For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை வியாதியால் வரும் உடல் பாதிப்புகள் மற்றும் பாத புண்களை வராமல் தடுக்கும் முறை!!

சர்க்கரை வியாதியால் வரும் உடல் பாதிப்புகளும், பாத புண்களை வராமல் தடுக்க வழிகளையும் இந்த கட்டுரையில் சொலப்பட்டுள்ளது

By Ambika Saravanan
|

உலகத்தையே குத்தகைக்கு எடுத்திருக்கும் வியாதிகளில் முக்கியமானது சர்க்கரை நோய். இந்த நோய்க்கு முக்கிய காரணிகள், அமைதியற்ற வாழ்க்கை முறை, மரபணு பாதிப்பு , பதப்படுத்தப்பட்ட பாக்கேஜ்ட் உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது , உடல் பருமன் மற்றும் குறைந்த உடல் செயல்பாடுகள் மற்றும் பயிற்சிகள் போன்றவையாகும்.

நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களை அதிகம் பாதுக்காக்க வேண்டும். நீரிழிவு நோய், பாதங்களுக்கு செல்லும் நரம்பு மற்றும் இரத்த ஓட்டத்தை பாதிக்கும் அபாயம் வாய்ந்தது. 2013ல் எடுத்த ஆய்வு படி, உலகில் 383 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாதம், மாரடைப்பு, பாதத்தில் அல்சர் , கண்கள் பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்றவை நீரிழிவால் ஏற்படும் அபாயங்களாகும்.

நீரிழிவு நோயாளிகளின் பாதங்களுக்கு பல வித தொந்தரவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அவற்றை பற்றி தான் இந்த தொகுப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும மாற்றங்கள்:

சரும மாற்றங்கள்:

நீரிழிவு நோய் , சருமத்திற்கு வறட்சி மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்தும். பாதங்களின் நிறத்தை மாற்றும். இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது உடல் நீர்த்தன்மையை இழக்கும். அதிகமான க்ளுகோஸ் அளவை குறைக்க உடல், தண்ணீரை சிறுநீராக மாற்றி வெளியேற்றுவதால் இந்த நீர்சத்து குறைவு ஏற்படுகிறது.

வியர்வை உடலை ஈரப்பதத்தோடும் மென்மையாகவும் வைக்க உதவும். பாதங்களில் உள்ள நரம்புகள் நீரிழுவ நோயால் சேதம் அடைவதால், சரியான அளவு வியர்வை சேராமல் சருமம் வறண்டு விடுகிறது . வறண்ட சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள் வழியாக கிருமிகள் எளிதில் உடலுக்குள் நுழைந்து தொற்றுக்களை ஏற்படுத்துகிறது.

நரம்பு கோளாறு:

நரம்பு கோளாறு:

நரம்பு கோளாறு ஏற்பட முக்கியமான கரணம், அடிக்கடி காயம் ஏற்படுவது, வளர்சிதை மாற்றத்தில் தொந்தரவு, உடல் அதிர்ச்சி மற்றும் தொற்று . பல போதை பொருட்களும் நச்சுக்களும் நரம்பு கோளாறு ஏற்பட காரணமாகலாம்.

இவை கால் நரம்புகளில் உள்ள சின்ன சின்ன இரத்த நாளங்களை சேதமடைய செய்கின்றன. வலி, சூடு, குளிர்ச்சி போன்றவற்றை உணரும் திறனை குறைக்கின்றன. நரம்பு கோளாறு ஏற்பட வேறு கரணங்கள், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், , அதிகமான குடி பழக்கம், புற்று நோய் மற்றும் ஹச்ஐவி

தடித்த தோல்:

தடித்த தோல்:

விரல்களுக்கு அடி பாகத்தில் எலும்புகள் உள்ள பகுதியில் தோல் தடித்து உருண்டையாக காணப்படும். தோலில் அதிகம் அழுத்தம் ஏற்படுவதால், பாதத்தில் வலி உண்டாகும். இந்த தடித்த தோல் உண்டாக முக்கிய காரணம் அழுத்தம் மற்றும் உராய்வு.

 சரியான காலணிகள் :

சரியான காலணிகள் :

சரியான அளவு இல்லாத ஷூக்களை அணிவதால் கால் விரல்களுக்கு மேல் இந்த தடித்த தோல் உண்டாகலாம். அதிகமான ஓட்ட பயிற்சியினால் பாதத்தில் இந்த தடித்த தோல் உணடாகலாம் .

சதைப்பற்றில்லாத விரல்கள், சரும குறைபாடுகள் , மெலிதான தோல் போன்றவை இந்த தோல் தடிப்பு ஏற்பட காரணங்கள் ஆகும். இவை ஏற்பட்டவுடன் அலட்சியம் செய்யாமல் உடனே சிகிச்சை எடுக்க வேண்டும். இவை பாதத்தில் அல்சர் நோயை உண்டாக்கலாம்.

மோசமான இரத்த ஓட்டம்:

மோசமான இரத்த ஓட்டம்:

நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகரித்த இரத்த சர்க்கரை அளவு இருப்பதால் இரத்த நாளங்கள் சேதமடைகின்றன.பல நேரங்களில் இரத்த நாளங்களில் ஒரு வித வீக்கம் உண்டாவதால் குறிப்பிட்ட அளவு இரத்தத்தை சுற்றியிருக்கும் அணுக்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை இரத்த நாளங்களுக்கு ஏற்படுகிறது. மோசமான இரத்த ஓட்டத்தின் காரணமாக பாதங்களில் பலவித பிரச்சனைகள் தோன்றுகின்றன.

பாதங்கள் மரத்து போதல் :

பாதங்கள் மரத்து போதல் :

பாதங்கள் அடிக்கடி மரத்து போவது, சில்லென்று ஆவது, வெளிர் நீல நிறத்தில் கால்களில் தோல் தோன்றுவது, உடையக்கூடிய கால் விரல் நகங்கள், பாத வெடிப்புகள் , காயங்கள் ஆறுவதில் தாமதம் போன்றவை மோசமான இரத்த ஓட்டத்தின் அறிகுறியாகும்.

புகைபிடித்தல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலெஸ்ட்ரோல் போன்றவை மோசமான இரத்த ஓட்டம் உண்டாக காரணங்கள் ஆகும். இதனை போக்க உடற் பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி செய்வதால் கால் மற்றும் பாதத்திற்கு இரத்த ஓட்டம் செல்வது சீராகிறது.

பாதத்தில் அல்சர் :

பாதத்தில் அல்சர் :

நீரிழிவு நோயால் பாதங்கள் பாதிக்கும்போது பொதுவாக ஏற்படும் அடுத்தகட்ட நோய் பாதத்தில் அல்சர் தோன்றுவதாகும். இரத்த குழாயில் உண்டாகும் நோய், புகைபிடித்தல், நீரிழிவால் ஏற்படும் நரம்பு கோளாறு, குறைந்த இரத்த ஓட்டம் போன்றவை பாத அல்சருக்கான வாய்ப்பை அதிகம் ஏற்படுத்துகின்றன.

பாதங்களில் ஏற்படும் அதிகமான அழுத்தம் இது உண்டாவதற்கு முக்கிய காரணம் ஆகும். அல்சர் வந்தவுடன் அலட்சியம் செய்யாமல் மருந்துகள் எடுக்காவிடில், இன்னும் ஆழமாக சருமத்தில் ஊடுருவி இது பல்வேரு பாதிப்புகளை உண்டாக்குகிறது.

உறுப்பை துண்டித்தல்:

உறுப்பை துண்டித்தல்:

நீரிழிவு நோயாளிகளுக்கு ஊனம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அறுவை சிகிச்சை, மற்ற வியாதிகள், தொற்று போன்றவற்றால் ஏற்படும் காயங்கள் குணமடையாதபோது அறுவை சிகிச்சை வழியாக பாதங்கள், விரல்கள் போன்றவற்றை துண்டிக்கும் நிலை ஏற்படுகிறது. அதிகமான க்ளுகோஸ் அளவு , நீரிழிவு நோயாளிகளின் இரத்த நாளங்களை பாதிக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இவை பாதங்களில் மேலும் பல பாதிப்புகளை உண்டாக்குகிறது.

மேலே கூறிய பிரச்சனைகளில் இருந்து நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களை காத்திட வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே இயற்கை பராமரிப்பு மூலம் பாதங்களை பாதுகாத்து கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும் உறங்க செல்வதற்கு முன், உங்கள் பாதங்களை நன்றாக கவனியுங்கள். அதில் எதாவது சிறிய காயங்கள், வெட்டுக்கள், புண் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

செய்ய வேண்டியவை :

செய்ய வேண்டியவை :

காலையும் மாலையும் பாதங்களை சுத்தமாக கழுவி, ஈரம் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். விரல்களுக்கு இடையில் நன்றாக கழுவி தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

சரியான அளவு ஷூக்களை பயன்படுத்துங்கள். பாதத்தில் அல்சர் உள்ளவர்கள் அந்த நோயை அதிகரிக்கும் விதமான ஷூக்களை அணியாமல் அதற்கேற்ற விதத்தில் அணிவது நல்லது.

சரியான அளவு ஷூ அணியும்போது நடை மென்மையாகிறது. பாதங்களுக்கு ஏற்படும் அழுத்தம் குறைகிறது.

சிகிச்சைகள் :

சிகிச்சைகள் :

நீரிழிவு நோயாளிகளில் 5ல் ஒருவருக்கு பாத வலி உண்டாகிறது. அதனால் தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு சரும வறட்சி ஏற்படுவதை குறைக்க மாய்ஸ்ச்சரைசேர் பயன்படுத்துவது நல்லது. பாதங்களுக்கு கொக்கோ பட்டர் க்ரீம் பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.

நீரிழிவு, பாத நரம்புகளை பாதிப்பதால் வலியின் தாக்கத்தை உணர்வது கடினம். ஆகையால் தொடர்ந்து நடை பயிற்சி மேற்கொள்வதால் இரத்த ஓட்டம் அதிகரித்து, இந்த நிலையை சரி செய்ய முடியும்.

சுத்தமான பாதங்கள் நீரிழிவினால் உண்டாகும் பாத பிரச்சனைகளை சரி செய்யும் ஆகவே மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி பாதங்களை தூய்மையாக வைத்துக் கொள்வீர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health problems due to diabetes and Tips to prevent Diabatic Foot

Health problems due to diabetes and Tips to prevent Diabatic Foo
Desktop Bottom Promotion