Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா? எவ்வளவு பால் குடிக்கலாம்?
சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் பாலைக் குடிக்கலாம். ஒரு டம்ளருக்கு மேல் குடித்தால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென அதிகரித்து, உடலில் எதிர்பாராத பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
Milk And Diabetes: உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். சர்க்கரை நோய் என்பது உடலால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாத அல்லது பயன்படுத்த முடியாத நிலை ஆகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறு தவறும் அவர்களின் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் முழு தானியங்கள், கீரைகள், நட்ஸ் மற்றும் விதைகளில் குறைவாக இருப்பதால், இவை சர்க்கரை நோயாளிகளின் உணவில் சேர்க்க ஏற்றவைகளாகு. இருப்பினும் சர்க்கரை நோயாளிகளின் மனதில் இருக்கும் ஒரு பொதுவான கேள்வி, சர்க்கரை நோய் இருந்தால் பால் குடிக்கலாமா என்பது தான்.

சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா?
பாலில் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் பாலில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களான புரோட்டீன், கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்றவை ஏராளமான அளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்துமே சர்க்கரை நோயை நிர்வகிக்க உதவுகின்றன. ஆய்வுளானது, சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் குடிப்பதன் மூலம், பாலின் பிற நன்மைகளைப் பெறலாம் என்று கூறுகின்றன. மேலும் ஒவ்வொருவருக்கும் இரத்த சர்க்கரை அளவானது வேறுபடும். எனவே பால் குடித்த பின் அவர்களது இரத்த சர்க்கரை அளவைக் கண்காணித்து, அதன் பின் குடிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவெடுக்கலாம்.
இருப்பினும் பால் சர்க்கரை நோயை உண்டாக்கும் அல்லது சர்க்கரை நோயை மோசமாக்கும் என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை. சொல்லப்போனால் உண்மையில் பால் டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரும். எனவே சர்க்கரை நோயாளிகள் பாலை முழுமையாக தவிர்க்கக்கூடாது.

பால் மற்றும் சர்க்கரை நோய்
பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகளவில் உள்ளன. இவை எலும்புகளின் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான சத்தாகும். இருப்பினும், பாலில் கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் அளவுக்கு அதிகமாக பாலை அருந்தக்கூடாது. கொழுப்பு நிறைந்த ஒரு பெரிய டம்ளர் பாலில் 150 கிலோரிகள் உள்ளன. அதே சமயம் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் 80 கலோரிகளே உள்ளன.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை உண்ணும் போது, அது இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள் கொழுப்பு நிறைந்த பாலுக்கு பதிலாக, பாதாம் பால், சோயா பால் போன்ற பிற வகையான பாலை தங்களின் உணவில் சேர்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் எவ்வளவு பாலை குடிக்கலாம்?
சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் பாலைக் குடிக்கலாம். ஒரு டம்ளருக்கு மேல் குடித்தால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென அதிகரித்து, உடலில் எதிர்பாராத பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். மேலும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சனை உள்ள சர்க்கரை நோயாளிகள் பாலை அறவே தவிர்க்க வேண்டும்.

பால் வகைகள் மற்றும் அதில் உள்ள சத்துக்கள்
பாலில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் சிறந்த வகையான பாலைத் தேர்வு செய்து குடிக்க வேண்டியது அவசியம். ஆய்வுகளானது கொழுப்பு குறைவான அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாக கூறுகின்றன. கொழுப்புள்ள முழு பாலில் சர்க்கரை, கொழுப்பு மற்றும் கலோரிகள் போன்றவை அதிகமாக உள்ளன. எனவே சர்க்கரை நோயாளிகள் மற்றும் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது சிறந்த தேர்வல்ல. இப்போது பாலின் பிற வகைகள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து விவரங்களைக் காண்போம்.

முழு பால்
* கலோரி - 149
* கார்போஹைட்ரேட் - 12 கிராம்
* புரோட்டீன் - 8 கிராம்
* கொழுப்பு - 8 கிராம்
* கால்சியம் - 276 மிகி

கொழுப்பு நீக்கப்பட்ட பால்
* கலோரிகள் - 91
* கார்போஹைட்ரேட் - 12 கிராம்
* புரோட்டீன் - 9 கிராம்
* கொழுப்பு - 0.6 கிராம்
* கால்சியம் - 316 மிகி

பாதாம் பால்
* கலோரிகள் - 39
* கார்போஹைட்ரேட் - 1.52 கிராம்
* புரோட்டீன் - 1.55 கிராம்
* கொழுப்பு - 0.5 கிராம்
* கால்சியம் - 516 மிகி

சோயா பால்
* கலோரிகள் - 79
* கார்போஹைட்ரேட் - 4 கிராம்
* புரோட்டீன் - 9 கிராம்
* கொழுப்பு - 4 கிராம்
* கால்சியம் - 300 மிகி
குறிப்பு: சர்க்கரை நோயை ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் குடிக்கலாம். ஆனால் அந்த பாலை இரவு நேரத்தில் குடிப்பதற்கு பதிலாக பகல் வேளையில் குடிப்பதே நல்லது.



Click it and Unblock the Notifications