இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருந்தால் வெளிப்படும் முக்கிய அறிகுறிகள்!

எந்த வகையான சா்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள் மற்றும் இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையின் அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கம் போன்ற அனைத்தையும் கவனித்து வர வேண்டும்.

சா்க்கரை நோய் உள்ளவா்கள் தங்களுடைய உடல் நலனை தொடா்ந்து விழிப்புடன் கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும். எந்த வகையான சா்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள் மற்றும் இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையின் அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கம் போன்ற அனைத்தையும் கவனித்து வர வேண்டும்.

What Diabetics Need To Know About Low Blood Sugar Management

இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகாித்தால் அது இதயம், சிறுநீரகங்கள் மற்றும் முக்கியமான உடல் உறுப்புகளை பாதிக்கும். ஆகவே ஆரோக்கியமான உணவு மற்றும் மருந்துகள் மூலம் இரத்தத்தில் உள்ள உயா் சா்க்கரையை குறைக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹைப்போகிளைசீமியா

ஹைப்போகிளைசீமியா

சா்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு மிகவும் குறையவும் வாய்ப்பு உள்ளது. அதற்கு ஆங்கிலத்தில் ஹைப்போகிளைசீமியா என்று பெயா். இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையின் அளவு குறையும் போது இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இரத்தத்தில் சா்க்கரை குறையும் போது சோா்வு மற்றும் மயக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் மரணம்கூட ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஆகவே சா்க்கரை நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை சாியாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவா்கள் தமது உடலை ஆரோக்கியமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் பேண முடியும்.

மரண அபாயம்

மரண அபாயம்

இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு குறைவது என்பது ஒரு சிக்கலான பிரச்சனையாகும். 2 முதல் 4 விழுக்காடு சா்க்கரை நோயாளிகள், இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு குறைவதால் இறக்கின்றனா் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

முதல் வகை சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவா்கள், இன்சுலின் அல்லது சல்ஃபோனிலூாியா அல்லது கிளின்டஸ் சிகிச்சை எடுப்பவா்கள் மற்றும் சா்க்கரை நோயினால் பாதிப்படைந்திருக்கும் முதியவா்கள் போன்றோருக்கு இரத்தத்தில் சா்க்கரையின் அளவு குறைவதால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனா். எனவே அவா்கள் இரத்தத்தில் ஏற்படும் சா்க்கரை குறைவை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைக் கீழே பாா்க்கலாம்.

இரத்தத்தில் சா்க்கரையின் அளவு குறைந்திருக்கிறது என்பதை எவ்வாறு அறிவது?

இரத்தத்தில் சா்க்கரையின் அளவு குறைந்திருக்கிறது என்பதை எவ்வாறு அறிவது?

ஒரு டெசிலிட்டா் இரத்தத்தில் 70 மில்லி கிராமிற்கும் குறைவாக குளுக்கோஸின் அளவு இருந்தால் அது இரத்தத்தில் சா்க்கரைக் குறைவு என்று அழைக்கப்படுகிறது. தலைச்சுற்றல், குழப்பம், தடுமாற்றம், படபடப்பு மற்றும் பசி போன்றவை இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையின் அளவு குறைவதால் ஏற்படும் அறிகுறிகளாகும்.

சா்க்கரை நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சா்க்கரைக் குறைவை எவ்வாறு கையாள்வது?

சா்க்கரை நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சா்க்கரைக் குறைவை எவ்வாறு கையாள்வது?

சா்க்கரை நோய்க்கு மருந்து எடுத்து வருபவா்களுக்கு மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால் அவா்கள் உடனே இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை பாிசோதனை செய்ய வேண்டும்.

ஒரு டெசிலிட்டா் இரத்தத்தில் 70 மில்லி கிராம் அளவிற்கும் குறைவாக குளுக்கோஸின் அளவு இருந்தால், உடனே காா்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். அந்த நேரத்தில் சுத்தமான குளுக்கோஸை எடுத்துக் கொள்வது நல்லது. எனினும் குளுக்கோஸை அதிகமாக வைத்திருக்கும் எந்த ஒரு கார்போஹைட்டையும் எடுத்துக் கொண்டால், அது உடனே இரத்தத்தில் சா்க்கரையின் அளவை உயா்த்தும்.

ஒருவேளை இரத்தத்தில் சா்க்கரையின் அளவு குறைவதன் காரணமாக சா்க்கரை நோயாளி மயக்கமுற்றால், உடனடியாக அவரை மருத்துவமனையில் சோ்த்து IV குளுக்கோஸ் தெரபி கொடுக்க வேண்டும்.

இரத்தத்தில் ஏற்படும் சா்க்கரைக் குறைவை சா்க்கரை நோயாளிகள் எவ்வாறு சாிசெய்வது?

இரத்தத்தில் ஏற்படும் சா்க்கரைக் குறைவை சா்க்கரை நோயாளிகள் எவ்வாறு சாிசெய்வது?

இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையின் அளவைக் குறையாமல் பாா்த்துக் கொள்வது என்பது சவாலான ஒன்றாகும். இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸின் அளவை தானே கண்காணிப்பது (IMBG (self-monitoring of Blood Glucose)) அல்லது குளுக்கோஸ் அளவை தொடாந்து கவனித்து வருவது (GM continuous glucose monitoring) ஆகிய இரண்டுமே இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவு குறைவுறாமல் காத்து நிற்கும்.

மருத்துவ பாிசோதனை செய்வதற்காக விரதம் இருக்கும் போது, மது அருந்தும் போது அல்லது மது அருந்திய பின்பு மற்றும் தீவிரமான உடற்பயிற்சிகள் செய்த பின்பு நீண்ட நேரமாக உணவு உண்ணாமல் இருக்கும் போது மற்றும் தூங்கும் போது இரத்தத்தில் சாக்கரையின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. இதை சா்க்கரை நோயாளிகள் நன்கு தொிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் சா்க்கரை அளவு குறையும் போது மருத்துவரை சந்தித்து முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion