For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெரியாமல் கூட இந்த 9 தவறுகளை செய்து விடாதீர்கள்! மீறி செய்தால் இந்த நோய் உங்களுக்கு வந்து விடும்!

|

என்னதான் கால மாற்றம் ஏற்பட்டாலும் அதற்கேற்றாற் போல பல மாற்றங்கள் நமது வாழ்விலும் நடந்து கொண்டே வருகிறது. சில மாற்றங்கள் நம்மை பெரிய அளவில் பாதிப்பது கிடையாது. ஆனால், ஒரு சில மாற்றங்கள் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட கூடும். அந்த வகையில் நாம் தெரியாமலோ அல்லது தெரிந்தோ செய்கின்ற ஒரு சில விஷயங்கள் தான் நம்மை பெரிய அளவில் பாதிக்கும்.

தெரியாமல் கூட இந்த 9 தவறுகளை செய்து விடாதீர்கள்! மீறி செய்தால் இந்த நோய் உங்களுக்கு வந்து விடும்..!

குறிப்பாக நோய்களை உண்டாக்க கூடும். இன்றைய கால கட்டத்தில் நோய்கள் வரவில்லை என்றால் தான் வியப்பாக இருக்கும். நோய்கள் வருவது அந்த அளவிற்கு சர்வ சாதாரணமாக மாறி விட்டது. இவற்றில் மிக மோசமாக நம்மை துரத்த கூடிய நோய் சர்க்கரை நோய். சர்க்கரை நோய் தன் உடலில் உள்ளதா? இல்லையா? என்பது கூட பலருக்கு தெரிவதில்லை.

நாம் செய்கின்ற ஒரு சில தவறுகள் தான் சர்க்கரை நோயின் அபாயத்தை நம் உடலில் அதிகரிக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எந்தெந்த தவறுகளால் இதன் பாதிப்பு அதிகரிக்கிறது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடனடி தீர்வு

உடனடி தீர்வு

எது நடந்தாலும் அதற்கு உடனடி தீர்வை எதிர் பார்க்கும் எண்ணம் தான் நம்மிடம் உள்ளது. உடனடியாக நாம் தேர்வு காண வேண்டும் என நினைத்தால் அது சரியான முடிவை தராது.

உதாரணத்திற்கு உடல் எடையை ஒரே மாதத்தில் குறைக்க வேண்டும் என நினைத்து அதற்காக நமது உடலை முற்றிலுமாக வற்புறுத்தி செய்தால் ஆபத்தில் தான் முடியும். இது போன்ற அவசர நிலை கூட இரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்க கூடும்.

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி

வாரத்திற்கு ஒரு முறையாவது அசைவம்சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. இதில் நண்பர்களோடு வெளியில் போகும் போது நம்மை அறியாமலே அதிக அளவில் சிவப்பு இறைச்சிகளை உண்போம்.

இது உடலுக்கு எண்ணற்ற அளவில் பாதிப்புகளை உண்டாக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கு இந்த சிவப்பு இறைச்சியும் மூல காரணமாக உள்ளது.

ஹார்மோன்

ஹார்மோன்

மனித உடல் ஆரோக்கியமாக இருக்க ஹார்மோன்கள் மிக முக்கியமாக தேவைப்படுகிறது. ஹார்மோன்கள் சீரற்ற முறையில் சுரந்தால் அவை நோய்களுக்கான வழியை தந்து விடும்.

அந்த வகையில் உங்களின் ஹார்மோன் பிரச்சினைகள் நிச்சயம் சர்க்கரை நோய் பாதிப்பை உண்டாக்க வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

MOST READ: மருந்து வாங்கும் போது உங்களிடமிருந்து மறைக்கப்படும் 8 இரகசியங்கள் என்னென்ன?

மன அழுத்தம்

மன அழுத்தம்

எதற்கெடுத்தாலும் மன அழுத்தம் கொள்வோருக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு உயரும். இவை இன்சுலின் ஹார்மோனின் உற்பத்தியை தடுத்து விடும். இதனால் சர்க்கரை நோய் உங்களை எளிதில் ஆட்கொள்ளும்.

நேரத்திற்கு உணவு!

நேரத்திற்கு உணவு!

எவ்வளவு தான் வேலை இருந்தாலும் நமது வயிற்றை காய போடுவது சரி கிடையாது. சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தால் அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உயர்த்தும். மேலும், உடல் பருமன், சோர்வு, உடல்நல கோளாறுகள் முதலிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பரிசோதனை

பரிசோதனை

நம் தாத்தா பாட்டிகள் நோய்கள் இல்லாமல் வாழ்ந்ததற்கு ஆரோக்கியமான உணவுமுறை, சூழல் போன்றவை துணையாக இருந்தது. ஆனால், இவை தலைகீழாக மாறி விட்டது.

நமக்கெல்லாம் சராசரி வயதே 50-ஆக குறைந்து விடும் அபாயம் கூட ஒருபுறம் உள்ளது. எனவே, 30 வயதை நெருங்கும் போதே உடலை பரிசோதித்து கொள்வது நல்லது. இல்லையேல் பாதிப்பு அதிகம்.

MOST READ: ஆண்மை குறைவு முதல் புற்றுநோய் வரை, அனைத்திற்கும் தீர்வு தரும் இஞ்சி எண்ணெய்!

பழங்கள்

பழங்கள்

சர்க்கரை அளவு சரியாக இருந்தால் பழங்களை சாப்பிட எந்த தடையும் இல்லை. இதுவே இவற்றின் அளவு அதிகமாக இருந்தால் பழங்கள் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். காரணம் இவற்றில் உள்ள அதிக அளவிலான சர்க்கரை தான்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

ஒரே இடத்தில் நீண்ட நேரமாக உட்கார்ந்திருப்பது இன்று ஒரு பழக்கமாகவே மாறி விட்டது. இது போன்று ஒரே இடத்தில் இருப்போருக்கு சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகம்.

ஆதலால், அவ்வப்போது அங்கும், இங்குமாக நடமாட வேண்டும். மேலும், தினமும் உடற்பயிற்சி செய்தால் இந்த நோயின் அபாயம் குறையும்.

கார்போஹைடிரேட்

கார்போஹைடிரேட்

அரிசி, முழு தானியங்கள், பிரட் போன்றவற்றை அடிக்கடி எடுத்து கொள்ளாமல் இருப்பது நல்லது. இவற்றை அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் கார்ப்சின் அளவு உயரும்.

இதனால் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கும். இறுதியில் நீங்கள் சர்க்கரை நோயாளியாக மாறி, அவதிப்படுவீர்கள்.

MOST READ: உங்கள் இதயம் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை உணர்த்தும் 8 அறிகுறிகள் இதோ!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Mistakes That increase Diabetes

Here we listed some of the common mistakes that increase diabetes.
Desktop Bottom Promotion