Latest Updates
-
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம்
உடல் எடை குறைக்க ட்ரை பண்றீங்களா? அப்போ உங்களுக்காக 3 இன் 1 சூப்பர் ஐடியா!!
சமையலறையில் இருக்கும் மசாலா பொருட்களுக்கு கொழுப்பை எரிக்கும் பண்புகள் உண்டு . அவ்ற்றை தெர்ந்தெடுத்து தினமும் உணவில் செர்த்துக் கொண்டால் உங்கல் உடல் எடை குறைய அதுவும் உதவும்.
கச்சிதமான உடல்வாகு நமது ஒழுங்கான வாழ்க்கை முறையை உலகத்திற்கு சொல்லும். உடலை தொப்பையோடும், பருமனோடும் இருப்பதை நம் உடல் விருப்பப்பட்டே ஆகனும் என்றாலும் அடுத்தவர் ஏளனமாகத்தான் பார்ப்பார்கள்.
அடுத்தவரின் கேலிக்கு ஆளானாலும் பரவாயில்லை என தான் நினைத்தபடி கண்டதையும் சாப்பிட்டு,உடல் குண்டானால் பரவாயில்லை என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால் இதனால் ஆரோக்கியத்தில் உண்டாகும் பிரச்சனைகளையும், பின்னால் ஒன்றன்பின் ஒன்றாக வரிசைக் கட்டிக் கொண்டு வெளிபடும் நோய்களைப் பற்றியும் அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
சிலருக்கு திடீரன் ஞானோதயம் உதித்து உடல் எடை குறைய பிரம்ம பிரயத்தன் செய்வார்கள். அவர்களுக்கு இந்த குறிப்புகள் உதவும் முயற்சித்துப் பாருங்கள்.
பொதுவாக நமது சமையலறையில் இருக்கும் மசாலா பொருட்களுக்கு கொழுப்பை எரிக்கும் பண்புகள் உண்டு . அவ்ற்றை தெர்ந்தெடுத்து தினமும் உணவில் செர்த்துக் கொண்டால் உங்கள் உடல் எடை குறைய அதுவும் உதவும்.

மஞ்சள் :
மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் புற்று நோய் மற்றும் அல்சைமர்க்கு எதிராக போராடுகிறது. அது மட்டுமல்லாமல் நமது உடலிலுள்ள கொழுப்பை கரைக்கு கர்க்யூமின் என்ற ரசாயன பொருளை மஞ்சள் கொண்டுள்ளது. ஆகவே மஞ்சளை அவசியம் நீங்கள் சேர்த்துக் கொள்ளவும்.

பட்டை :
பட்டை ரத்த அழுத்தத்தை சமன் படுத்தும். பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஆகவே தே நீர் மற்று உணவுகளில் பட்டையை அன்றாடம் சேர்த்திடுங்கள்.

சிவப்பு மிளகாய் :
மிளகாப் பொடியை ஒருவேளை உணவில் சேர்க்கும் போது 100 கலோரியை எரிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. எனவே கொழுப்பு தங்காமல் கரைக்கப்படுகிறது. உடல் எடையும் குறையும்.

சீரகம் :
1 ஸ்பூன் சீரகத்தை தினமும் மூன்று வேளை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடலில் 3 மடங்கு அதிகமாக கொழுப்பை கரைக்கும்.

இஞ்சி :
இது உணவு உண்டபின் அதிகரிக்கும் குளுகோஸ் அலவை கட்டுப்படுத்துகிறது. கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது. இது உடல் எடையை இயற்கையாக குறைக்க உதவும் சிறந்த உணவுவகைகளில் ஒன்று.

பூண்டு :
பூண்டு எத்தகைய கொழுப்பையிம் கரைத்துவிடும். க்றிப்பகா கெட்ட கொழுப்பை பூஜ்யமாக்கிவிடும். தினமும் கட்டாயம் பூண்டிய எடுத்துக் கொள்ளுங்கள். இதய நோய்கள் வராது. இடுப்புப் பகுதில் தேங்கும் கெட்ட கொழுப்பை கரைக்கும்.

