Latest Updates
-
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம்
சர்க்கரை நோயாளிகளே! உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க சிறுநீரகம் சேதமடைய தொடங்கிருச்சுனு அர்த்தம்!
நீரிழிவு நெஃப்ரோபதி என்பது நிர்வகிக்கப்படாத வகை 1 நீரிழிவு மற்றும் வகை 2 நீரிழிவு நோயால் ஏற்படும் ஒரு ஆபத்தான நிலையாகும், மேலும் இது நீரிழிவு சிறுநீரக நோய் என்றும் குறிப்பிடப்படுகிறது. நீரிழிவு சிறுநீரக நோய், உங்கள் உடலில் இருந்து கழிவுப் பொருட்கள் மற்றும் கூடுதல் திரவத்தை நீக்கும் செயல்பாட்டைச் செய்யும் சிறுநீரகத்தின் திறனைப் பாதிக்கிறது.
இந்த நிலை தீவிரமடையும் போது அது சிறுநீரகங்களின் வடிகட்டுதல் செயல்முறையை சேதப்படுத்துகிறது. அதிக இரத்த சர்க்கரை அளவு சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்று அறியப்படுகிறது.

சரியான நேரத்தில் இந்த நிலையைக் கண்டறிவது நோய் தீவிரமடைவதைத் தடுக்கும் மற்றும் கடுமையான சிக்கல்களின் ஆபத்தைக் குறைக்கலாம். சிறுநீரக நோய் சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிரமான ஆபத்துகளை ஏற்படுத்தலாம், இது இறுதி நிலை சிறுநீரக நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் சிறுநீரகத்தை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம்.
அறிகுறிகள்
நீரிழிவு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம், சிறுநீரில் அதிகப்படியான புரதம், கால்கள், கணுக்கால், கைகள் அல்லது கண்களின் வீக்கம், சிறுநீர் கழிப்பதற்கான தொடர்ச்சியான தூண்டுதல், மனநிலை மாற்றம் அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம், சுவாசப் பிரச்சினைகள், பசியின்மை, குமட்டல், வாந்தி, தொடர்ந்து அரிப்பு மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். நீரிழிவு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 20-30% நோயாளிகள் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை, எனவே இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளை அடிக்கடி கண்காணிப்பது நோயை விரைவில் கண்டறிய உதவும்.
யாரெல்லாம் அதிக ஆபத்தில் உள்ளனர்?
நீரிழிவு நோயாளிகள், புகைபிடிப்பவர்கள், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிக்கத் தவறியவர்கள், சோடியம் நிறைந்த உணவுகளை அதிகமாக உண்பவர்கள், உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்கள், இதய நோய், அல்லது சிறுநீரகக் கோளாறு உள்ள குடும்ப வரலாற்றைக் கொண்டவர் சிறுநீரகக் கோளாறுகளுக்கு ஆளாக நேரிடும்.
சிகிச்சை
மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மருந்தை ஒருபோதும் தவிர்க்கவே கூடாது. மருந்துகளைத் தவிர, ஒரு சீரான ஆரோக்கிய வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் இரத்த அழுத்த அளவை அடிக்கடி சரிபார்க்கவும், சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளவும், சரியான எடையை பராமரிக்கவும், தினமும் உடற்பயிற்சி செய்யவும், ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணவும், உப்பு உணவுகளை தவிர்க்கவும், புகைபிடித்தல் மற்றும் மதுவைக் குறைப்பது நன்மை பயக்கும்.
மன அழுத்தம் அசாதாரண இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவுகளுக்கு வழிவகுக்கும். எனவே, யோகா மற்றும் தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். சிறுநீரக நோயை உண்டாக்கும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும். நீரிழிவு நோயாளிகள் சிறுநீரக நோய்க்கான வழக்கமான பரிசோதனையை தேர்வு செய்ய வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

