Latest Updates
-
மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க… கோடை வெயிலிலும் பணவரவு குறையாம இருக்க ரகசியம்! -
1 வருடம் கழித்து மேஷ ராசிக்கு செல்லும் புதன்: நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
India Heatwave Alert: இந்தியாவில் வெயில் உச்சத்தில் இருக்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன தெரியுமா? -
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா?
இரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் 2 பொருட்கள்...
இதயத்தை ஆரோக்கியமாகவும், ரத்தக் குழாய்களை சுத்தமாகவும் வைத்திருக்க தயாரிக்கப்படும் அற்புத ஜூஸ் செய்யும் முறை இங்கே தரப்பட்டுள்ளது.
நீங்கள் தினமும் வெளியில் சாப்பிடுபவர்களா? அல்லது ஒரே இடத்தில் அமர்ந்து மனஅழுத்தம் நிறைந்த வேலை செய்பவரா நீங்கள்? அப்படியெனில் உங்கள் இதயம் ஆபத்தில் உள்ளதை நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள். மனித உடலுக்கு போதுமான இயக்கம் என்பது மிக அவசியமான ஒன்று. அப்பொழுது தான் உடல் உறுப்புகள் ஆரோக்கியமான இருக்கும்.
இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை மற்றும் கல்லீரல் ஆகியவை மனித உடலில் மிக முக்கிய உறுப்புகள். இந்த உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். உதாரணத்திற்கு, மூளையில் ஏற்படும் சிறிய அடைப்பு மனித உடலில் வாதத்தை ஏற்படுத்தி உடலின் ஒட்டு மொத்த இயக்கத்தையும் நிறுத்திவிடும்.
அல்லது மூளையை செயலிழக்க செய்துவிடும். அதேபோல் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் சிறிது குறைந்தாலும் இதய நோய்கள் அல்லது மாரடைப்பு ஏற்படும். எனவே, இது போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினசரி உடல் இயக்கமும் முக்கியம்.

எப்படியிருந்தாலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடல் பருமன், மருந்துகளின் பக்கவிளைவு போன்றவற்றால் இரத்தக் குழாய்களில் அடைப்போ அல்லது கொழுப்பு போன்றவை சேர்ந்து இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
எனவே, இரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பை இயற்கையான முறையில் போக்குவதற்கும், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியமுறை மிகவும் உதவிகரமாக இருக்கும்.

தேவையானப் பொருட்கள்
பசலைக் கீரை ஜூஸ் - 1/2 டம்ளர்
வறுத்த ஆளி விதை - 1 டேபிள் ஸ்பூன்.

ஜூஸ் செய்முறை
ஒரு டம்ளர் பசலைக் கீரையுடன் குறிப்பிட்ட அளவு ஆளி விதை சேர்க்க வேண்டும். நன்கு கலக்கி கொள்ளுங்கள். இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குறைந்தது 2 மாதத்திற்கு குடிக்கவேண்டும்.

கொழுப்பை கரைக்கும்
இந்த ஜூஸை தினமும் குடித்து வரும் போது இயற்கையான முறையில் இதய இரத்தக் குழாயிகளை சுத்தம் செய்து, இதயத்தை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
இந்த ஜூஸை குடிக்கும் நீங்கள் கண்டிப்பாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம். மேலும், தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் பருமன் அதிகரிக்காமல் தடுத்து உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

ரத்தத்தை சுத்தமாக்கும் :
பசலைக் கீரையில் புரதச்சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை அதிக அளவில் உள்ளது.
பசலைக் கீரை உடலில் ஆரோக்கியமான இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். ஆளி விதையில் நார்ச்சத்துக்களும், வைட்டமின் ஈ இரண்டுமே இரத்தக் குழாய்களில் சேர்ந்திருக்கக்கூடிய அசுத்தங்களை அகற்றி, இரத்த ஓட்டத்தை சீராக்கும்.



Click it and Unblock the Notifications