Latest Updates
-
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்..
சர்க்கரை நோயாளிகள் ஏன் 3 மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் HbA1c பரிசோதனை செய்யணும் தெரியுமா?
நீரிழிவு நோயாளிகளுக்கு எச்.பி.ஏ 1 சி பரிசோதனையை மேற்கொள்வது மிக முக்கியமானது. இது இரத்த சர்க்கரை அளவுகள் வரம்பில் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவுகிறது.
ஒரு நீரிழிவு நோயாளியின் ஆரோக்கியத்தை பொறுத்தவரை, ஹெச்.பி.ஏ.1.சி.( HbA1c) அல்லது கிளைகேட்டட் ஹீமோகுளோபின் அல்லது கிளைகோஹெமோகுளோபின் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், இரத்த சர்க்கரை அளவை 2 அல்லது 3 மாத காலத்திற்கு ஒரு முறை கண்காணிக்க ஹெச்.பி.ஏ.1.சி. சோதனை நடத்தப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு எச்.பி.ஏ 1 சி பரிசோதனையை மேற்கொள்வது மிக முக்கியமானது. இது இரத்த சர்க்கரை அளவுகள் வரம்பில் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவுகிறது. தேவைப்பட்டால் அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை சரிசெய்ய ஒரு மருத்துவருக்கும் இச்சோதனை உதவுகிறது. இந்த சோதனை ஆரோக்கியமான நபருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறியவும் உதவிடும். ஹெச்.பி.ஏ.1.சி. சோதனை மற்றும் அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைப் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம்.

ஹெச்.பி.ஏ.1.சி. என்றால் என்ன?
ஹெச்.பி.ஏ.1.சி. என்பது கிளைகேட்டட் ஹீமோகுளோபினின் சுருக்கமாகும்.
ஹெச்.பி. = ஹீமோகுளோபின்
ஏ1சி = ஹீமோகுளோபின் வகை
ஹெச்.பி.ஏ.1.சி. = ஹீமோகுளோபினின் கிளைகேட்டட் வடிவம்
குளுக்கோஸ் துகள்கள் ஹீமோகுளோபினுடன் பிணைக்கும் போது, கிளைகேட்டட் ஹீமோகுளோபின் உருவாகிறது. இந்த பிணைப்பு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவிற்கு விகிதாசாரமாகும். இந்த சோதனை, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அல்லது குளுக்கோஸின் செறிவை அளவிட உதவுகிறது. இரத்தத்தில் அதிகரிக்கும் இரத்த சிவப்பு அணுக்கள் இரத்தத்தை இனிமையாகின்றன. சுருக்கமாக, கிளைகேட்டட் ஹீமோகுளோபினின் அளவு அதிகமாக இருக்கும்போது, அந்த நபர் நீரிழிவு நோயாளி என்று அர்த்தம். குறைந்த அளவு இருப்பின், அவர் ஆரோக்கியமான, நீரிழிவு அல்லாத நபராக கருதப்படுகிறார்.

ஹெச்.பி.ஏ.1.சி. எவ்வளவு காலம் நீடிக்கும்?
ஹீமோகுளோபின் என்பது சிவப்பு இரத்த அணுக்களில் காணப்படும் ஒரு புரதமாகும். உங்கள் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை கொடுப்பது இந்த இரத்த அணுக்கள் தான். ஹீமோகுளோபினின் வாழ்நாள் 3-4 மாதங்கள் வரை தான் நீடிக்கும். அதன் பின்னர் அவை முற்றிலுமாக புதுப்பிக்கப்படும். ஹெச்.பி.ஏ.1.சி. சோதனையானது, கடந்த 3-4 மாதங்களில் சராசரி இரத்த குளுக்கோஸ் அளவை தான் அளவிடுகிறது. நீரிழிவு நோய் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றையெல்லாம், நீங்கள் புறக்கணிக்க வேண்டியது அவசியம்.

