Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
பிஸ்கெட், கேக் சாப்பிடும் முன் கொஞ்சம் யோசிங்களேன்!

இது தொடர்பாக 60000த்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் வாரத்திற்கு 3 முறைக்கும் மேல் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை உண்பவர்களுக்கு புற்றுநோய்க்கட்டி ஏற்பட வாய்ப்பு அதிகமிருப்பதாகவும் இந்த ஆய்வில் கண்டு பிடிக்கபட்டுள்ளது.
ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட் ஆய்வாளர்கள் பொதுவாக இனிப்புப் பண்டங்களுக்கும் புற்றுநோய் வாய்ப்பிற்கும் தொடர்புள்ளதா என்ற ரீதியிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 1987 ம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர்களின் வாழ்க்கை முறை, உணவு, எடை போன்றவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோல் பத்தாண்டுகள் கழித்து அவர்களிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது. கடந்த 18 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 729 பெண்கள் நோய் பாதிப்பிற்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் அதிக சர்க்கரை உள்ள இனிப்புப் பண்டங்கள், குளிர் பானங்கள், ஜாம்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு புற்று நோய் வாய்ப்பு ஏற்படுவதாகத் தெரியவில்லை என்று கூறும் இந்த ஆய்வு பிஸ்கட்டுகள், பன்கள், இனிப்பு கேக்குகள் ஆகியவற்றை உண்பதால் புற்றுநோய் வாய்ப்பு 42% அதிகமிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 6,400 பெண்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய் ஏற்படுகிறது என்றும் இதில் 1,000 பேர் மரணமடைவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
பெண்களை அதிகம் பாதிப்பது கருப்பை புற்றுநோயும், மார்பகப்புற்றுநோயும்தான் ஆனால் பிஸ்கெட், கேக் சாப்பிட்டால் கருப்பை புற்றுநோய் வரும் என்று பீதியை கிளப்பியிருக்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வு மற்ற ஆய்வுகளின் முடிவுகளுடன் ஒத்துப் போகுமென்றால் கவலையளிக்கும் ஒரு ஆரோக்கியப் பிரச்ச்னையாகி விடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுக்கட்டுரை டெய்லி மெயில் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