மிளகு :
மிளகு கொழுப்பை கரைப்பதுடனும், புதிய கொழுப்ப் செல்கள் உருவாவதையும் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவும்.

ஏலக்காய் :
ஏலக்காய் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. கொழிப்பையும் கரைக்கச் செய்யும்.

சாமந்தி பூ :
சாமந்திப் பூவில் விட்டம் ஏ, ஈ, சி மற்றும் அதிக மினரல் கொண்டுள்ளது. கொழுப்பை வளர்சிதை மாற்றத்திற்கு உட்பட இந்த விட்டமின்கள் அவசியம் தேவை.

கடுகு :
தினமும் முக்கால் ஸ்பூன் கடுகை சமையலில் உபயோகப்படுத்துவதால் ஒரு மணி நேரத்தில் 45 கலோரியை எரிக்க உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உடல் பருமனால் பக்கவிளைவுகள்
உடல் மருமனை குறைப்பதால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?
உடல் பருமன்தான் பலப்பல நோய்களுக்கு அடிப்படை காரணம் என எல்லா மருத்துவர்களும் சொல்லியாயிற்று.
அப்படி உடல் எடையை குறைப்பதால் எந்த நோய்களை நீங்கள் தள்ளி வைக்கிறீர்கள் என தொடர்ந்து படியுங்கள்.
புற்று நோய் :
உடல் பருமனால் உண்டாகும் மாற்றங்களால் புற்று நோய்கள் குறிப்பாக எண்டோமெட்ரியல் புற்று நோய் உருவாவதை தடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

புத்திக் கூர்மை :
உடல் பருமனானவர்களின் அறிவுத்திறனும் மந்தத்தன்மையுடன் வெளிப்படுவதாக ஆராய்ச்சி கூறுகின்றது. எனவே உட்ல எடை குறப்பதால் அறிவுத்திறன் நிச்சயம் மேம்படும்.

சர்க்கரை வியாதி :
உடல் பருமனும் சர்க்கர வியாதியும் இரு கண்கள் போன்றது. இவ்விரண்டும் வந்தால் அடுத்தடுத்து வரும் நோய்கள் ஒரு தொடர் சங்கிலி. ஆகவே மூலக் காரணம் உட்ல பருமன் என தெரிந்து கொள்ளுங்கள்.

மன அழுத்தம் :
மன அழுத்தம் உடல் எடை அதிகமாக இருப்பவர்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. ஆகவெ உட்ல எடை குறைத்தால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

மூட்டு ஆரோக்கியம் :
உடல் பருமானாவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான மூட்டு வலியிலிருந்து விடுபடலாம்.

நிம்மதியான தூக்கம் :
உடல் பருமன் இன்சோம்னியா, அப்னியா போன்ற தூக்கமின்மை வியாதிகளை தரும். உடல் எடை குறைத்தால் இந்த பிரச்சனைகளிலிருந்தும் விடுதலை.

நோய் எதிர்ப்பு மண்டலம் :
நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். புதிய நோய் எதிர்ப்புச் எல்கள் உருவாகும். ரத்தம் அடர்த்தி குறையும். இதனால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

உடல் எடை குறைக்க உதவும் மஞ்சள் பால் :
தேவையானவை :
பால் - 2 கப்
மஞ்சள் - 1 ஸ்பூன்
மிளகு -3
ஏலக்காய்- 3
இஞ்சி- அரை துண்டு
குங்குமப்பூ - சிட்டிகை
செய்முறை :
பாலில் மற்ற பொருட்களை எல்லாம் கலந்து 5 நிமிடம் கொதிக்க வையுங்கள். பின்னர் ஆற வைத்து வடிகட்டு தேன் கலந்து குடிக்க வேண்டும். இரவில் குடிப்பது சிறந்தது.



Click it and Unblock the Notifications