For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை வியாதி வராமல் தடுக்க வாக்கிங்கா? ஜாகிங்கா?

|

வேகமான நடைபயிற்சி நல்லதா ஓடும் பயிற்சி நல்லதா என நெடு நாட்களாகவே சந்தேகங்கள் எழுகின்றன. ஓடுவதை விட, நடை பயிற்சியே சர்க்கரை வியாதி வராமல் கட்டுப்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடல் பருமனுக்கும் சர்க்கரை வியாதி, இதய நோய், ரத்த அழுத்தம் என பல்வேறு வியாதிகளுக்கும் தொடர்பு உள்ளன.

Brisk walk better than jogging for pre-diabetes

எனவே உடல் எடையை குறைக்க, பல்வேறு அதி வேகமான உடற்பயிற்சிகள், ஓடுதல் என கடின உடற்பயிற் சிகளை விட மிதமான பயிற்சிகள் விரைவில் பலனைத் தரும் என்று டியூக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வில்லியம் க்ரௌஸ் கூறுகிறார்.

இந்த ஆய்வில் சுமார் 150 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் சர்க்கரை வியாதி வரும் அறிகுறிகளுடன் இருந்தவர்கள்.

இவர்களில் முதல் பிரிவினரை சர்க்கரை வியாதி தடுக்கும் ஒரு திட்டத்தில் சேர்த்தனர். 6 மாதத்தில் தங்கள் உடல் எடையை 7% குறைக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள்.

குறைந்த கொழுப்புள்ள உணவினை சாப்பிடுவது, கலோரிகளை எரிப்பது, மற்றும் உடற்பயிற்சிகளை செய்வது, சரியான டயட்டை உட்கொள்வது , 7.5 கி.மி நடைபயிற்சி, என திட்டத்தில் பின்பற்றப்பட்டது.

இரண்டாவது திட்டத்தில், இருப்பவர்களுக்கு உடற்பயிற்சி மட்டுமே அளித்தனர். அதாவது குறைவான நடைபயிற்சி உள்ளவர்கள் (7.5.கி.மி/ 1வாரம்)ஒரு பகுதி. மிதமான நடைபயிற்சி உள்ளவர்கள் இன்னொரு பகுதி(11.5 கி.மி/1வாரம்) மிக அதிகமாக ஓடும் பயிற்சி (11 கி.மி/1வாரம்) என அளிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் திட்டமான சர்க்கரை வியாதியை தடுக்கும் திட்டத்தில் உள்ளவரகளுக்கு சிறந்த முறையில் பலன் அளித்தது இந்த பயிற்சி. 9 சதவீதம் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருந்தது.

இரண்டாவது திட்டத்தில் மிதமான நடைபயிற்சி உள்ளவர்களுக்கு நல்ல பலனைத் தந்தது . 7 சதவீதம் பலனைக் கொடுத்தது.

குறைவான நடைபயிற்சி செய்தவர்களுக்கு 5 சதவீதம் முன்னேற்றம் காணப்பட்டது. இதில் மிக அதிகமான ஓடும் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்தவர்களுக்கு வெறும் 2 சதவீதமே முன்னேற்றம் காணப்பட்டது.

ஆகவே ஓடும் பயிற்சியான ஜாகிங்கை விட நடைபயிற்சி நல்ல முன்னேற்றம் தரும். என்று வில்லியம்ஸ் கௌஸ் கூறியிருக்கிறார்.

English summary

Brisk walk better than jogging for pre-diabetes

Brisk walk better than jogging for pre-diabetes
Story first published: Wednesday, July 20, 2016, 20:01 [IST]
Desktop Bottom Promotion