For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும், வீட்டிலுள்ள 10 ஆயர்வேத மருந்துகள்...!

|

இங்குள்ள எல்லோரும் ஏதோ ஒரு வித நோயினால் நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்க கூடும். மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால், நோய்களின் தாக்கம் உடலில் அதிகம் ஆகிவிடும். அந்த வகையில், மக்கள் தொகையில் பாதிக்கு பாதி பேர், சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முற்றிலும் கொடுமையான விஷயமாகவே கருதப்படுகிறது. இதனை தடுக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்தாலும், ஒரு சில முதன்மையான ஆற்றல் மிக்க வழிகளே கடைசியில் வெற்றி பெறும்.

10 Ayurvedic Home Remedies For Diabetes

குறிப்பாக நீரிழிவு நோயை குணப்படுத்த கூடிய ஆயுர்வேத முறை முற்றிலும் சிறப்பு மிக்கதாகும். நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே ஆயுர்வேத முறையில் நாம் நலம் பெறலாம். இந்த பதிவில் சர்க்கரை நோயை குணப்படுத்தும் சில முக்கிய ஆயுர்வேத வீட்டு முறைகளை பற்றி நாம் தெரிந்து கொண்டு, ஆரோக்கியமாக வாழ்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எவ்வாறு கொடியதாகிறது..?

எவ்வாறு கொடியதாகிறது..?

சர்க்கரையின் அளவு உடலில் அதிகரித்தால், இந்த நீரிழிவு நோய் கொடியதாக கருதப்படும். குறிப்பாக இதனை கிளைசெமிக் இன்டெக்ஸ்(glycaemic index) என்ற அளவின் மூலம் கணக்கிடுவர். உடலில் இன்சுலின் அளவு குறைத்திருந்தால் அது சர்க்கரை நோயாக மாறி விடுகிறது.

ஆயுர்வேதமும் நீரிழிவும்...

ஆயுர்வேதமும் நீரிழிவும்...

ஆயுர்வேத முறை முழுக்க முழுக்க இயற்கை ரீதியான பொருட்களை கொண்டு மருத்துவம் செய்யப்படுகிறது. இது மிகவும் பிரசித்தி பெற்ற மருத்துவ முறையாக, பல்லாயிரம் ஆண்டுகளாக பின்பற்ற படுகிறது. அந்த காலத்தில் எல்லா வித நோய் பிணிகளையும் இதை வைத்துதான் குணமடைய செய்தனர். அந்த வகையில் இது நீரிழிவு நோய்க்கும் உதவுகிறது.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

இதில் உள்ள சில முக்கிய மூல பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பயன்படுகிறது. இலவங்க பொடியை உணவில் சேர்த்து கொண்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். அத்துடன், 3 ஸ்பூன் இலவங்க பொடியை 1 லிட்டர் நீரில் மிதமாக சூட்டில் 20 நிமிடம் கொதிக்க விட்டு, பிறகு குடித்து வந்தால் சர்க்கரை அளவு குறைந்து விடுமாம்.

கொய்யா இலையும், சீரகமும்

கொய்யா இலையும், சீரகமும்

பொதுவாகவே கொய்யாவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. அதே போன்று இவற்றின் இலைகளிலும் பல ஆயர்வேத தன்மை மறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நாம் உணவில் அன்றாடம் சேர்த்து கொள்ளும் இந்த சிறிய சீரக விதைகளில் பல வகையான சத்துக்கள் உள்ளன. இவை இரண்டையும் சேர்த்தால் என்னவாகும் என்பதை இனி அறிவோம்.

MOST READ: சாய்பாபாவுக்கு பிடித்த ஆரஞ்சு கலர் ஆடையை இன்னைக்கு எந்தெந்த ராசிகள் அணிய வேண்டும்?

செய்முறை :-

செய்முறை :-

முதலில் கை நிறைய கொய்யா இலைகள் மற்றும் 3 கிராம் அளவு சீரகம் ஆகியவற்றை எடுத்து கொண்டு 1 கிளாஸ் நீரில் கொதிக்க விடவும். பிறகு இந்த நீரை வடிகட்டி கொள்ளவும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் நீரிழிவு நோயிற்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

ஸ்டிவியா செடி

ஸ்டிவியா செடி

ஒரு வித இனிப்பு தன்மையை இந்த செடி கொண்டிருக்கும். இவை சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதில் முக்கிய இடத்தில இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆராய்ச்சியில் நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் இந்த தாவரத்திற்கு உள்ளதாக கண்டறிந்தனர். மேலும், இவற்றை கொண்டு மருந்துகளும் தயாரிக்கபடுகிறதாம்.

பூண்டு

பூண்டு

சர்க்கரை நோயை குணப்படுத்துவதில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. பூண்டில் அல்லிசின்(allicin) எனப்படும் முக்கிய மூல பொருள்உள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில், பூண்டை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள அதிக படியான சர்க்கரையின் அளவு குறையுமாம்.

தாமிர பாத்திரம்

தாமிர பாத்திரம்

சர்க்கரை நோயாளிகள் தினமும் குடிக்கும் நீரை தாமிர பாத்திரத்தில் குடித்து வந்தால், பல வித நோய்களும் குணமாகும். குறிப்பாக இவை சர்க்கரையின் அளவை மெல்ல மெல்ல குறைத்து விடும். எனவே, இரவு நேரத்தில் தாமிர பாத்திரத்தில் நீரை ஊற்றி, பின் காலை நேரத்தில் அந்த நீரை குடித்து வாருங்கள்.

MOST READ: எதிர்ப்பு சக்தியை பருவக்காலங்களில் இருமடங்காக்க வேண்டுமா...?அதற்கு இதை சாப்பிட்டாலே போதும்...

இஞ்சியும் தேனும்

இஞ்சியும் தேனும்

ஆயுர்வேத மருத்துவத்தில் இஞ்சிக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. அதே போன்று தேனிற்கும் முதன்மையான இடம் மருத்துவத்தில் எப்போதும் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் சிறிதளவு தேனை கலந்த இஞ்சி டீயை குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

நாவல்

நாவல்

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் உணவுகளில் இந்த நாவலும் ஒன்று. சீராக இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து விடும். மேலும், இன்சுலின் உற்பத்தியை இவை தூண்ட செய்யும். அத்துடன் சிறுநீரக கோளாறால் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் குணப்படுத்தும்.

அஞ்சறை பெட்டி

அஞ்சறை பெட்டி

நம் வீட்டு சமையல் அறையின் மிக முக்கியமான அஞ்சறை பெட்டியில் பலவித மருத்துவ குறிப்புகள் ஒளிந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் அவற்றில் உள்ள மஞ்சள், பெருங்காயம், கடுகு, கொத்தமல்லி, இலவங்கப்பட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்து கொண்டால் உடல் நலம் பெறும்.

நெல்லி

நெல்லி

நீண்ட ஆயுளை தரும் பழம் என கூறபடும் இந்த நெல்லியின் பெருமையை பல ஆயுரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒளவை பாட்டி பறைசாற்றியுள்ளார். இத்தகைய அற்புத கனியானது சர்க்கரை நோயிற்கு உதவுமாம். இதன் சாற்றை தினமும் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

MOST READ: கொடூரமான முடிவை எட்டிய ஐ.டி. அலுவலக கள்ளக் காதல்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Ayurvedic Home Remedies For Diabetes

Natural is the best and these Ayurvedic medicines for diabetes prove it yet again. They are many ayurvedic medicines to treat diabetes.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more