Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
தமிழ் பிரபலங்களும்... அவர்களின் பிட்னஸ் மந்திரங்களும்....
ஒவ்வொருவருக்கு நன்கு பிட்டாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதிலும் நடிகர், நடிகைகளைப் போன்று அழகான வளைவு நெளிவுகளை உடைய உடல் தோற்றத்தைப் பெற நினைப்போம். அதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளின் டயட் இரகசியங்களை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்போம்.
காதைக் கிட்ட கொண்டு வாங்க... இதுதாங்க சூர்யாவின் ஃபிட்னஸ் ரகசியம்!
அதில் ஆண்களை எடுத்துக் கொண்டால், சூர்யா போன்று பிட்டான உடலைப் பெற வேண்டுமென்று நினைப்பார்கள். பெண்கள் என்றால் நயன்தாரா அல்லது த்ரிஷாவைப் போல் அழகான உடலமைப்பை பெற நினைப்பார்கள். அப்படி உங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் டயட் இரகசியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியவில்லையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
'குட்டி குஷ்பு' ஹன்சிகாவின் ஃபிட்னஸ் ரகசியம்!!!
ஏனெனில் இங்கு ஒருசில தமிழ் பிரபலங்களின் பிட்னஸ் மந்திரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. சரி, இப்போது அதைப் பார்ப்போமா!!!

சூர்யா
நடிகர் சூர்யா பிட்டாக இருப்பதற்கு அவர் தினமும் உடற்பயிற்சிக்கு 1 மணிநேரம் செலவழிப்பதோடு, சரியான அளவில் ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருவது தான் காரணம். அதிலும் அவர் கார்டியோ மற்றும் பளு தூக்கும் பயிற்சியை தினமும் மேற்கொண்டு வருவார்.

நயன்தாரா
நடிகை நயன்தாரா இன்னும் பிட்டாக காணப்படுவதற்கு காரணம், அவர் தினமும் யோகா செய்வதோடு, 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்கிறார். அதுமட்டுமின்றி, மதிய வேளையில் குட்டித்தூக்கம் கூட போடுவார். இது தான் அவர் இளமையோடும், செக்ஸியான உடலமைப்பையும் பெற்றுள்ளதற்கு பின்னணியில் இருப்பது.

விஜய்
நடிகர் விஜய் கூட சற்றும் குண்டாகாமல் பிட்டான உடலை பராமரித்து வருகிறார். இதற்கு அவர் பின்பற்றும் டயட் என்று நினைத்தால், அது தவறு. ஏனெனில் அவர் டயட் ஏதும் பின்பற்றுவதில்லை. மாறாக எந்த ஒரு உணவை உட்கொண்டாலும், அளவாகத் தான் சாப்பிடுவாராம். மேலும் ஒருமுறை தட்டில் எவ்வளவு உணவு போடுகிறாரோ அதை மட்டும் தான் சாப்பிடுவாராம். அதுமட்டுமின்றி, தினமும் தவறாமல் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருவார்.

த்ரிஷா
நடிகை த்ரிஷா சமச்சீர் உணவுடன், தினமும் உடற்பயிற்சியை செய்து வருவார். மேலும் இவர் தனது வீட்டிலேயே மினி ஜிம் ஒன்றை வைத்து அன்றாடம் ஒன்றரை மணிநேராமாவது உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

சமீரா ரெட்டி
நடிகை சமீரா ரெட்டி உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இருப்பதற்கு காரணம், அவர் தினமும் குறைந்தது 45 நிமிடம் யோகா செய்வது, ஜிம் செல்வது, ஜாக்கிங் போவது மற்றும் நீச்சலில் ஈடுபடுவது என்று ஈடுபடுவார்.

டாப்ஸி
டாப்ஸி டயட் என்று உணவில் கட்டுப்பாடோ அல்லது ஜிம் செல்வது என்றோ எதுவும் இல்லை. இவருக்கு நீச்சல் மற்றும் நடனம் மிகவும் பிடிக்கும். அதில் எப்போதும் ஈடுபடுவதால், இவர் பிட்டாக உள்ளார். உடலை பிட்டாக வைத்துக் கொள்ள நிறைய வழிகள் உள்ளது தானே!

ஹன்சிகா
முன்பு ஹன்சிகா பப்பளிமாஸ் போன்று குண்டாக இருந்தார். ஆனால் தற்போது படங்களில் அழகாக பிட்டாக காணப்பட வேண்டுமென்று, சமீப காலமாக ஜிம், டயட் என்று பின்பற்றி வருகிறார். அதில் தினமும் 2 மணிநேரம் கார்டியோ மற்றும் வெயிட் உடற்பயிற்சி மற்றும் யோகா, தியானம் போன்றவற்றை செய்து வருவதோடு, உடற்பயிற்சிக்கு பின் புரோட்டீன் மில்க்ஷேக் குடிப்பாராம். அதுமட்டுமின்றி, இவர் வீட்டில் சமைத்த உணவை மட்டும் தான் விரும்பி சாப்பிடுவாராம். மேலும் ஒரு நாளைக்கு கொஞ்சம் கொஞ்சமாக எட்டு முறை சாப்பிடுவாராம்.

மாதவன்
மாதவன் நடிகராக அறிமுகமாகும் போது, அவரது க்யூட்டான முகம் மற்றும் உடலமைப்பினால் எண்ணற்ற ரசிகைகளைப் பெற்றார். இடையில் சற்று குண்டாக இருந்தாலும், தற்போது தமிழில் வெளிவரவிருக்கும் இறுதி சுற்று என்ற படத்திற்காக பிட்டாகியுள்ளார். இப்படத்திற்காக இவர் ஜிம் சென்று, டயட் மேற்கொண்டு வருகிறார்.

சுனைனா
நடிகை சுனைனா தினமும் தவறாமல் ஜிம் சென்று, கலோரிகளை எரிப்பாராம். மேலும் சரிவிகித உணவை உட்கொண்டும் வருவராம்.



Click it and Unblock the Notifications
