Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப காலையில் இந்த பானங்களை குடிங்க...
சரியான உணவுகளை உண்பதோடு, ஒருசில பானங்களைக் குடித்து வருவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
சர்க்கரை நோய் என்பது ஒரு நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனையாகும். இது இரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு அதிகரிக்கும் போது ஏற்படுகிறது. இரத்த சர்க்கரை தான் உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. இது உணவுகளில் இருந்து பெறப்படுகிறது. கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் என்ற ஹார்மோன் தான் உணவில் இருந்து சர்க்கரையை ஆற்றலாக மாற்றி பயன்படுத்த உதவுகிறது. இந்த இன்சுலினை போதுமான அளவு உற்பத்தி செய்யாத போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

இந்தியாவில் சர்க்கரை நோயால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாளுக்கு நாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சர்க்கரை நோயானது பெரும்பாலும் நமது மோசமான வாழ்க்கை முறையினால் தான் ஏற்படுகிறது. குறிப்பாக அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை உட்கொண்டு, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை மேற்கொள்ளும் போது, இதன் அபாயம் அதிகரிக்கிறது.
சரியான உணவுகளை உண்பதோடு, ஒருசில பானங்களைக் குடித்து வருவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக ஆரம்பத்தில் இருந்தே இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் பானங்களை குடித்து வந்தால், சர்க்கரை நோய் வருவதையே தடுக்கலாம். இப்போது அந்த மாதிரியான சில பானங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பாகற்காய் ஜூஸ்
பாகற்காய் ஜூஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. அதுவும் பாகற்காய் ஜூஸ் இன்சுலின் செயல்பாட்டை ஊக்குவித்து, உடலில் சர்க்கரையானது போதுமான அளவு பயன்படுத்த உதவி புரிவதோடு, கொழுப்புக்களாக மாற்றபடுவதைத் தடுத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இது தவிர பாகற்காய் ஜூஸில் சராண்டின் என்னும் பொருள் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பொருளாகும். இந்த பாகற்காயைக் கொண்டு ஜூஸ் தயாரித்து காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கும்.

வெந்தய நீர்
வெந்தயம் சர்க்கரை நோயாளிகளின் உடலில் அற்புதங்களை செய்யக்கூடியது. ஆய்வு ஒன்றில், 10 கிராம் வெந்தயத்தை சுடுநீரில் ஊற வைத்து, தினமும் உகொண்டு வந்தால், அது டைப்-2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் தினமும் வெந்தய நீரைக் குடித்து வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். மேலும் வெந்தயத்தில் நார்ச்சத்து உள்ளது மற்றும் இது செரிமான செயல்முறையை மெதுவாக்க உதவி புரிந்து, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை உறிஞ்சுவதை ஒழுங்குபடுத்துகிறது. முக்கியமாக தினமும் காலையில் காபி, டீ-க்கு பதிலாக வெந்தய நீரைக் குடித்து வந்தல், அது உடல் சர்க்கரையை பயன்படுத்தும் விதத்தை மேம்படுத்தும்.

பார்லி நீர்
பார்லி நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து ஏராளமான அளவு உள்ளதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் அற்புதமான பானம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் பார்லி நீரைக் குடித்து வந்தால், அது இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க உதவும். ஆனால் அதற்கு பார்லி நீரை சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். முக்கியமாக பார்லி நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அது பல நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.

சுரைக்காய் ஜூஸ்
சுரைக்காயில் 92 சதவீதம் நீர்ச்சத்தும், 8 சதவீதம் நார்ச்சத்தும் உள்ளதால் , இது சர்க்கரை நோயை எதிர்த்துப் போராடும் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாகும். இந்த காயில் சர்க்கரை மற்றும் க்ளுக்கோஸ் தொடர்பான பொருட்கள் மிகவும் குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவுப் பொருளாக கருதப்படுகிறது. மேலும் பல்வேறு ஆய்வுகளிலும் சுரைக்காயை தினமும் உட்கொண்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது. அதுவும் சுரைக்காயை கொண்டு ஜூஸ் தயாரித்து காலையில் குடித்து வந்தால், இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

க்ரீன் டீ
உடல் எடையைக் குறைக்க உதவும் சிறந்த பானமாக க்ரீன் டீ கருதப்படுகிறது. இத்தகைய க்ரீன் டீ இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. BMC மருந்தியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, க்ரீன் டீ க்ளுக்கோஸ் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இந்த ஆய்வில் சர்க்கரை நோயுள்ள எலிகளுக்கு க்ரீன் டீ கொடுக்கப்பட்டதில், அந்த எலிகளின் இரத்த சர்க்கரை அளவு குறைந்தது தெரிய வந்தது. எனவே சர்க்கரை நோயை நிர்வகிப்பதில் க்ரீன் டீ பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறினர். இருப்பினும், இதுக்குறித்த கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முடிவு
மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்கள் அனைத்துமே சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவினாலும், இந்த பானங்களுள் ஒன்றை தினமும் காலையில் குடிப்பதோடு, தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். முக்கியமாக சர்க்கரை நோய் இருப்பவர்கள் தங்கள் உணவில் எந்த ஒரு மாற்றத்தை செய்வதாக இருந்தாலும், மருத்துவரை அணுகி கேட்டு கொண்ட பின்னரே மேற்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications