For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐந்தில் ஒரு இந்திய இளைஞருக்கு இரத்த அழுத்தம் பாதிப்பு உண்டாவது ஏன்?

|

இந்தியாவில் 20 %இளைஞர்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்படைந்துள்ளனர். போதிய அளவு உடல் உழைப்பு இல்லாமல், மிதமாக வேலை செய்யும் இளைஞர்களுக்குதான் அதிக ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

Indian youth suffer from Hypertension

இதற்கு காரணம் என்ன?

அதிக மன அழுத்தம், பதட்டம், அவசர அவசரமாக அன்றாட வேலைக்கு செல்வது என பல்வேறு விஷயங்கள் இன்றைய சூழ் நிலைகளில் காரணமாகின்றன என்று உயர் ரத்த அழுத்த சொஸைட்டியின் தலைவர் கூறுகிறார்.

வாழ்க்கை முறைகளை மாற்றுவது, புகைபிடித்தல், துரித உணவுகள், மாசு, ஆகியவைகளும் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணம்.

உடல் பருமனும் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணம் என்று கூறுகின்றார். இடுப்பு சுற்றளவு 80 செ.மி. க்கு அதிகமாக இருக்கும் பெண்களுக்கும், 90 செ. மி க்கும் அதிகமாக இருகும் ஆண்களுக்கும் உயர் ரத்த அழுத்தம் வர வாய்ப்புகள் உள்ளது.

அவசர கதியில் வேலைக்கு செல்வதால் போதிய உடற்பயிற்சி பெறுவதில்லை. வீட்டில் சாப்பிடாமல் பெரும்பாலோனோர் வெளியில் சாப்பிடுகிறார்கள். இதனால் சர்க்கரை வியாதி இப்போது 20- 30 வயதுள்ளவர்களை எளிதில் தாக்கிவிடுகிறது .

உயர் ரத்த அழுத்தம் இதய நோய்கள் ஏற்படவும் முக்கிய காரணம் என்று மனதில் கொள்ள வேண்டும். இதய நோயால், 1-1 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள்.

இந்த பிரச்சனை இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறதா அல்லது உலகளவில் இதே போன்று பிரச்சனையா என்று இதய மருத்துவரான தாஸ் என்பவரிடம் கேட்டதற்கு, எல்லா இடங்களிலும் இது போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.

ஆனால் மேலை நாடுகளில் தகுந்த மருத்துவ வசதி வாய்ப்புகள் இருப்பதால், குணம் பெற்றுவிட முடிகிறது. நம் நாட்டில் போதிய அளவு நவீன மருத்துவ வசதிகள் இல்லை என்று மருத்துவர் தாஸ் கூறியிருக்கிறார்.

நாம் குணம் பெறுவதை யோசிப்பதை விட தடுப்பதை பற்றிதான் யோசிக்க வேண்டும். தவறாத மருத்துவ பரிசோதனை, உப்பு மற்றும் சர்க்கரை அளவு குறைத்தல், உடற்பயிற்சி, ஆகியவை, இது போன்ற நோய்கள் வரவிடாமல் தடுக்கும் என்று மேலும் கூறியுள்ளார்.

(இந்த தகவல் IANS லிருந்து பெறப்பட்டது.)

English summary

Indian youth suffer from Hypertension

Indian youth suffer from Hypertension
Desktop Bottom Promotion