Latest Updates
-
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
உங்கள் தசையை பெரிதாகவும், உறுதியாகவும் வைத்துக் கொள்வதற்கான இரகசியங்கள்!!!
உங்கள் உடம்பில் மொத்தம் 650 தசைகள் இருக்கின்றன. இதில் நாம் பெரும்பாலும் ஒரு சில தசைகளுக்கு தான் உடற்பயிற்சி செய்கிறோம். நிறைய தசை பகுதிகள் பற்றியும் அவைக்கு எவ்வாறு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. உங்களுக்கு தெரியுமா, நீங்கள் நடைப்பயிற்சியில் ஈடுபடும் போது 200 தசைகள் இயங்குகின்றன. இதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.
ஆண்கள் சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
இப்போது நிறைய இளைஞர்களுக்கு அவர்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், பார்க் ஜிம், ஃப்ரீ ஜிம் என்று முக்கால்வாசி பேர் என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாது எடைகளை வெறுமெனத் தூக்கி இறக்கி பயிற்சி செய்து வருகின்றனர்.
ஆரோக்கியமான முறையில் உடற்கட்டை மேம்படுத்துவது எப்படி?
உடலை நன்கு கட்டுக்கோப்புடனும், நல்ல உடற்கட்டுடனும் வைத்துக் கொள்ள பயிற்சியாளர் அல்லது முன் அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை மற்றும் துணையோடு உடற்பயிற்சி செய்வது தான் சரியான முறை ஆகும். இனி, உங்கள் உடற்கட்டை பெரிதாகவும், உறுதியாகவும் அமைத்துக் கொள்ள வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்...

அதிக எடை
உங்கள் தசை நன்கு பெரிதாக, உறுதியாகவும் வைத்துக் கொள்ள அதிக எடை தூக்கி பயிற்சி செய்தல் வேண்டும். எடுத்தவுடனே அதிக எடை தூக்குவது பிரச்சனைகளை ஏற்படுத்தும். சீரான முறையில் எடையை அதிகரித்து பயிற்சியாளரின் ஆலோசனைப்படி எடைகளை அதிகரித்து உடற்பயிற்சி செய்தால் உங்கள் தசைகளை பெரிதாக்கி கொள்ளல்லாம்.

எலும்பின் பலம்
உங்கள் தசைப் பகுதி அதிகரிக்க எலும்பின் பலம் மிக முக்கியமானது ஆகும். உடற்பயிற்சியில் எடையை அதிகரிப்பதோடு எலும்பு பகுதிகள் வலுவாகவும் பயிற்சிகள் செய்ய வேண்டும். குந்து பயிற்சி (Squats) செய்வதனால் போது உங்கள் கால், தொடை, மற்றும் முதுகெலும்பு போன்ற எலும்பு பகுதிகள் மற்றும் தசை பகுதிகள் நன்கு வலுமை அடையும்.

நார்ச்சத்து உணவுகள்
நார்ச்சத்து உணவுகள் உங்கள் தசை பகுதியை வலிமையாக்க உதவுகிறது. இது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும்.

தண்டால்
உங்கள் தசைப் பகுதியை பெரியதாக்கிட சிறந்த முறையில் உதவும் உடற்பயிற்சி தண்டால் எடுப்பது ஆகும். தண்டால் எடுப்பது உங்கள் மார்பு, முதுகு, தோள் போன்ற தசை பகுதிகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும்.

புரதம் நிறைந்த உணவுகள்
உங்கள் தசைப் பகுதியை பெரிதாக்க புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். கொழுப்பு நீக்கப்பட்ட பால், முட்டையின் வெள்ளை கரு, மீன், இறைச்சி போன்றவை அதிகமாக சாப்பிட்டால் நிறைய புரதச்சத்து கிடைக்கும்.

பளு தூக்குதல்
உங்கள் தசைப் பகுதிகளை பெரிதாக்கிக் கொள்ள உதவும் மற்றொரு சிறந்த பயிற்சி பளு தூக்குதல் ஆகும். இது உங்கள் தசைப் பகுதியை பெரிதாக்க மட்டுமில்லாமல் உறுதியாக்கவும், வலிமைப் பெறவும் உதவும்.

ட்ரைசெப்ஸ்
பைசெப்ஸ் மட்டுமில்லாது ட்ரைசெப்ஸ் பகுதி உடற்பயிற்சிகளும் செய்வது அவசியம். இது உங்கள் தோள் மற்றும் கை பகுதிகள் நன்கு பெரிதாக உதவும்.

ஓட்டப் பயிற்சியைக் குறைத்துக் கொள்ளுங்கள்
ஓட்டப் பயிற்சி தசை பகுதியின் வளர்ச்சியைக் குறைத்துவிடும். எனவே, தசை பகுதியை பெரிதாக்க பயிற்சி மேற்கொள்ளும் போது ஓட்டப் பயிர்சியைக் குறைத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications