Latest Updates
-
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
நீங்க வேகமாக எடையை குறைக்கணுமா? அப்ப தினமும் நைட் இதெல்லாம் செய்யுங்க...
பலருக்கும் உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகள் கடுப்பை உண்டாக்கலாம். ஆனால் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், செய்தாக தான் வேண்டும். இல்லாவிட்டால், அக்கொழுப்புக்களே பல நோய்கள் வர காரணமாகிவிடும்.
தினமும் காலையில இதுல ஒரு டம்ளர் குடிச்சா தொங்கும் தொப்பையைக் குறைக்கலாம்!
எனவே ஒருவர் தன் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்க வேண்டியது அவசியம். மேலும் இக்காலத்தில் தொப்பையும் பலருக்கு இருப்பதால், அதனையும் குறைக்க முயற்சிக்க வேண்டும்.
உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா? அப்ப தினமும் காலையில கறிவேப்பிலை ஜூஸ் குடிங்க...
இங்கு உடல் எடையையும், தொப்பையையும் வேகமாக கரைக்க இரவில் பின்பற்ற வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.
தினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்!

க்ரீன் டீ
க்ரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை வேகமாக கரைக்கும். அதிலும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் க்ரீன் டீ பருகினால், இரவு முழுவதும் உடலின் மெட்டபாலிசம் அதிகமாக இருந்து, கலோரிகளை இரவு முழுவதும் எரிக்கும். இப்படி தினமும் இரவில் செய்தால், உடல் எடை வேகமாக குறையும்.

மிளகு
ஆய்வுகளிலும் உடலில் உள்ள கொழுப்புக்களை மிளகு வேகமாக கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் இரவு உணவில் மிளகை அதிகம் சேர்த்து உட்கொள்ள, இரவு முழுவதும் உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை வேகமாக குறையும்.

சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் உணவுகளைத் தவிர்க்கவும்
எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது, சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் உணவுகளை இரவில் படுக்கும் முன் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவை உடலின் இன்சுலினை அதிகமாக சுரக்கச் செய்யும். உடலில் இன்சுலின் அதிகமாக இருந்தால், அவை கொழுப்புக்களான உடலில் தேங்கும். எனவே இந்த உணவுப் பொருட்களை இரவில் மட்டுமின்றி, மற்ற வேளைகளிலும் சாப்பிடக்கூடாது.

நல்ல தூக்கம் அவசியம்
ஆம், உடல் எடையைக் குறைக்க நல்ல நிம்மதியான தூக்கம் அவசியம். ஒருவர் சரியான தூக்கத்தைப் பெறாமல் போனால் தான் உடல் பருமனை அடைய நேரிடுகிறது. எனவே இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற மனதை அமைதிப்படுத்தும் செயல்களான தியானம் செய்தல், இனிமையான பாடல்களை கேட்டல், நல்ல வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.

நைட் டைம் ஜூஸ்
இரவில் படுக்கும் முன் எலுமிச்சை, வெள்ளரிக்காய், இஞ்சி, கற்றாழை போன்ற உடல் கொழுப்புக்களைக் கரைக்கும் மற்றும் உடலை சுத்தம் செய்யும் பொருட்களால் செய்யப்பட்ட ஜூஸை ஒரு டம்ளர் குடித்து வர, உங்கள் உடல் எடை மற்றும் தொப்பை வேகமாக குறைவதைக் காணலாம். இதன் செய்முறை இதோ!



Click it and Unblock the Notifications
