For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோய் இருக்கா? கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...

நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் மூலிகை டீ வகைகளைப் பற்றி தான் இந்த கட்டுரையில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். படித்துப் பயன் பெறுங்கள்.

|

டயாபெட்டீஸ் நோய் என்பது நமது இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை சத்தை உயர்த்துகிறது. இதைக் கட்டுப்படுத்த நாம் மருந்துகள் சாப்பிட்டால் மட்டும் போதாது ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Herbal Teas to Help Manage Diabetes

இப்படி உங்கள் வாழ்க்கை முறையில், உணவு முறையில் நீங்கள் கொண்டு வரும் மாற்றமே உங்களை நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை வேண்டாம்

சர்க்கரை வேண்டாம்

சர்க்கரை நோயாளிகள் சுகர், கார்போஹைட்ரேட், சேச்சுரேட்டு மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக முழு கோதுமையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதே போல சில ஹெர்பல் டீக்கள் கூட டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க நமக்கு உதவுகிறது.

இந்த ஹெர்பல் டீக்கள் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. எனவே இந்த 8 ஹெர்பல் டீயை நீங்கள் குடித்து வந்தாலே போதும் இயற்கையாகவே உங்கள் டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

MOST READ: இனி வங்கியில் பணம் எடுக்க பான் கார்டு அவசியம்... மத்திய அரசு அறிவிப்பு என்ன சொல்கிறது?

ஜின்செங் டீ

ஜின்செங் டீ

ஜின்செங் நமது கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. அதுமட்டுமல்லாமல் உணவிலிருந்து கார்போஹைட்ரேட்டை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. எனவே டயாபெட்டீஸ் நோயாளிகள் தினமும் காலையில் எழுந்ததும் 1 கப் ஜின்செங் டீ குடிப்பது நல்லது. இதை நீங்கள் பவுடராகவோ அல்லது மாத்திரையாகவோ பயன்படுத்துவதற்கு பதில் இந்த மாதிரி டீ போட்டு குடிப்பது உங்களுக்கு புத்துணர்ச்சி தரும்.

பில்பெர்ரி டீ

பில்பெர்ரி டீ

பில்பெர்ரி டீ டயாபெட்டீஸ் சிகிச்சைக்கு அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும் இதற்கு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது. 1-3 டீ ஸ்பூன் பில்பெர்ரி பவுடரை 1 கப் கொதிக்கின்ற நீரில் போட்டு கொதிக்க விடுங்கள். பிறகு 10-15 நிமிடங்கள் கழித்து அதை வடிகட்டி விடுங்கள். இந்த டீயை குடித்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

 கற்றாழை டீ

கற்றாழை டீ

கற்றாழை டீ டயாபெட்டீஸ் நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகும். டைப் 2 டயாபெட்டீஸ்யை இது எதிர்த்து போரிடுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வேகமாக இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைத்து ப்ரீடயாபெட்டீஸ் நோய் வருவதையும் தடுக்கிறது.

MOST READ: எடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...

முனிவர் செடி டீ

முனிவர் செடி டீ

முனிவர் செடி இன்சுலின் செயல்பாட்டுக்கு ஒரு உத்வேகத்தை தருகிறது. ஒரு கப் முழுவதும் முனிவர் இலையை எடுத்து கொள்ளுங்கள். அதை கொதிக்கின்ற நீரில் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு இந்த டீயை வடிகட்டி பருகுங்கள்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீ இரத்த அழுத்தத்தையும் கெட்ட கொலஸுட்ராலையும் குறைக்க பயன்படுகிறது. தினமும் 6 கப் க்ரீன் டீ பருகி வந்தால் டைப் 2 டயாபெட்டீஸ்யை சரி செய்து விடலாம். டீயில் சர்க்கரை சேர்ப்பதற்கு பதிலாக சிறுதளவு லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள். இதே மாதிரி நீங்கள் மல்லிகைப் பூ டீ போட்டுக் கூட குடித்து வரலாம்.

வெந்தய டீ

வெந்தய டீ

வெந்தயம் மருத்துவத்திலும் சமையலிலும் பெரிதும் பயன்படுகிறது. இது நார்ச்சத்துகள் அதிகம் இருப்பதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கிறது. அதே மாதிரி கார்போஹைட்ரேட் உறிஞ்சுவதை சீரணிப்பதை மெதுவாக்குகிறது. இது நமது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து டைப் 1&2 டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதில் ஏராளமான விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன.

டான்டெலியன் டீ

டான்டெலியன் டீ

இதன் வேர்கள் மற்றும் இலைகள் சைனீஸ் மருத்துவ துறையில் பெரிதும் பயன்படுகிறது. இதில் பயோஆக்டிவ் பொருட்கள் மற்றும் ஆன்டி செப்டிக் பொருட்கள் உள்ளன. டான்டெலியன் இலைகள் மற்றும் வேர் பொடியைக் கொண்டு டைப் 2 டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க பயன்படுகிறது.

MOST READ: முள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா? வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...

ஊலாங் டீ

ஊலாங் டீ

இது ஒரு புகழ்பெற்ற சைனீஸ் டீ ஆகும். டைப் 2 டயாபெட்டீஸ் ஸல் வரும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது. 2 டீ ஸ்பூன் ஊலாங் இலைகளை சூடான கொதிக்கின்ற நீரில் போட்டு கொதிக்க விடுங்கள். 1-5 நிமிடங்கள் கழித்து வடிகட்டி குடித்து வாருங்கள். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க பெரிதும் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Herbal Teas to Help Manage Diabetes

Diabetes is a condition that causes high blood sugar levels in blood. Apart from medication, doctors prescribe to follow a healthy lifestyle to keep this condition under control.
Desktop Bottom Promotion