Latest Updates
-
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காரசாரமான.. ஆம்லெட் சாப்ஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
டயட்-ல இருக்கும் போது பண்ற தப்பு என்ன தெரியுமா?
உடல் பருமன் அதிகரித்து, அழகாக இருந்த உடல் ஒரு வடிவமிழந்து இருக்கிறது. அதனால் அத்தகைய உடலை அழகாக்க நிறைய டயட்களை மேற்கொள்கிறோம். ஆனால் அவ்வாறு டயட் மேற்கொள்ளும் போது, நிறைய ஆரோக்கியமற்ற செயல்களையும் கூடவே செய்கிறோம். இதனால் டயட் இருப்பது கூட வீணாகிவிடுகிறது. மேலும் நிறைய நோய்கள் உடலை தாக்கி, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை அழித்து, உடலை நோய்கள் சூழ்ந்து கொள்கின்றன. அதிலும் அந்த தவறுகள் நிறைய மக்களுக்கு தெரிவதில்லை. இப்போது அத்தகைய தவறுகள் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

உணவுகளை குறைப்பது
மக்கள் உடலை குறைக்க முதலில் நினைப்பது உண்ணும் உணவுகளை குறைப்பது. அவ்வாறு தினமும் உண்ணும் உணவுகளை திடீரென்று குறைப்பதால், உடல் எடை குறையும். ஆனால் அதே சமயம் உடலுக்கு தேவையான கலோரிகள் கிடைக்காமல், உடல் பலமிழந்து, நோயால் எளிதில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். அதிலும் சிலர் பழங்களை மட்டும் சாப்பிடுவர். பழங்களில் மட்டும் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காது. ஆகவே உடனே உணவுகளை குறைக்கக் கூடாது.

உணவை தவிர்ப்பது
என்ன தான் உடல் எடையை குறைக்க உணவு சாப்பிடுவதை தவிர்த்தாலும், உடல் எடை குறையாது. ஏனெனில் ஒரு வேளை உணவு சாப்பிடுவதை தவிர்த்தாலும், மறுவேளை உண்ணும் வரை பசித்துக் கொண்டே இருக்கும். அதனால் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அல்லது உண்ணும் போது கட்டுப்பாடின்றி சாப்பிடுவோம். மேலும் சாப்பிடுவதை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும்.

தண்ணீர்
தண்ணீர் உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும் தன்மையுடையது. ஆகவே என்ன உணவுகளை உண்டாலும், நிறைய தண்ணீரை பருகினால், உடலில் உள்ள கலோரிகள் கரைந்து, உடல் எடையும் அதிகரிக்காமல் இருக்கும்.

குறைந்த கலோரி உணவுகள்
அதிக கலோரிகள் நிறைந்த உணவு உண்டால் தான் உடல் எடை அதிகரிக்கும் என்று குறைந்த கலோரிகள் நிறைந்த உணவை அதிகம் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அவற்றை அதிகம் சாப்பிடுவதால், நிச்சயம் உடல் தான் பருமனடையும்.

பால் பொருட்கள்
நிறைய மக்கள் பால் பொருட்களை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் அந்த கால்சியம் உடலில் உள்ள கொழுப்புகளை எரித்துவிடும். அதே சமயம் அந்த கால்சியம் உடலில் இல்லையென்றால், உடலில் கொழுப்புகள் அதிகரித்து, உடல் எடை அதிகரித்துவிடும்.

ஜூஸ்கள்
ஒரு சில ஜூஸ்களால் எந்த ஒரு நன்மையும் இல்லையென்று நினைத்து, அந்த பழச்சாற்றை தங்கள் டயட்களில் சரியாக சேர்க்காமல் இருக்கின்றனர். ஆனால் உண்மையில் அனைத்து ஜூஸ்களிலும் உடலுக்கு தேவையான கலோரிகள் இருக்கின்றன. ஆகவே அவற்றை உடலில் எவ்வளவு சேர்க்க வேண்டுமோ, அவ்வளவு சேர்த்து, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்நாக்ஸ்
உடல் எடையை குறைக்க நினைக்கும் போது ஸ்நாக்ஸ்களை எப்போதுமே சாப்பிடக்கூடாது என்பதில்லை. ஸ்நாக்ஸ்களை சாப்பிடலாம், ஆனால் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். ஏனெனில் அவற்றால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளின் அளவு அதிகரித்து, எளிதில் உடல் எடையும் குறைந்துவிடும்.
ஆகவே மேற்கூறியவற்றை நினைவில் வைத்து, எப்போதும் ஆரோக்கியமான டயட்டை மேற்கொண்டு, உங்கள் லட்சியமான உடல் எடையை குறைத்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.



Click it and Unblock the Notifications