற பானம். ஆப்பிள் டீ தயாரிக்க ஒரு முழு ஆப்பிள், 3 குவளை தண்ணீர், ஒரு மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 தேயிலை பொட்டலங்கள், இலவங்கப்பட்டை அல்லது கிராம்பு பொடி மட்டுமே தேவை. கனமான அடிபாகம் கொண்ட பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து தண்ணீரில் தேயிலை பொட்டலங்களை மூழ்கச்செய்ய வேண்டும். அது கொதிக்கும் வேளையில், ஆப்பிளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அதில் போட வேண்டும்.

தோலுடன்
ஆப்பிளை துண்டுகளை தோலுடன் தான் சேர்க்க வேண்டும். 5 நிமிடங்கள் குறைந்த அளவு தீயில் வைத்து, இறுதியாக இலவங்கப்பட்டை அல்லது கிராம்பு பொடி சேர்க்கவும். பின்னர் டீயை குடுவையில் ஊற்றி, விருப்பத்திற்கு ஏற்ப இயற்கை இனிப்பூட்டிகளை சேர்க்கலாம். தேநீருக்கு பிறகு அந்த பாத்திரத்தில் எஞ்சியிருக்கும் மசித்த ஆப்பிள் துண்டுகளை கண்டிப்பாக எறியக்கூடாது.அதை சாப்பிடலாம் அல்லது பழக்கூழில் சேர்க்கலாம்.
டீயில் உள்ள இலவங்கம் உடலின் நச்சுத்தன்மை குறைக்கவும், வீக்கத்தை எதிர்த்து போராடவும் உதவும். உங்களுக்கு ஆப்பிள் அலர்ஜி இருந்தால், கண்டிப்பாக இந்த தேநீரை குடிக்கக்கூடாது. இந்த ஆப்பிள் தேநீரை உங்கள் உணவு பட்டியிலில் சேர்க்கும் முன் மருத்துவரின் ஆலோசனையை கேட்பது நல்லது.



Click it and Unblock the Notifications











