Latest Updates
-
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...!
உண்ணும் உணவின் அளவை கட்டுப்படுத்த முடியவில்லையா? இதோ சில டிப்ஸ்...
உங்கள் உணவின் அளவை குறைக்க சில டிப்ஸ்களை பின்பற்றவில்லை என்றால், நீங்கள் உண்ணும் உணவின் அளவை கட்டுப்படுத்துவது உங்கள் கையை மீறி போய் விடும். பொதுவாக உணவகத்தில் உண்ணும் போது உட்கொள்ளும் உணவின் மீது எந்த வித கட்டுப்பாட்டையும் ஏற்படுத்த முடிவதில்லை.
ஆனால் இது வீட்டிலும் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல பேர் நாள் முழுவதும் மிகவும் குறைவாக உட்கொண்டு, பின் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு ஏற்படாமல் இருக்க, இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக உட்கொள்கின்றனர்.
நல்ல அழகான உடலமைப்பை பெற சில சிம்பிளான ட்ரிக்ஸ்...
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்படி இருக்கக் கூடாது. உங்கள் உடலுக்கு பகல் நேரத்தில் தான் அதிக அளவிலான எரிபொருள் தேவைப்படும்; அதற்கு காரணம் அந்நேரத்தில் தான் நாம் சுறுசுறுப்பாக இருப்போம். இருப்பினும் பலரும், நாள் முடிவடையும் நேரத்தில், வேலை எல்லாம் முடிந்து தூங்க போகும் போது தான், அதிகமாக உட்கொள்கின்றனர்.
இதுப்போன்று வேறு: உடல் எடையை குறைக்க உதவும் கோடைக்கால காய்கறிகள்!!!
கட்டுப்பாடு இல்லாமல் அதிக அளவில் உட்கொண்டால், நாளடைவில் உடல் எடை அதிகரிக்கும். அதனால், உங்கள் உணவின் அளவை கட்டுப்படுத்த கீழ்கூறிய சில டிப்ஸ்களை கண்டிப்பாக பின்பற்றவும். இதனால் வருங்காலத்தில் உடல் எடை அதிகரிப்பதையும் எடை ரீதியான நோய்களையும் தடுக்கும்.

அளவிடுதல்
உங்கள் உணவின் அளவை கட்டுப்படுத்த, உட்கொள்ளும் உணவை அளவிட ஆரம்பிப்பது ஒரு சிறந்த டிப்ஸாகும். அதற்காக வாழ்க்கை முழுவதும் நீங்கள் உட்கொள்ளும் உணவை அளந்து தான் உண்ண வேண்டும் என்றில்லை. ஒரு வாரத்திற்கோ அல்லது இரண்டு வாரத்திற்கோ இதனை செய்தால் போதும். உங்கள் கண்களும் மூளையும் சரியான அளவை புரிந்து கொள்ளும் வரை தான் இந்த அளவிடுதல் எல்லாம். சாதம், பாஸ்தா மற்றும் இதர தானியங்களை அளவிட அளவீடு கப்களை பயன்படுத்துங்கள். அதே போல் கொழுப்புகளான ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், டிப்ஸ், ஸ்ப்ரெட் மற்றும் கடலை வெண்ணெய்யை அளவிட கரண்டியை பயன்படுத்தலாம். ஒரு வேளைக்கு உட்கொள்ளும் உணவின் சரியான அளவு என்ன என்பதையும், ஒரு வேளை உண்ணும் உணவில் இருக்கும் கலோரிகளின் அளவு போன்றவைகளை கற்றுக் கொள்வீர்கள். அதனால் அடுத்து உங்கள் தட்டில் உணவை அடுக்கும் முன் கட்டுப்பாடு ஏற்படும்.

மெதுவாக உண்ணுங்கள்
உட்கொள்ளும் உணவின் அளவை கட்டுப்படுத்துவதற்கு, மற்றொரு டிப்ஸ் தான், மெதுவாக உண்ணுவது. உங்கள் வயிற்றில் நடப்பதை மூளை புரிந்து கொள்ள 20 நிமிடங்கள் ஆகும். அதனால் உண்ணும் வேகத்தை குறைத்துக் கொள்ளவும். அப்படி செய்யவில்லை என்றால், உங்கள் வயிற்றுக்கு தேவையான உணவை உட்கொண்டு விட்டீர்கள் என்று மூளை உணர்த்துவதற்கு முன்பாகவே அதிகமாக உட்கொண்டிருப்பீர்கள். அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் குற்ற உணர்ச்சி மற்றும் சுகவீனத்தை நாம் அனைவரும் அனுபவித்திருப்போம். போதிய இடைவேளையுடன் மெதுவாக உட்கொள்வதால், உங்கள் வயிறு நிறைந்து விட்டதை உங்கள் மூளை உங்கள் உடலுக்கு சொல்லும். மெதுவாக சாப்பிட வேண்டுமானால், உட்கொள்ளும் போது, அருகில் இருப்பவரிடம் பேச்சு கொடுங்கள். இல்லையென்றால் எதையாவது யோசித்து கொண்டே உண்ணுங்கள்.

உணவு வைக்கப்பட்டிருந்த டப்பாவில் இருந்து நேரடியாக உண்ணாதீர்கள்
உணவு பாத்திரத்திலிருந்து நேரடியாக உணவை உட்கொள்ளும் போது அளவுக்கு அதிகமாக உண்ணும் அபாயம் உள்ளது. பை, டப்பா அல்லது கொள்கலத்திலிருந்து நேரடியாக உண்ணுவதற்கு பதிலாக, அதனை ஒரு தட்டில் கொட்டி, உங்களால் முடிந்த வரையிலான அளவை மட்டும் உட்கொள்ளுங்கள். மீதியை பின்னர் சாப்பிடலாம். உணவு நம் முன்னாடி இருப்பதால் பல நேரம் அளவை பற்றி கவலை கொள்ளாமல் சாப்பிட்டு கொண்டே இருப்போம். உங்களுக்கு தேவையானதை மட்டும் சாப்பிட்டு மீதியை வைத்து விட்டால், உங்கள் முன் இருக்கும் உணவை உட்கொள்ளும் தூண்டுதலை கட்டுப்படுத்தலாம்.

சின்ன தட்டுக்களை பயன்படுத்துங்கள்
நீங்கள் அதிக அளவில் உணவை உண்ணுகிறீர்கள் என்று உங்கள மனதை ஏமாற்ற சின்ன தட்டு, கோப்பை மற்றும் கப்களை பயன்படுத்துங்கள். சின்ன தட்டுக்களை பயன்படுத்தினால், குறைந்த அளவிலான உணவு தான் உட்கொள்ளப்படும். அதனால் கலோரிகளின் அளவும் குறைவாக தான் இருக்கும். இந்த உத்தியை பயன்படுத்தி உங்கள் உணவின் அளவை வெகு சுலபமாக குறைக்கலாம்.

குறைந்த அளவில் பரிமாறுங்கள்
கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும், செய்வதற்கு இது மிகவும் கடினமான ஒன்றாகும். நினைத்ததை விட குறைவாகவே பரிமாறுங்கள். அப்படி செய்தால் உட்கொள்ளும் உணவின் அளவும் கலோரிகளும் குறையத் தொடங்கும். தானியங்கள், நட்ஸ், விதைகள், நட்ஸ் வெண்ணெய் மற்றும் இதர கொழுப்பு பொருட்களை குறைவாக உட்கொண்டாலும் கூட கலோரிகள் அதிகமாக உள்ளேறும். உதாரணத்திற்கு, கடலை வெண்ணெய் சாண்ட்விச் செய்து, அதன் மீது வெண்ணெய் ஸ்ப்ரெட்டை எவ்வளவு தடவினாலும் பார்ப்பதற்கு அழகாகத் தான் தெரியும். ஆனால் நாம் நினைப்பதை விட அதிக அளவிலான கலோரிகள் அதில் அடங்கியுள்ளது. ஒரு டீஸ்பூன் கடலை வெண்ணெய்யில் 100 கலோரிகள் இருப்பது உங்களுக்கு தெரிந்தது என்றால், அதன் அளவை குறைத்துக் கொள்ள கற்றுக் கொள்வீர்கள் தானே?



Click it and Unblock the Notifications











