For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தசைகளை உறுதிப்படுத்த உதவும் முதன்மையான வைட்டமின்கள்!!!

By Boopathi Lakshmanan
|

ஆண்கள் என்றாலே நினைவுக்கு வரும் விஷயங்களில் ஒன்று அவர்களுடைய உடல் வலிமை. பொதுவாகவே உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாக இருப்பவை தான் தசைகள். பேனாவை எடுப்பது, கம்ப்யூட்டரில் டைப் செய்வது, ஓடுவது மற்றும் நடப்பது என்று எண்ணற்ற செயல்களை உங்களுக்காக தசைகள் செய்து வருகின்றன. இதயத்தசை அமைப்புகளை அவை சரியான வடிவில் வைத்திருக்கின்றன. நீங்கள் போதுமான அளவிற்கு தசைகளை வலிமைப்படுத்தும் செயல்களைச் செய்யாவிடில், உங்கள் இதயத்தை தூண்டும் அமைப்பு உறுதியாகவும், சுகாதாரமாகவும் இருக்காது.

போதுமான அளவிற்கு நீங்கள் உடற்பயிற்சி செய்தால், இயற்கையாகவே அதிக எடையில்லாமல் இருக்க முடியும். தசைகளின் உறுதியை உருவாக்குபவர்கள் நீங்கள் தானேயன்றி வேறு யாருமல்ல. உடல் தசைகளை சரிவர பயன்படுத்தாமல் இருந்தால், அவை துன்பப்படுகின்றன. உடல் தசைகளை உறுதியாக உருவாக்கவும், பராமரிக்கவும் போதுமான அளவிற்கு புரோட்டின் மற்றும் வைட்டமின்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சரிவிகிதமான உணவுடன், உடல் ரீதியாக சுறுசுறுப்பாகவும் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சிகளையும் நீங்கள் செய்து வர வேண்டும். உடலின் உறுதியை பராமரிப்பதில் தயக்கம் காட்டினால் அது உடலை தளரச் செய்யவும், வலுவற்றதாகவும் மாற்றிவிடும்.

வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் ஆகியவை உடல் தசைகளை உருவாக்க உதவும் முக்கிய உணவுகளாக உள்ளன. வைட்டமின் பி1, பி2, சி, பி3 ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லலாம். புரதங்களை கரைத்தும், வைட்டமின்கள் உதவியுடனும் உங்கள் உடல் தசைகளை உருவாக்குகிறது. இந்த வைட்டமின்களில் பலவும் பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சியில் உள்ளன. எனவே இந்த வைட்டமின்கள் நிறைந்திருக்கும் சரிவிகித உணவை சாப்பிட்டு தசைகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.

இங்கே உடல் தசைகளை உருவாக்க அவசியம் தேவையான வைட்டமின்கள் பற்றி கொடுத்துள்ளோம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் பி1

வைட்டமின் பி1

தசைகளை உருவாக்குவதில் முக்கியமான பங்கு வகிக்கும் வைட்டமினாக பி1 உள்ளது. தினசரி உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்களை பயன்படுத்துவதும், சக்திக்காக ஊட்டச்சத்துக்களை பயன்படுத்துவதும் இந்த வைட்டமினின் பணியாகும். சூரியகாந்தி விதைகளில் பி1 வைட்டமின்கள் அதிகளவில் உள்ளன.

வைட்டமின் பி2

வைட்டமின் பி2

ரிபோஃப்ளாவின் என்றும் அழைக்கப்படும் பி2 வைட்டமின் உடலுக்குத் தேவையான மூன்று முதன்மையான ஊட்டச்சத்துக்களாக இருக்கும் புரதங்கள், க்ராப்ஸ் மற்றும் கொழுப்புகளை உடைக்கவும், நொதிக்கவும் மிகவும் உதவுகின்றன. பாலில் ரிபோப்ளாவின் அதிகளவில் உள்ளது.

வைட்டமின் பி3

வைட்டமின் பி3

மூன்றாவது பி வைட்டமினாக இருக்கும் நியாஸின் உடலின் சக்தியை உற்பத்தி செய்வதிலும், நரம்பு மண்டலத்தை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது செரிமாணத்தை ஆரோக்கியமான முறையில் நிகழ்த்தவும் உதவி வருகிறது. கோழிக்கறியில் நியாஸின் அதிகளவில் உள்ளது.

வைட்டமின் சி

வைட்டமின் சி

முதுகெலும்புக்கும், உடலின் தசைகளுக்கும் இடையில் சரியான இணைப்பு திசுக்களை பராமரிக்க வைட்டமின் சி பெரிதும் உதவுகிறது. இந்த வைட்டமினில் உள்ள அதிகபட்ச ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதுகாக்கின்றன. ஆரஞ்சு, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, ப்ரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரௌட்ஸ், ப்ராக்கோலி, குடைமிளகாய் மற்றும் பப்பாளி ஆகிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

பயோட்டின்

பயோட்டின்

உடல் பெறும் பிற சத்துக்களை பெறுவதும், அதன் மூலம் இரத்தம் அளிப்பதை பராமரிப்பதும் பயோட்டினின் முதன்மையான பணியாகும். உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல இரத்தச் சிவப்பு செல்களை உடல் நம்பியிருப்பதால், பயோட்டின் செய்து வரும் அளப்பறிய ஆற்றல் மிக்க செயலை கணக்கிட முடியாது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருபவர்களிடம் இந்த வகையான இரத்த ஓட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

போலிக் அமிலம்

போலிக் அமிலம்

உடலில் புதிய செல்களை உருவாக்கவும், இரத்த சோகையிலிருந்து உடலை காக்கவும் போலிக் அமிலம் உதவுகிறது. ஒரு கோப்பை அவரையில் கிடைக்கும் போலிக் அமிலம் ஒரு நாள் முழுவதற்குமான அளவு 90 சதவீதத்தை நமக்கு அளித்து விடும்.

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ

ரெட்டினால் என்று அழைக்கப்படும் வைட்டமின் ஏ, உடலின் பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சளிச்சவ்வு நரம்புகளின் வளர்ச்சிக்கு உதவி உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. கேரட், பசலைக் கீரை, தக்காளி, வின்டர் ஸ்குவாஷ் மற்றும் டர்னிப் ஆகியவற்றில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.

வைட்டமின் டி

வைட்டமின் டி

'சூரிய ஒளி வைட்டமின்' என்று அழைக்கப்படும் வைட்டமின் D-ஐ நாம் சூரிய வெளிச்சதிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். வெண்ணைய் நீக்கப்பட்ட பால், சால்மன் மீன், இறால் மற்றும் முட்டை ஆகியவற்றிலும் வைட்டமின் டி குவிந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Vitamins For Muscle Building

When it comes to diet, vitamins and proteins are highly essential in building muscles. Vitamins such as Vitamin B1, B2, C B3 etc. are essential. Your body needs to break down protein to build muscles and needs vitamins to aid in muscle building. Most of these vitamins are present in fruits, vegetables and meat.
Story first published: Wednesday, December 11, 2013, 19:22 [IST]
Desktop Bottom Promotion