நீரிழிவு நோயாளிக்கு எச்.பி.ஏ.1.சி. ஏன் கண்காணிக்கப்பட வேண்டும்?
ஏற்கனவே கூறியது போல, ஹீமோகுளோபினுடன் இணைக்கப்பட்ட இரத்த சர்க்கரையை, கிளைகேட்டட் ஹீமோகுளோபினின் செறிவை ஹெச்.பி.ஏ.1.சி. மூலம் அளவிடலாம். எனவே, இது நீரிழிவு நிலையை கண்காணிக்க உதவும், ஒரு குறிப்பு அளவுருவாகவே இந்த ஹெச்.பி.ஏ.1.சி. கருதப்படுகிறது. சராசரி அளவை கண்டறிய குளுக்கோஸ் அளவுகளில் உள்ள அனைத்து ஏற்ற இறக்கங்களையும் பதிவு செய்வதற்கு இந்த ஹெச்.பி.ஏ.1.சி. உதவுகிறது. இந்த சோதனையின் நோக்கங்களாவன:
* கிளைசெமிக் கட்டுப்பாட்டைப் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்ளவும்
* நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள், இன்சுலின், உடற்பயிற்சிகள் போன்ற சிகிச்சையில் நிலை மற்றும் உதவி மாற்றங்களை கண்காணிக்கவும்
* நீரிழிவு சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தை பகுப்பாய்வு செய்யவும்
ஆகையால், ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும் 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை, இரத்த சர்க்கரை அளவுகளுக்கு இணங்க ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனையை செய்து, அதிகரித்த அளவிற்கு காரணமாக இருக்கக்கூடிய சிக்கல்களைத் தடுத்திடவும். தேவைப்பட்டால், அளவைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகளுக்கு மருத்துவரையும் கூட அணுகிடலாம். ஆனால். நீரிழிவு நோயாளிகள் தவறாமல் ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனை மேற்கொள்ள மட்டும் தவறாதீர்கள்.

ஹெச்.பி.ஏ.1.சி. சோதனை எவ்வாறு நடத்தப்படுகிறது?
ஒவ்வொரு 3 அல்லது 4 மாதங்களுக்கும் இல்லையென்றால், நீரிழிவு நோயாளிகள் இந்த பரிசோதனையை வருடத்தில் இரண்டு முறையாவது செய்ய வேண்டியது அவசியம். இந்த சோதனையின் சிறந்த பகுதி என்னவென்றால், இது எந்த நாளிலும், எந்த நேரத்திலும் செய்யலாம் மற்றும் சாப்பிடுவதற்கு முன்பு சோதனை செய்ய தேவையில்லை.
ஹெச்.பி.ஏ.1.சி. முடிவுகள் சதவீதத்தில் காட்டப்படுகின்றன. இந்த மதிப்பு மொத்தத்தில் கிளைகேட்டட் ஹீமோகுளோபினின் சதவீதமாகும். 4 முதல் 5.6% இயல்பானது, 6.5% மற்றும் அதற்கு மேற்பட்டவை உடலில் கிளைகேட்டட் ஹீமோகுளோபின் அதிக சதவீதத்தைக் காட்டுகின்றன. இந்த சோதனையை நடத்தும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அளவுருக்கள்:
* நோயாளியின் வயது
* அவர்களுக்கு இருக்கும் நீரிழிவு நோயின் வகை
* அவர்கள் பின்பற்றும் சிகிச்சை (மருந்து, இன்சுலின் போன்றவை)
* அவற்றின் நிலை தொடர்பான சிக்கல்கள்

முடிவு
நீரிழிவு நிலையைக் கட்டுப்படுத்த கிளைகேட்டட் ஹீமோகுளோபின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. எப்போதும், ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கத்தை பின்பற்ற வேண்டியது அவசியம். மேலும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள தவறவே கூடாது. மிக முக்கியமானது என்னவென்றால், சரியான இடைவெளியில் இரத்த சர்க்கரை மற்றும் ஹெச்.பி.ஏ.1.சி. சோதித்துப் பார்ப்பது, நீரிழிவின் நிலைமையை நிர்வகிக்க உதவிடும்.



Click it and Unblock the Notifications
