Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
இந்தியர்கள் பிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கான இரகசியங்கள்!!!
இந்தியர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமானது என்றால் அது உணவு தான். ஆம், இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்கள் தான் இந்தியர்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, பிட்டாக வைத்துக் கொள்கிறது. மேலும் ஆய்வு ஒன்றில், உலகிலேயே மற்ற நாடுகளில் உள்ள மக்களை விட, இந்தியர்களுக்கு குறைந்த அளவில் தான் ஆரோக்கிய பிரச்சனைகள் வருவதாக கூறுகிறது.
இதற்கு முக்கிய காரணம் இந்தியர்கள் உட்கொள்ளும் உணவுகள் தான். உதாரணமாக, உணவில் சேர்க்கப்படும் மஞ்சள் குடலில் உள்ள புழுக்களை அழிக்கவும்,மிளகாய் தூள் எடையை குறைக்கவும், சீரகம் செரிமான பிரச்சனையை சரிசெய்யவும் உதவியாக உள்ளது.
இதுப்போன்று அன்றாடம் சமைக்கும் இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்களால் தான் இந்தியர்கள் மற்ற நாட்டினரை விட ஆரோக்கியமாக உள்ளனர். இப்போது இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

கடுகு
இந்தியர்கள் அனைத்து உணவிலும் சேர்க்கும் ஒரு பொருள் தான் கடுகு. இத்தகைய வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும் வயிற்று பிரச்சனைகள் இருக்கும் போது, 1 டேபிள் ஸ்பூன் கடுகை 1 கப் சுடுநீரில் போட்டு ஊற வைத்து, பின் அந்த விதைகளை நீக்கி, தண்ணீரைக் குடித்தால் வயிற்றுப் பிரச்சனைகள் குணமாகிவிடும்.

மிளகாய் தூள்
உணவில் காரத்திற்காக இந்தியர்கள் சேர்க்கும் ஒரு பொருள் தாள் மிளகாய் தூள். இத்தகைய மிளகாய் தூள் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவும்.

சோம்பு
மலச்சிக்கல் இருப்பது போன்று இருந்தால், சிறிது சோம்பை வாயில் போட்டு மென்றால், மலச்சிக்கலுடன், வயிற்று பிரச்சனைகளும் வராமல் இருக்கும்.

கரம் மசாலா
கரம் மசாலாவில் இரண்டிற்கும் மேற்பட்ட மசாலாப் பொருட்கள் இருப்பதால், இதுவும் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக கரம் மசாலாவில் பட்டை சேர்த்திருப்பதால், அது கலோரிகளை குறைக்கும்.

சீரகப் பொடி
சீரகம் உணவின் சுவையை அதிகரிக்க மற்றும் நல்ல மணத்தை தருவதற்கு மட்டுமல்லாமல், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது.

மிளகு தூள்
சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்துவதில் மிளகு பெரும் பங்கைனை வகிக்கிறது. அதிலும் இவை முற்றிய நிலையில் நீரில் சிறிது மிளகு தூள் சேர்த்து கொதிக்க விட்டு குடித்தால், அவை உடனே நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும்.

கசகசா
கசகசா சற்று கசப்பாக இருந்தாலும், இது டைப் 1 மற்றும் 2 நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.

பிரியாணி இலை
உணவின் மணத்தை அதிகரிக்க உதவும் மசாலாப் பொருட்களில் ஒன்று தான் பிரியாணி இலை. இந்த இலை வயிற்று வலியை குறைக்கும் தன்மை கொண்டவை.

ஜாதிக்காய்
இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் ஜாதிக்காய் சைனஸ், தலைவலி, சளி போன்றவற்றை சரிசெய்யும். மேலும் மூக்கடைப்பிற்கு ஜாதிக்காய் நல்ல நிவாரணத்தை அளிக்கும்.

வினிகர்
பல் வலி வந்தால் கிராம்பை வாயில் போட்டுக் கொள்வோம். ஆனால் வினிகரை நீருடன் சேர்த்து கலந்து, வாயில் ஊற்றி கொப்பளித்தால் பல் வலியானது போய்விடுவதுடன், வாயில் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications