For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனி வங்கியில் பணம் எடுக்க பான் கார்டு அவசியம்... மத்திய அரசு அறிவிப்பு என்ன சொல்கிறது?

|

சாமானிய மக்களின் அடையாளம் என்று கூறப்படும் ஆதார் அட்டை, புதிய நிதிநிலை அறிக்கைக்குப் பின்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆதார், நிரந்தர கணக்கு எண் (பான்) இரண்டும் ஒன்றுக்கொன்று மாற்றிக் கொள்ளத்தக்கவையாக இருக்கவேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

Aadhar Can Outpower PAN

ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அதிகமாக பரிவர்த்தனை செய்யும்போது, தற்போது பான் எண் பயன்படுத்தப்படுகிறது. இனி தேசிய பயோமெட்ரிக் அடையாளத்தை கொண்டே அதுபோன்ற பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயோமெட்ரிக் ஐடி

பயோமெட்ரிக் ஐடி

ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அதிகமாக பரிவர்த்தனை செய்யும்போது, தற்போது பான் எண் பயன்படுத்தப்படுகிறது. இனி தேசிய பயோமெட்ரிக் அடையாளத்தை கொண்டே அதுபோன்ற பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வங்கிகளில் செலுத்துவதற்கும், எடுப்பதற்கும் பயோமெட்ரிக் ஐடியை பயன்படுத்தலாம். வருமான வரித் துறை போன்று நிரந்தர கணக்கு எண் (பான்) மட்டுமே பயன்படுத்தக்கூடிய இடங்களிலும் ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்கள் பான் அட்டைக்கு பதிலாக ஆதார் அட்டையை ஏற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

MOST READ: உடலுறவுக்குப் பின் நிறைய ஆண்கள் ஏன் தம் அடிக்கிறார்கள் தெரியுமா? இதுதான் மேட்டரு...

பத்து லட்சத்திற்கும் அதிகமான பர்சேஸ்

பத்து லட்சத்திற்கும் அதிகமான பர்சேஸ்

உணவு விடுதிகள் மற்றும் வெளிநாட்டு பயணத்திற்கான பணம் செலுத்திய ரசீதுகளில் பான் எண்ணை குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்படும். கறுப்புப் பண பரிமாற்றத்தை தடுக்கும்படியாக, பத்து லட்சம் ரூபாய் பெறுமானத்திற்கு மேலான அசையா சொத்துகளை வாங்கும்போது பான் கார்டை கட்டாயமாக்குவது குறித்து நிதி அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.

பான் எண் இல்லாதோரும் வரி செலுத்தலாம்

பான் எண் இல்லாதோரும் வரி செலுத்தலாம்

இது வரை நிரந்தர கணக்கு எண் (பான்) பெறாதவர்களும் ஆதார் அட்டையை பயன்படுத்தி வருமான வரி செலுத்துவதற்கு இப்புதிய முன்மொழிவு உதவும். சாமானியர்கள் வருமான அறிக்கை தாக்கல் செய்யும்போது எதிர்கொள்ளும் சிரமங்களை இது குறைக்கும்.

MOST READ: இந்த நாய் 19 பால் ரப்பரை முழுங்கிட்டு என்ன பண்ணுச்சுனு தெரியுமா? நீங்களே பாருங்க அந்த கொடுமைய

பான் கார்டுக்கு குட் பையா?

பான் கார்டுக்கு குட் பையா?

ஆதார் அட்டையை கொண்டு வருமானம் குறித்த எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிந்தால் காலப்போக்கில் பான் அட்டை பயனில்லாமல் போய்விடுமா? என்ற கேள்விக்கு, "பான் வேண்டுமா அல்லது ஆதார் போதுமா என்பது ஒவ்வொருவரின் தெரிவைப் பொறுத்தது. பான் எண்ணின் முக்கியத்துவத்தை இந்நடவடிக்கை நீக்கிவிடாது. சிலர் பான் கார்டையே வசதியாக உணர்கின்றனர். ஆனால், பான் கார்டின் எல்லா பயன்பாட்டிலும் ஆதாரை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று வருவாய் செயலர் அஜய் பூஷண் பாண்டே பதில் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவு

உச்ச நீதிமன்ற உத்தரவு

வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதற்கு ஆதார் அவசியம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது 41 கோடி பான் கார்டுகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அவற்றுள் 22 கோடி பான் கார்டுகளே ஆதார் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளன. 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அன்று நிரந்தர கணக்கு எண் (பான்) கொண்டிருப்போரில் ஆதார் பெறுவதற்கு தகுதியுள்ள ஒவ்வொருவரும் தங்கள் ஆதார் எண்ணை வரி விவரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரிச் சட்டத்தின் 139 ஏஏ(2) என்ற பிரிவு கூறுகிறது.

MOST READ: கிரகண சமயத்தில் கோயிலை ஏன் மூடுகிறார்கள்?... கிரகணம் கடவுளையே பாதிக்குமா?

வருமான வரி

வருமான வரி

வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யவும், நிரந்தர கணக்கு எண் ஒதுக்கப்படவும் பயோமெட்ரிக் ஐடி கட்டாயம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆனாலும் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ஆதார் எண்ணை வங்கி கணக்குகளோடு இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்று கூறியுள்ளது. தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் புதிய மொபைல் எண் (சிம்) வழங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று வலியுறுத்த இயலாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: money
English summary

Here's How Aadhar Can Outpower PAN Post The New Budget

The popular and all-inclusive identification of the common people in India, Aadhaar card, is now more powerful post the new budget. Finance Minister Nirmala Sitharaman has argued in favour of making Aadhaar and PAN (Permanent Account Number) interchangeable
Story first published: Friday, July 12, 2019, 13:50 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more