Latest Updates
-
கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!!

15 முதல் 49 வயதுவரை உடைய 49000 பெண்களிடம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இதயநோய் பாதிக்கப்பட்டவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு வாரம் 3 நாட்களுக்கு மீன் உணவு கொடுக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை குறித்து பின்னர் கேள்வி கேட்கப்பட்டது. அதில் மீன் உணவு உட்கொண்டவர்களுக்கு இதயநோய் பாதிப்பு குறைந்தது தெரியவந்தது.
ஒமேகா கொழுப்பு அமிலம்
மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்தநாளங்களில் படிவதை தடுக்கிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. இதனாலேயே இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வயதான பெண்களுக்கு
மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வறுத்த மீனை சாப்பிடுவதை காட்டிலும், இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே நல்ல பலனை தருகிறது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டொனால்டுலாயிட் ஜோன்ஸ் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.சராசரியாக 63 வயது உள்ள பெண்கள் 84 ஆயிரம் பேரிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஓவன் முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிட்ட பெண்களுக்கு இதயநோய் பாதிப்பு 30 சதவீதம் குறைந்து இருப்பது தெரியவந்தது. இத்தகைய உணவு முறையை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது. ஓவனில் பதப்படுத்தப்பட்டு சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கறுப்பு மீன்கள், சாலமோன் மீன்கள், இதர துனா மற்றும் வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் சிறந்த பலன் அளிப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். மீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போவதுடன் அத்தகைய உணவு தயாரிப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வறுத்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு 48 சதவீதம் கூடுதல் ஆகிறது எனவும் அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications