Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
இந்த மாமிச மலை ரியல் லைப் ஹல்க் பற்றி உங்களுக்கு தெரியுமா?
மற்ற பாடி பில்டர்கள் போல சாஜாத் கஹ்ரிபின் உடற்கட்டு இல்லை. ஓர் மாமிச மலை போல திகழ்கிறார் சாஜாத் கஹ்ரிபி. இவர் எப்போதும் ஷர்ட் அணியாத படங்களை தான் அதிகமாக சமூக தளங்களில் வெளியிடுகிறார். இவரது பல புகைப்படங்கள் இன்று வைரலாக சமூக தளங்களில் பரவி வருகின்றன.
உடலை கட்டுக்கோப்பாக பேணிக்காத்து வரும் சாஜாத் கஹ்ரிபி வரும் காலத்தில் ஹாலிவுட் சினிமாக்கள் மற்றும் டபிள்யூ.டபிள்யூ.ஈ (WWE) போன்றவற்றில் இடம்பெற்று பெரும் நட்சத்திரமாக மாறுவதற்கு கூட நிறைய வாய்ப்புகள் உள்ளன.
வரும் காலத்தில் சாஜாத் கஹ்ரிபியை மல்யுத்த போட்டிகளில் காண்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பது போலவும். இவர் அதற்கான பயிற்சிகளில் ஈடுபடுகிறார் என்றும் இவரது சமூகதள ஃபாலோவர்கள் கருதி வருகின்றனர்....
ஈரானியன் ஹல்க்!
24 வயது நிரம்பிய ஈரானியன் தான் இந்த சாஜாத் கஹ்ரிபி! சமூக ஊடகங்கள் முழுவதும் ரியல் லைப் ஹல்க், ஈரானியன் ஹல்க் என புகழாரம் சூட்டப்பட்டு அதிகளவில் ஷேர் செய்து இவரை உலகபுகழ் அடைய வைத்திக் கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.
"தி பெர்சியன் ஹெர்குலிஸ்"
சாஜாத் கஹ்ரிபி பவர் லிப்டிங் முறையில் தான் அதிகமாக பயிற்சிகள் செய்கிறார். அதிக எடைகள் கொண்டு பயிற்சி செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான செயல். இவரை "தி பெர்சியன் ஹெர்குலிஸ்" என்றும் கூறுகின்றனர்.
பிரம்மாண்டம்!
பாடி பில்டிங் செய்யும் பலரும், உடற்கட்டை இது போல ஏற்றுவது கடினம் என்றும். மாமிச மலை போல திகழ்ந்தாலும், மேல் உடல், கீழ் உடல் இரண்டையும், இப்படி பிரம்மாண்டமான முறையில் ஏற்றுவது மிகவும் கடினம். ஆனால், 24 வயதில் சாஜாத் கஹ்ரிபி இந்த தோற்றம் பெற்றுள்ளது பாராட்டத்தக்கது என்றும் கூறுகின்றனர்.
உடல் எடை!
நம்பமுடியாத அளவில் இருக்கிறது இவரது உடல் எடை. ஆம், சாஜாத் கஹ்ரிபியின் உடல் எடை 350 பவுண்டுகள்.
படர்ந்து பரவி கிடக்கும் உடல்!
இவரது மார்பு, தோள், புஜங்கள், கைகள் போன்றவை போட்டோஷாப் செய்தால் கூட பெற முடியாத அளவு இருக்கிறது என நெட்டிசன்கள் வாய்பிளந்து கூறிவருகின்றனர்.
பாடி பில்டிங்!
ஈரான் நாட்டிற்காக சாஜாத் கஹ்ரிபி பல பாடி பில்டிங்க போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் நட்சத்திரம்!
இன்ஸ்டாகிராமில் இப்போதே இவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோவர்கள் இருக்கிறார்கள். இனி, வரும் காலத்தில் இவர் நட்சத்திர அந்தஸ்து பெறலாம் என்பதெல்லாம் மிகையல்ல. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் அர்னால்ட் போல நடிகராகவும் ஆகலாம்.
இன்ஸ்டாகிராம் ஐ.டி



Click it and Unblock the Notifications
