Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மறதி நோயை தடுக்கும் காய்கறிகள்!

சிகாகோவில் உள்ள ஆய்வாளர்கள் 65 வயதிற்கு மேற்பட்ட 815 நபர்களிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களுக்கு உயர்தர சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பால் பொருட்களை கொடுத்து சோதனை செய்தனர். அதில் வியப்பூட்டும் மாற்றம் ஏற்பட்டது. 80 சதவிகிதம் வரை அல்சீமர் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. காய்கறிகளில் உள்ள நல்ல கொழுப்புகள் ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கிவிடுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற காய்கறி உணவுகள் இதயநோய் ஏற்படாமல் தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த பழங்களை வாங்கி உண்பதன் மூலம் வைட்டமின் சி சத்தினை உடலில் தக்கவைக்கலாம். இது மறதிநோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் சி' குறைந்தவர்கள் மன அமைதி இழந்து காணப்படுவர். அவர்களின் முகத்தில் சிடு சிடுப்பு வந்துவிடும். இவர்களின் எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். அதேபோல் மறதிநோயில் இருந்து தப்பிக்க வைட்டமின் இ அதிகமுள்ள கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் வைட்டமின் இ சத்து சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும் .
இதேபோல் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள மேற்கொண்ட ஆய்வில் வைட்டமின் சி வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகள் அல்சீமர் ஏற்படாமல் தடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைட்டமின்களில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ஸ் மூளை நரம்புகளுக்கு நன்மை தருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூளை நரம்புகளில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுவதாலேயே அல்சீமர் எனப்படும் மறதிநோய் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட 980 நபர்களுக்கு வைட்டமின் சி, வைட்டமின் இ நிறைந்த காய்கறிகள், உணவுகளை உட்கொள்ள கொடுத்தனர் அதில் 242 பேர்களுக்கு அல்சீமர் நோய் பாதிப்பு படிப்படியாக குறைந்தது தெரியவந்தது. இந்த இரு ஆய்வு முடிவுகளும் நரம்பியல் தொடர்பான மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications