Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
ஸ்லிம்மான தொடையழகு எதிர்ப்பாக்குரீங்களா? அப்போ நீங்க இத படிச்சே ஆகணும்!
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உடலை நளினமாக வைத்துக் கொள்ள தான் விரும்புவார்கள். நளினமாக வைத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு, முதல் பிரச்சனையாக இருப்பது தொப்பையும், தொடைப் பகுதி சதையும் தான். தொப்பையைக் குறைக்க பல வழிமுறைகளை கேட்டும், படித்தும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், இந்த தொடை பகுதி சதையை எப்படி குறைப்பது என பலருக்கு தெரியாது. பொதுவாக உடற்பயிற்சியில் இருந்து உணவு பழக்கம் வரை, நம் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் தனி தனி முறையை கையாள வேண்டும்.
பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...
வாக்கிங் மட்டுமே செய்வதனால் உங்களது உடல் எடையை அதிக அளவில் குறைத்துவிட இயலாது. நீங்கள் வீட்டில் இருந்த படியே சில எளிமையான உணவுப்பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றினால், உங்கள் தொடை பகுதி சதையினை குறைப்பது விரைவில் சாத்தியமாகும். இப்போது உள்ள இளைஞர்கள் தங்களது உடலை அர்னால்ட் அளவு வைத்துக் கொள்ள விரும்பவில்லை எனினும், கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். சரி இனி உங்களது தொடை பகுதி சதையை எளிதாக குறைக்க நீங்கள் செய்ய வேண்டியவைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...
உடல் எடையை எளிதில் குறைப்பதற்கான சில டிப்ஸ்...

கார்டியோ பயிற்சிகள்
முதலில் உங்களது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைப்பது அவசியம். எனவே, நீங்கள் அதற்கு கார்டியோ உடற்பயிற்சிகளை பின்பற்றுங்கள். இது உங்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும் மற்றும் உங்களது இதயத்தின் நலத்தை காக்கவும் உதவும். மற்றும் நீங்கள் சைக்கிளிங், ஸ்கிப்பிங் செய்வதினாலும் உங்கள் தொடை பகுதி சதையை எளிதாக குறைக்கலாம்.

ஏறி, இறங்குங்கள்
நீங்கள் உங்களது தொடை பகுதி சதையை குறைக்க ஜிம்மிற்கு கூட போக அவசியம் இல்லை. உங்களது வீட்டில் இருக்கும் மாடி படுக்கட்டுகளை தினமும் ஏறி இறங்கி பயிற்சி செய்யுங்கள் அதுவே, உங்களது தொடை பகுதி சதையை பெருமளவு குறைக்க உதவும்.

ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள்
ஸ்ட்ரெட்சிங் பயிற்சி உங்களது தொடை பகுதி சதையைக் குறைக்க ஒரு சிறந்த வழியாகும். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நீங்கள் ஸ்ட்ரெட்சிங் பயிற்சி செய்து வந்தால் ஒரு மாதத்திற்குள் ஒரு சிறந்த மாற்றத்தைக் காண இயலும்.

உணவை தவிர்க்க வேண்டாம்
உடல் எடை குறைக்கிறேன் என்று, உங்களது உணவு அளவை மிகவும் குறைத்துவிட வேண்டாம். முடிந்த அளவு இனிப்பு உணவுகளையும், சர்க்கரை சத்து அதிகம் உள்ள உணவுகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.

தின்பண்டங்களை குறைத்து கொள்ளுங்கள்
பெரும்பாலானவர்களுக்கு உடல் எடை அதிகரிக்க காரணமே தின்பண்டங்களை அதிகம் உட்கொள்வதன் காரனமாய் தான். எனவே, தின்பண்டங்களை தவிர்த்திடுவது நல்லது. இது, உங்கள் உடலில் தேவையின்றி அதிகரிக்கும் கொழுப்பை குறைக்க உதவும்.

தண்ணீர் பருகுங்கள்
முடிந்த வரை நிறைய தண்ணீர் பருகுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை நீராவது பருகுங்கள். இது உங்கள் உடலில் உள்ள கலோரிகளை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் உதவும்.

நல்ல தூக்கம்
ஓர் ஆராய்ச்சியில் நன்கு உறக்கம் கொள்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பதில்லை என கண்டறிந்துள்ளனர். தூக்கமின்மை உள்ளவர்களுக்கே அதிகம் உடல் எடை கூடுகிறது.

மரபணு பரிசோதனை
சிலருக்கு மரபணு காரணத்தினாலும், தொடை பகுதியில் சதை அதிகம் கூடலாம். சில பெண்களுக்கு அவர்களது பாட்டி, அம்மாவை போலவே தொடை பகுதியில் சதை அதிகம் கூடும். இதை மரபணு காரணம் என்கின்றனர். எனவே நீங்கள் மரபணு பரிசோதனை செய்து. அதற்கு ஏற்றவாறு சிகிச்சை மேற்கொண்டால் தொடை பகுதியில் உள்ள சதையை குறைக்க முடியும்.



Click it and Unblock the Notifications